படிப்பவர்களுக்கு புரிய மாட்டேங்குது!! இரயில் நிலையங்களின் பெயர்களை மாற்றும் இந்தியன் இரயில்வே!

இந்தியன் இரயில்வே (Indian Railway) நிர்வாகம் குறிப்பிட்ட சில இரயில் நிலையங்களின் பெயர்களை திருத்தம் செய்ய தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறு திருத்தம் செய்தால் எந்தெந்த இரயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்பதையும், இந்த திருத்தம் குறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

விமான சேவைகள் நம் நாட்டில் பரந்து விரிந்து இருந்தாலும், நம் மக்கள் பலரால் எளிதில் அணுகக்கூடிய மற்றும் அவர்களது பொருளாதார சூழலுக்கு ஏற்ற பொது போக்குவரத்தாக இரயில்வே விளங்குகிறது. இரயில் தண்டவாளங்கள் நாட்டின் பெரும் பகுதிகளில் விரிவடைந்து உள்ளன. அதற்கேற்ப பயன்பாட்டில் இருக்கும் இரயில்களின் எண்ணிக்கையும் அதிகம்.

railways will change stations names

மேலும், வந்தே பாரத் என்ற மேட்-இன்-இந்தியா இரயிலையும் இந்தியன் இரயில்வே நிர்வாகம் ஒவ்வொரு நகரமாக படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது இரயில்வேக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகமாக இருப்பதை காணலாம். இவ்வாறு இரயில் போக்குவரத்தை மக்களுக்கு எந்த அளவிற்கு சவுகரியமாக மாற்ற முடியுமோ அதற்கான வேலைகள் அனைத்தையும் இந்திய இரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சில இரயில் நிலையங்களின் பெயர்களை சற்று திருத்தியமைக்க மத்திய இரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதாவது, ஒரு சில இரயில் நிலையங்களை பயணிகள் அடையாளம் காண்பதற்கு கடினமாக உள்ளதால், அத்தகைய இரயில் நிலையங்களின் பெயர்களுடன், அருகில் பிரபலமானதாக இருக்கும் நகரம்/ஊரின் பெயரை இணைக்க இந்தியன் இரயில்வே திட்டமிட்டுள்ளதாம்.

railways will change stations names

ஆதலால், பெரிய நகரங்களின் பெயர்கள் மற்றும் பிரபலமான ஊர்களின் பெயர்கள் அவற்றின் இரயில் நிலையங்களில் மாற்றப்பட போவதில்லை. பலரால் அறியப்படாத/ பிரபலமில்லாத நகரம் & ஊர்களின் பெயர்களை மட்டுமே மாற்ற மத்திய இரயில்வே துறை முடிவெடுத்துள்ளது. உதாரணத்திற்கு, சில விரைவு இரயில்கள் மட்டுமே நின்று செல்வதால் கும்மிடிப்பூண்டி இரயில் நிலையம் பெரியதாக பிரபலமானது இல்லை.

இருப்பினும், கும்மிடிப்பூண்டிக்கு செல்ல நினைப்போர் இதன் இரயில் நிலையம் எங்கு உள்ளது என்பதை உடனடியாக அறிந்து கொள்ள இயலாது. இதனால் சென்னை கும்மிடிப்பூண்டி என மாற்றினால், கும்மிடிப்பூண்டி சென்னைக்கு அருகே உள்ளது என பயணிகளால் புரிந்து கொள்ள இயலும். அதுமட்டுமின்றி, இது பயணிகளிடையே ஏற்படும் குழப்பத்தையும் தவிர்க்கும் என இரயில்வே துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.

railways will change stations names

அதாவது, கும்மிடிப்பூண்டி என்ற பெயரில் மற்றொரு மாநிலத்தில் அல்லது நகரத்தில் இரயில் நிலையம் இருக்கலாம். இந்த வகையில், இரயில் நிலையங்களின் பெயர்களை மாற்றிய பின்பு, அந்த பெயர்களை அதிகாரப்பூர்வ இந்தியன் இரயில்வே இணையத்தள பக்கம் மற்றும் மொபைல் செயலியிலும் மாற்றியமைக்க மத்திய இரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி முதற்கட்டமாக 175 நகரங்களில் உள்ள 725 இரயில் நிலையங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: செய்தியின் ஆரம்பத்தில் கூறியதை போன்று, முற்றிலும் பிரபலமில்லாத இரயில் நிலையங்களின் பெயர்களை மட்டுமே மாற்ற இந்தியன் இரயில்வே திட்டமிட்டுள்ளது. ஓரளவிற்கு பிரபலமான பெயர்களாக இருந்தால் மாற்றப்படாது என்றே தெரிகிறது. இரயில்வேயின் இந்த நடவடிக்கை முக்கியமாக புது புது இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 22, 2023, 21:52 [IST]
English summary
Indian railways will change small railway stations names
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X