இந்தியாவில் உள்ள சாலைகள் இந்த அளவுக்கு மாற போகுதா? வெளியான தகவலால் ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்!
இந்தியாவில் உள்ள சாலைகள் வேற லெவலுக்கு மாறவுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள சாலைகள் அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவில் உள்ள சாலைகளுக்கு இணையாக மாறும் என ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மேலும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள சாலைகள் அடுத்த 3 ஆண்டுகளில் மேற்கு ஐரோப்பாவின் சாலைகளுக்கு இணையாக மாறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் 25 தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவின்போது அமைச்சர் நிதின் கட்காரி இதனை கூறினார். இந்த திட்ட பணிகளுக்கு 11,721 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 259 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்படவுள்ளன.

இந்த நெடுஞ்சாலைகள் மற்றும் சுரங்க பாதைகள் அமெரிக்காவின் தரத்திற்கு இணையாக இருக்கும் எனவும், இதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா மேம்படும் எனவும் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இந்த புதிய சாலைகள் மூலமாக ஜம்முவில் இருந்து ஸ்ரீ நகருக்கு வெறும் 4 மணி நேரத்திலும், டெல்லியில் இருந்து ஸ்ரீ நகருக்கு வெறும் 8 மணி நேரத்திலும் பயணம் செய்ய முடியும்.

மேலும் மற்ற மாநிலங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகள் புதுப்பிக்கப்படும் எனவும், இதன் காரணமாக முக்கிய நகரங்களுக்கு இடையேயான பயண தூரம் குறையும் எனவும் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். சாலைகள் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்தும் அமைச்சர் நிதின் கட்காரி தொடர்ந்து பேசி வருகிறார்.

இதன்படி எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அடுத்த ஒரு சில ஆண்டுகளில் பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு இணையாக குறையும் என அமைச்சர் நிதின் கட்காரி தொடர்ந்து கூறி வருகிறார். இது உண்மையில் நடந்தால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஏனெனில் தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக உள்ளது.

இதன் காரணமாகதான் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு பலர் தயங்குகின்றனர். ஆனால் பெட்ரோல் வாகனங்கள் அளவிற்கு விலை குறையும் என்றால், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு பலர் ஆர்வத்துடன் முன் வருவார்கள். இது இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும் விஷயமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தற்போதைய நிலையில் காற்று மாசுபாடு பிரச்னை மிகவும் அதிகமாக உள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. எனவே அங்கு மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், காற்று மாசுபாடு பிரச்னை ஓரளவிற்கு குறையும்.

எனவேதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்களும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர். விலை குறைந்தால் இந்திய சாலைகளில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் வாகனங்களை காண முடியும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








