யாருக்கும் தெரியாமல் பைக்கில் ஒளிந்திருந்த அரக்கன்... மெக்கானிக் கடையில் இதுக்கு எல்லாம் ஆட்கள் இருக்காங்களா?

மோட்டார் வாகனங்களை பயன்படுத்தும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களுள் ஒன்று, வாகனத்தில் ஏதேனும் உயிரினம் ஒளிந்துள்ளதா என்பதை அறிவது ஆகும். ஏனெனில், பொதுவாகவே மோட்டார் வாகனங்கள் வெப்பத்தை வெளியிடக்கூடியவை ஆகும். நீண்ட தொலைவிற்கு ஓட்டினால் அந்த வாகனத்தின் என்ஜின் நீண்ட நேரத்திற்கு சூடாக இருப்பதை உணர முடியும்.

இந்த வெப்பம் தான் ஒரு சில உயிரினங்களுக்கு சில நேரங்களில் அடைக்கலமாக மாறுகிறது. அந்த சில உயிரினங்களுள் முக்கியமானது, பாம்பு (Snake) ஆகும். பெரும்பாலான பாம்புகள் பொதுவாகவே வெப்பமான இடத்தை விரும்பக்கூடியவை ஆகும். ஈரத்தில் இருந்து ஒதுங்கி கதகதப்பான இடங்களில் ஓய்வெடுப்பதற்கும், முட்டை இடுவதற்கும் தான் அதிக பாம்புகள் விரும்புகின்றன.

snake under bike fuel tank

குறிப்பாக, மழைக்காலங்களிலும், மலைப்பிரதேச பகுதிகளிலும் மனிதன்-பாம்பு சந்திப்புகளை அதிகம் பார்க்க முடியும். வாகனங்களில் பாம்பு நுழைந்தது கூட தெரியாமல் நீண்ட தொலைவிற்கு அதே வாகனத்தில் பயணித்தவர்களை இதற்குமுன் சிலமுறை பார்த்துள்ளோம். அந்த வரிசையில், தற்போது மத்திய பிரதேசம் (Madhya Pradesh) மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ 'பத்ரிகா மத்திய பிரதேசம்' என்கிற யூடியூப் (Youtube) சேனலில் வெளியிடப்பட்டு உள்ளது.

அது என்னவென்றால், மத்திய பிரதேசத்தின் சாகர் பகுதியில் கல்லூரியில் இளங்கலை 2ஆம் ஆண்டு படித்துவரும் இளைஞர் ஒருவரது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக்கில் மிகவும் விஷத்தன்மை கொண்ட பாம்பு புகுந்துள்ளது. இது தெரியாமல் அவரும் இரண்டு மணிநேரத்திற்கு பல கிமீ தொலைவிற்கு பைக்கை ஓட்டி உள்ளார்.

snake under bike fuel tank

பைக்கின் பெட்ரோல் டேங்கிற்கு அடியில் உடலை நன்கு சுருட்டி தஞ்சம் அடைந்து இருந்ததால் உடனடியாக அவரால் பாம்பை அடையாளம் காண முடியவில்லை. எப்போது இதை அவர் கண்டுப்பிடித்தார் என்றால், பயணத்தின்போது பைக்கில் சிறிய டெக்னிக்கல் பிரச்சனை இருப்பதை இந்த இளைஞர் கவனித்துள்ளார். இதனையடுத்து, பைக்கை அருகில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்ற பின்பே பைக்கில் ஒரு அரக்கன் ஒளிந்து இருப்பதை கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, முதலாவதாக பைக்கின் இருக்கை அகற்றப்பட்டு உள்ளது. பின்னர், பைக்கின் சேசிஸ் உடன் பெட்ரோல் டேங்க் இணைக்கப்பட்ட பகுதி கழற்றப்பட்டது. பெட்ரோல் டேங்கிற்கு அடியில் தான் பாம்பு இருந்ததால், தூரத்தில் இருந்து பெரிய கம்பியை கொண்டு பெட்ரோல் டேங்கை பாதுகாப்பாக கழற்றி உள்ளனர். பெட்ரோல் டேங்க் சற்று நகர்த்தப்பட்ட பின்பு அதற்கும், ஹேண்டில்பாருக்கும் இடையே மிகவும் விஷத்தன்மை கொண்ட இந்திய வகை பாம்பு ஒளிந்திருப்பதை தெளிவாக காண முடிந்தது.

snake under bike fuel tank

முதலில் ஒரு குச்சியை வைத்து பாம்பை அங்கிருந்து நகர்த்த முயன்றனர். அதேநேரம் ஒருவர் பெட்ரோல் டேங்கை மேலும் நகர்த்தி பாம்பை விரட்ட உதவினார். ஆனால், இந்த உதவிகள் எல்லாம் பெரியதாக உதவவில்லை. இளைஞர் ஒருவர் எந்தவொரு பிரத்யேக உபகரணங்களும் இன்றி எளிதாக ஒரு கம்பை வைத்து பாம்பின் தலையை பிடித்து, அதனை அங்கிருந்து இழுத்து வெளியேற்றினார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சம்பவத்தில் நல்ல வேளையாக பாம்பு பைக்கின் உரிமையாளரையோ அல்லது மற்றவர்களையோ எதையும் செய்யவில்லை. பைக் மெக்கானிக் (Bike Mechanic) கடையில் பாம்பு பிடிக்க தெரிந்தவர் ஒருவர் இருந்ததால் பாம்பை எளிதாக பிடித்துவிட்டனர். இல்லையேல், பாம்பை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்று அதனை கோவப்படுத்தி நிலைமையை இன்னும் மோசமாக்கி இருப்பர்.

More from DriveSpark

Article Published On: Friday, August 1, 2025, 5:00 [IST]
English summary
Indian russells viper snake lodged under royal enfield classic 350 bike fuel tank
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X