வெளிநாட்டு ரயில்களுக்கு போட்டியாக சென்னையில் தயாராகும் புதிய ரயில்கள்! அடேங்கப்பா இவ்வளவு வசதிகள் இருக்கா?

இந்தியாவில் ரயில் பெட்டிகளை எல்லாம் வந்தே பாரத் பெட்டிகளாக மாற்றும் திட்டத்தின் படி புதிய ரயில்களுக்கான ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் என்னென்ன வசதிகள் இருக்கிறது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

வெளிநாட்டு ரயில்களுக்குப் போட்டியாகச் சென்னையில் தயாராகும் புதிய ரயில்கள். . . அடேங்கப்பா இதில் இவ்வளவு வசதிகள் இருக்கா ?

இந்தியாவில் ரயில் பெட்டிகள் சென்னை ஐசிஎஃப் மற்றும் பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது. இங்குத் தயாராகும் ரயில் பெட்டிகள் தான் நாடு முழுவதும் உள்ள ரயில்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு Train 18 என்ற ரயில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டது.

வெளிநாட்டு ரயில்களுக்குப் போட்டியாகச் சென்னையில் தயாராகும் புதிய ரயில்கள். . . அடேங்கப்பா இதில் இவ்வளவு வசதிகள் இருக்கா ?

பார்ப்பதற்கு வெளிநாடுகளில் உள்ள புல்லட் ரயில்கள் போன்ற தோற்றத்திலேயே இருக்கும் இந்த ரயில் பெட்டிகளில் தற்போது உள்ள ரயில் பெட்டிகளை விட அதிகமான வசதிகள் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்திருக்கிறது. தற்போது இந்தியாவில் உள்ள ரயில்வே கட்டுமான அமைப்பிலேயே இந்த ரயில் செயல்படும் படி கட்டமைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ரயில்களுக்குப் போட்டியாகச் சென்னையில் தயாராகும் புதிய ரயில்கள். . . அடேங்கப்பா இதில் இவ்வளவு வசதிகள் இருக்கா ?

அதே நேரத்தில் தற்போது உள்ள ரயில்களின் வேகத்தை விட இதன் வேகம் அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த ரயில்களுக்கு இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில்களை தற்போது ஏற்கனவே இயங்கி வரும் ரயில்களுக்கு மாற்றாகக் கொண்டு வர இந்திய ரயில்வே திட்டமிட்டு வருகிறது. அதனால் தற்போது ஆயிரக்கணக்கான ரயில்கள் ஓடுவதால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

வெளிநாட்டு ரயில்களுக்குப் போட்டியாகச் சென்னையில் தயாராகும் புதிய ரயில்கள். . . அடேங்கப்பா இதில் இவ்வளவு வசதிகள் இருக்கா ?

அதனால் படிப்படியாக இதை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக ஐசிஎஃப் இடம் இந்திய ரயில்வே நிர்வாகம் 200 சிலிப்பர் கிளாஸ் ரயில்களையும் 100 சேர் கார் ரயில்களையும் இந்திய ரயில்வே நிர்வாகம் ஆர்டர் செய்துள்ளது. இந்த ரயில்கள் எல்லாம் தயாராகி டெலிவரியானவுடன் இந்த ரயில்கள் எல்லாம் படிப்படியாக தற்போது இயங்கி வரும் ரயில்களுக்குப் பதிலாக மாற்றம் செய்யப்படும்.

வெளிநாட்டு ரயில்களுக்குப் போட்டியாகச் சென்னையில் தயாராகும் புதிய ரயில்கள். . . அடேங்கப்பா இதில் இவ்வளவு வசதிகள் இருக்கா ?

புதிதாக தயார் செய்யப்படும் ரயில்களில் மொத்தம் 16 பெட்டிகள், 20 பெட்டிகள், 24 பெட்டிகள் என மூன்று விதமான நீளங்களில் ரயில்கள் வருகிறது. இதில் 16 பெட்டியில் 11 3 டயர் ஏசி பெட்டிகளும், 20 பெட்டி ரயிலில் 15 பெட்டிகள் ஏசி 3 டயர் பெட்டிகளும், 24 பெட்டி ரயில்களில் 19 பெட்டிகள் ஏசி 3 டயர் பெட்டிகளும் இணைக்கப்படும். இது போக 4 ஏசி 2 டயர் பெட்டிகள் மற்றும் 1 ஏசி முதல் வகுப்பு பெட்டிகளும் அத்தனை ரயில்களிலும் இணைக்கப்படுகிறது.

வெளிநாட்டு ரயில்களுக்குப் போட்டியாகச் சென்னையில் தயாராகும் புதிய ரயில்கள். . . அடேங்கப்பா இதில் இவ்வளவு வசதிகள் இருக்கா ?

இந்த ரயிலில் ஏசியில்லாத பெட்டிகள் இருக்காது. ரயில் முழுவதும் ஏசி பெட்டிகள் தான் இருக்கும். இந்த ரயில் அடுத்த 35 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இயங்கும் திறன் உடன் தயாரிக்கப்படுகிறது. இதில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை உடைய ரயில்கள் நீண்ட தூரப் பயணத்திற்கும். சேர்கார் பெட்டிகளைக் கொண்ட ரயில்கள் குறைந்த தூரப் பகல் நேரப் பயணத்திற்கும் பயன்படுத்தப்படும்.

வெளிநாட்டு ரயில்களுக்குப் போட்டியாகச் சென்னையில் தயாராகும் புதிய ரயில்கள். . . அடேங்கப்பா இதில் இவ்வளவு வசதிகள் இருக்கா ?

இந்த ரயில்களில் இன்ஜின் தனியாக ரயில் பெட்டிகள் தனியாக இருக்காது. ரயிலில் இருபுறங்களிலிருந்தும் ரயிலை இறக்கும் முறையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ளது போல ரயிலில் இன்ஜினை மாற்ற ரயிலிருந்து இன்ஜினை கழட்டி மறுபுறம் மாட்டி ரயிலை இழுத்துச் செல்ல வேண்டிய நிலை இருக்காது. ரயிலை எந்தப்பக்கமிருந்து வேண்டுமானாலும் இயக்கலாம்.

வெளிநாட்டு ரயில்களுக்குப் போட்டியாகச் சென்னையில் தயாராகும் புதிய ரயில்கள். . . அடேங்கப்பா இதில் இவ்வளவு வசதிகள் இருக்கா ?

இது மட்டுமல்ல ரயில் உட்புற கட்டமைப்பிலும் பயணிகளுக்கான பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. படுக்கை வசதி கொண்ட ரயில்களில் ஒவ்வொரு படுக்கையிலும் ரீடிங் லைட்கள் கொடுக்கப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் பாட்டில் ஹோல்டர்கள், ஒவ்வொரு சீட்டிற்கு தனித்தனியாக யூஎஸ்பி சார்ஜர்கள், லேப்டாப் மற்றும் மொபைலை சார்ஜ் செய்யும் சாக்கெட்கள், எல்லாம் ஒவ்வொ தனித்தனி சீட்டிற்கும் வழங்கப்படுகிறது.

வெளிநாட்டு ரயில்களுக்குப் போட்டியாகச் சென்னையில் தயாராகும் புதிய ரயில்கள். . . அடேங்கப்பா இதில் இவ்வளவு வசதிகள் இருக்கா ?

இது மட்டுமல்ல 3 டயர் ஏசி பெட்டிகளில் 4 பயணிகளுக்கு ஒரு ஸ்னாக்ஸ் டேபிளும், 3 டயர் ஏசியில் 3 பயணிகளுக்கு ஒரு ஸ்நாக்ஸ் டேபிளும், முதல் வகுப்பு ஏசி பெட்டியில் ஒவ்வொரு பயணிக்கும் தனித்தனி ஸ்நாக் டேபிளும் வழங்கப்படுகிறது. இதுபோக முதல் ஏசி வகுப்பில் ஒவ்வொரு கேபினிற்கும் ஒரு எல்சிடி டிஸ்பிளே வழங்கப்படுகிறது. அதில் பயணிகள் தங்கள் லேப்டாப்பை கனெக்ட் செய்யது பயன்படுத்த முடியும்.

வெளிநாட்டு ரயில்களுக்குப் போட்டியாகச் சென்னையில் தயாராகும் புதிய ரயில்கள். . . அடேங்கப்பா இதில் இவ்வளவு வசதிகள் இருக்கா ?

இதுபோக பயணிகளின் சுகாதாரம் பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவரை உயர் ரக வசதிகள் வழங்கப்படுகிறது. டாய்லெட்களில் ஆட்டோமெட்டட் பிளஷ் செய்யும் வசதி, தண்ணீர் டேப் உடன் கூடிய வாஷ்பேசின், டாய்லெட்டிலிருந்து துர்நாற்றத்தை வெளியேற்றும் பேன் வசதி, ஆகியன உள்ளது.

வெளிநாட்டு ரயில்களுக்குப் போட்டியாகச் சென்னையில் தயாராகும் புதிய ரயில்கள். . . அடேங்கப்பா இதில் இவ்வளவு வசதிகள் இருக்கா ?

எல்லா கோச்களிலும் ஆட்டோமெட்டிக் கதவுகள் இருக்கிறது. மெட்ரோ ரயில்களைப் போல இந்த ரயிலிலும் ரயில் பணிக்கும் போது கதவின் அருகே நிற்க முடியாது. இது மட்டுமல்ல எல்லா கோட்ச்சகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். இதனால் ரயிலில் திருட்டு மற்றும் சட்டவிரோதமான சம்பவங்கள் எதுவும் நடந்தால் உடனடியாக கண்காணிக்க முடியும்.

வெளிநாட்டு ரயில்களுக்குப் போட்டியாகச் சென்னையில் தயாராகும் புதிய ரயில்கள். . . அடேங்கப்பா இதில் இவ்வளவு வசதிகள் இருக்கா ?

இது போக ஜிபிஎஸ் பேஸ்டு பயணிகளுக்கான தகவல் கொடுக்கும் சிஸ்டம் இந்த ரயில்களில் இருக்கும். அதாவது ரயில் தற்போது ரூட்டில் எந்தஇடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை லைவ்வாக டிராக் செய்ய முடியும். இது மட்டுமல்லாமல் வைஃபை பேஸ்டு இன்ஃபோடெயிண்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும். அதன் பட ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு வைஃபை இணைப்பு இருக்கும்.

வெளிநாட்டு ரயில்களுக்குப் போட்டியாகச் சென்னையில் தயாராகும் புதிய ரயில்கள். . . அடேங்கப்பா இதில் இவ்வளவு வசதிகள் இருக்கா ?

அந்த வைஃபை இணைப்பில் உங்கள் லேப்டாப்பையோ அல்லது டிவியையோ கனெக்ட் செய்துவிட்டால் அதில் உள்ள வீடியோக்கள் படங்கள், தகவல்கள் எனப் பல விஷயங்களை வழங்க முடியும். ஒவ்வொரு பெட்டியிலும் 2 டிஜிட்டல் டிஸ்பிளே போர்டுகளும், 2 எல்இடி டிஸ்பிளே போர்டுகளும் இருக்கும். அதில் ரயில் பயணம் குறித்த தகவல்கள் காட்டப்படும்.

வெளிநாட்டு ரயில்களுக்குப் போட்டியாகச் சென்னையில் தயாராகும் புதிய ரயில்கள். . . அடேங்கப்பா இதில் இவ்வளவு வசதிகள் இருக்கா ?

இந்த ரயிலில் பாதுகாப்பிற்காக கவாச் ஆட்டோமெட்டிக் ரயில் பாதுகாப்பு சிஸ்டம் பொருத்தப்படுகிறது. அதாவது இந்த ரயிலை ஓட்டுபவர் சரியான நேரத்தை பிரேக் பிடிக்கவில்லை என்றாலும் இந்த கவாச் சிஸ்டம் தானாக பிரேக்கை பிடித்துக்கொள்ளும், வசதி இந்த ரயிலில் இருக்கிறது. இதனால் ரயில் விபத்துக்கள் தவிர்க்கப்படும். இது போகக் கூடுதல் தகவலாக பஞ்சாபில் தயாராகும் LHB பெட்டிகளிலும் சில மாற்றங்களைச் செய்யத் திட்டமிடப்பட்டு வருகிறது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

Article Published On: Thursday, June 16, 2022, 13:06 [IST]
English summary
Indian railways will roll out new vande bahrat train with new amenities
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+