ரயில்களில் இந்த ஏசி பெட்டில இனிமே பயணிக்கவே முடியாது... இதை எல்லாம் நிப்பாட்ட போறாங்க...

இந்திய ரயில்வே நிர்வாகம் ரயில்களில் ஏசி 3E பெட்டியை இனி சேவையிலிருந்து நீக்குவதாகத் தெரிவித்துள்ளது. 14 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே நிர்வாகம் தனது ஏசி பெட்டியைப் பொருத்தவரை மொத்தம் 3 விதமான பெட்டிகளைச் சேவையில் வைத்துள்ளது. 3ம் வகுப்பு ஏசி, 2ம் வகுப்பு ஏசி, முதல் வகுப்பு ஏசி, ஆகிய பெட்டிகள் இருக்கிறது.

ரயில்களில் இந்த ஏசி பெட்டில இனிமே பயணிக்கவே முடியாது... இதை எல்லாம் நிப்பாட்ட போறாங்க...

இவை பெரும்பாலும் எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட், போன்ற ரயில்களில் இணைக்கப்படும்.இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு புதியதாக ஒரு ஏசி பெட்டியை அறிமுகப்படுத்தியது. எகனாமிக் 3ம் வகுப்ப ஏசி (3E) என்ற பெயரில் இந்த பெட்டியை அறிமுகப்படுத்தியது. அதன்படி இரவு நேரம் மட்டும் பயணிக்கும் ரயில்களில் இந்த பெட்டிகள் இணைக்கப்பட்டன. இதில் சைடு பெர்த் பகுதியிலும் 3 பெர்த் வசதியைக் கொடுத்தது.

பொதுவாக சைடு பகுதியில் 2 பெர்த்கள் மட்டுமே வழங்கப்படும். அதை 3 ஆக மாற்றுவதன் மூலம் அதிகமாகப் பயணிகளை ரயிலில் ஏற்ற முடியும். இதனால் குறைந்த விலையில் ஏசி டிக்கெட்களை வழங்க முடியும் என்பதால் இந்த எகனாமிக் ஏசி பெட்டிகளைக் கொண்டு வந்தது. இதில் 3ம் வகுப்பு ஏசியை விட விலை 6-7 சதவீதம் குறைவாக இருந்தது.

ஐஆர்சிடிசி இந்த பெட்டிக்கான தனி கேட்டகிரியையே உருவாக்கி அதில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும் வசதியைக் கொண்டுவந்தது. இப்படியாக இந்தியாவில் மொத்தம் 463 கோச்கள் எகனாமிக் 3ம் வகுப்பு ஏசி பிரிவின் கீழ் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த ஏசி பெட்டிகள் இணைக்கப்பட ரயில்களில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

சௌகரியத்திற்குப் பதிலாகப் பயணிகள் அசௌகரியத்தையே அடைந்தனர். டிக்கெட் விலையும் வெறும் 6-7 சதவீதம் மட்டுமே குறைவாக இருந்ததால் பலர் இந்த எகனாமிக் ஏசி வகுப்பை விரும்பவில்லை மாறாக சாதாரண 3ம் வகுப்பு ஏசி பெட்டியிலேயே பயணிக்க விரும்பினர். இதையடுத்து ரயில்வே நிர்வாகம் மொத்தமாக 3ம் வகுப்பு எகனாமிக் ஏசி பெட்டியை இனி சேவையிலிருந்து நீக்கவும், தற்போது எகனாமிக் ஏசி பெட்டிகளாக இருப்பதைச் சாதாரண 3ம் வகுப்பு ஏசி பெட்டிகளாக மாற்ற முடிவு செய்துள்ளனர்.

இனி இந்தியாவில் எந்த ரயிலிலும் 3ம் வகுப்பு எகனாமிக் ஏசி பெட்டியைக் காண முடியாது. ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்ததில் இது பெரும் தோல்வியடைந்த ஐடியாவாக இருக்கிறது. இந்த திட்டம் தோல்வியடைந்ததற்கு இதன் விலையே முக்கிய காரணம் என ரயில் பயணிகள் பலர் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட ஏசி பெட்டியின் விலையிலேயே இந்த பெட்டி இருப்பதால் மக்களுக்கு இந்த ரயிலில் பயணிக்க மோகமில்லை.

இதுவே சிலீப்பர் வகுப்பிற்கும் ஏசி வகுப்பிற்கும் இடையிலான ஒரு விலையில் இருந்தால் சிலீப்பர் வகுப்பில் டிக்கெட் புக் செய்பவர்கள் ஒரு மாற்றம் வேண்டும் என நினைத்து இந்த பெட்டியில் டிக்கெட் புக் செய்ய அதிகமான வாய்ப்பு இருக்கிறது. இந்த ஏசி பெட்டியின் தோல்விக்கு அதன் டிக்கெட் விலையே காரணம் எனச் சொல்லப்படுகிறது. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian railways withdraw Economic Ac coaches from service
Story first published: Tuesday, November 22, 2022, 10:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X