நேரா குடும்பத்துடன் ஷோரூமுக்கு போயிட்டாரு! 12 வருடங்களுக்கு முன் இந்தியாவையே கலக்கிக் கொண்டு இருந்தவர்!!
மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX), இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட புதிய மஹிந்திரா வாகனம். ஏற்கனவே விற்பனையில் இருந்த 3-கதவு மஹிந்திரா தார் வாகனத்தின் 5-கதவு வெர்சனாக தார் ராக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தின் போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரை பலரும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருகின்றனர். அந்த வகையில், 2012 இலண்டன் ஒலிம்பிக்கில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனையாக கலந்துக் கொண்டவர் தனது புத்தம் புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை டெலிவிரி பெற்றுள்ளார்.
இந்தியாவில் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில், அந்த அளவிற்கு நம் நாட்டில் நிறைய மலைப்பாதைகளும், கரடு முரடான சாலைகளும் உள்ளன. ஆரம்பத்தில் மாருதி சுஸுகி ஜிப்ஸி வாகனத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருவதை பார்த்து, மஹிந்திரா அதன் தார் வாகனத்தை அறிமுகம் செய்தது.

ஜிப்ஸியின் விற்பனை நிறுத்தப்பட்ட போதிலும், மஹிந்திரா தார் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டது. 2ஆம் தலைமுறை மஹிந்திரா தார் வாகனம் 2020ஆம் ஆண்டில் கொரோனா பரவல் சமயத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு போட்டியாக, மாருதி சுஸுகி நிறுவனம் ஜப்பானில் விற்பனையில் உள்ள ஜிம்னியை இந்தியாவிற்கு கொண்டுவந்த போதிலும் தாரின் ஆதிக்கத்தை முறியடிக்க முடியவில்லை.
தார் வாகனத்தின் பலத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக தார் ராக்ஸ் 5-கதவு வாகனம் இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தார் வாகனத்தை வாங்க திட்டமிட்டு வந்தவர்கள் அனைவரும் அப்படியே தார் ராக்ஸ் வாகனத்தை வாங்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், தற்போது தார் ராக்ஸை வாங்கியிருப்பவர், ஒலிம்பியன் ஷூட்டரான ஷகுன் சவுத்ரி (Shagun Chowdhary).

2012ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் இலண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக கலந்துக் கொண்டார். தனது அனைத்து போட்டிகளிலும் கடுமையாக போராடிய ஷகுன் சவுத்ரி கடைசியில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் தோல்வியுற்று வருத்தத்துடன் இந்தியா திரும்பினார். இந்தியாவுக்காக தங்கப் பதக்கத்தை பெற்று தர வேண்டும் என்கிற இவரது கனவு, கனவாகவே போய்விட்டது.
இருப்பினும், இப்போதும் இந்திய ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் ஷகுன் சவுத்ரி புதியதாக மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை வாங்கியுள்ளார். குடும்பத்துடன் இவர் ஷோரூமுக்கு சென்று காரை டெலிவிரி பெறும் படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளன. வாகனத்தை ஓட்டி செல்வதற்கு முன்பாக, ஷோரூமில் வைத்து கேக் வெட்டி குடும்பத்துடன் ஷகுன் சவுத்ரி கொண்டாடியுள்ளார்.

ஷகுன் சவுத்ரி வாங்கியிருப்பது பேட்டில்ஷிப் கிரே நிறத்திலான மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனம் ஆகும். ஷகுன் சவுத்ரி மட்டுமல்ல, ஏற்கனவே கூறியதுபோல் கடந்த சில மாதங்களில் பலர் தார் ராக்ஸ் வாகனத்தை வாங்கியுள்ளனர். சமீபத்தில் கூட, நடிகர் சல்மான்கானின் பாதுகாவலர் ஒருவர் தனது மகனுக்கு வெள்ளை நிறத்திலான தார் ராக்ஸ் வாகனத்தை பரிசளித்து இருந்தார்.
இத்தகைய மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் தார் ராக்ஸ் வாகனத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.12.99 லட்சத்தில் இருந்து ரூ.22.49 லட்சம் வரையில் உள்ளன. எல்இடி ஹெட்லைட்கள் & டெயில்லைட்கள் மற்றும் அளவில் பெரியதான 19-இன்ச் அலாய் சக்கரங்களுடன் உருவாக்கப்படும் தார் ராக்ஸ் வாகனத்தை 2.0 லிட்டர் டிஜிடிஐ என்ஜின் அல்லது 2.2 லிட்டர் சிஆர்டிஐ என்ஜின் உடன் வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 3-கதவு மஹிந்திரா தாரில் கதவுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும் நிறைய பேர் அதனை வாங்கினர். 5-கதவு தார் ராக்ஸ் வாகனத்தில் அந்த குறையும் இல்லாததால் பலர் போட்டி போட்டு இதனை வாங்கி வருகின்றனர். அந்த வகையில், ஒலிம்பிக் போட்டியாளர் ஷகுன் சவுத்ரி இந்த வாகனத்தை வாங்கியிருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. அவரது திறமைகளுக்கு ஏற்ற வாகனம் இதுவாகும்.
Source: js4wheel motors


Click it and Unblock the Notifications









