பாட்டு பாடுறவரு வாங்கிய காரோட விலையை கேட்டு தலையே சுத்துது.. நாமலும் ஒரு மைக்கை தூக்கிட்டு போயிடலாமா!!
பாட்டு பாடியே இளைஞர் ஒருவர் இந்தியாவில் மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார் மாடலை வாங்கி இருக்கின்றார். இந்தியாவைச் சேர்ந்தவர் பிரபல ராப் பாடகர் விவியன் வில்சன் ஃபெர்னான்டஸ். இவரே அந்த விலை உயர்ந்த ஆடம்பர காரை வாங்கிய பாடகர் ஆவார். டிவைன் என்கிற பெயரிலும் இவர் ஃபேன்கள் மத்தியில் அறியப்படுகின்றார். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 53 ஏஎம்ஜி கூபே (Mercedes-Benz GLE 53 AMG Coupe) சொகுசு கார் மாடலையே அவர் வாங்கி இருக்கின்றார்.
இது ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த காரையே விவியன் வில்சன் சமீபத்தில் டெலிவரி பெற்றிருக்கின்றார். இவர் டெலிவரி பெறும் வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. கேக் வெட்டி கொண்டாட்டத்துடன் இந்த காரை அவர் டெலிவரி பெற்றிருக்கின்றார்.

தொடர்ந்து இந்த காருடன் நிற்கும் படங்களை பாடகர் தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலையே ரூ. 2.2 கோடி ஆகும். இத்தகைய ஆடம்பர காரையே பாடகர் தற்போது வாங்கி இருக்கின்றார்.
இந்த அதீத விலைக்கு ஏற்பவே மிக அதிக தொழில்நுட்ப அம்சங்களை தாங்கிய கார் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 53 ஏஎம்ஜி கூபே காட்சியளிக்கின்றது. அந்தவகையில், இந்த காரில் இடம் பெற்றிருக்கும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக திரைகள் இருக்கின்றன. 12.3 அங்குல அளவிலான திரை இரண்டு இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இரண்டில் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராகவும் செயல்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதைத்தொடர்ந்து, ரைடு அனுபவத்தை சுவாரஷ்யமான மாற்றுவதற்கான அம்சங்களும் இந்த காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், தட்டையான அடிப்பக்கத்தைக் கொண்ட ஸ்டியரிங் வீல், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெடல்கள் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 429 பிஎச்பி ஆற்றலையும், 560 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் அனைத்து வீல் இயக்கம் திறன் கொண்ட சொகுசு கார் மாடல் ஆகும்.
ஆகையால், சொகுசான டிராவல் அனுபவம் மட்டுமல்ல, அதீத இயக்க திறனையும் இந்த காரில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். இதேபோல், இது வெறும் 5.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இத்தகைய காரையே ராப் பாடகர் தற்போது வாங்கி இருக்கின்றார். அதிக ஆற்றல் மற்றும் அதிக சொகுசு அம்சங்களுக்காக மட்டுமல்ல அதிக கவர்ச்சியான தோற்றத்தை இந்த கார் மாடல் கொண்டிருக்கின்ற காரணத்தினாலும் அழர் வாங்கி இருக்கின்றார். ஆமாங்க, பென்ஸ் நிறுவனத்தின் மிகவும் அழகிய தயாரிப்புகளில் ஒன்றாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 53 ஏஎம்ஜி கூபே காட்சியளிக்கின்றது. இதனால்தான் இந்திய பணக்காரர்கள் மத்தியில் இந்த காருக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஆடம்பர கார் மடால்களில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 53 ஏஎம்ஜி கூபே-வும் ஒன்றாகும். இந்த காரை சுஷ்மிதா சென், சைனா நேவால் மற்றும் ரேகா போன்ற நடிகர்கள் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








