பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!

பிரபல இந்திய பாடகர் ஒருவர் புதியதாக ஜாவா பெராக் பாப்பர் (Jawa Perak Bobber) மோட்டார்சைக்கிளை வாங்கி, ஷோரூமில் இருந்து வீட்டிற்கு ஓட்டி சென்றுள்ளார். யார் இந்த பிரபல பாடகர் என்பதையும், இவர் வாங்கியுள்ள ஜாவா பைக்கை பற்றியும் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒரு சிலருக்கு கிளாசிக் தோற்றத்திலான பைக்குகள் என்றாலே தனி ஆர்வம் இருக்கும். அத்தகையவர்கள் தான், ராயல் என்ஃபீல்டு பைக்குகளை அதிகம் வாங்குகின்றனர். அதேபோன்று, ஜாவா பைக்குகளும் கிளாசிக் தோற்றத்தில் இருப்பதால், நிறைய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கிறது. கிளாசிக் பைக்குகள் என்றாலே வயதானவர்கள் தான் அதிகமாக வாங்குவர் என்ற நிலை மாறி, இன்றைய கால இளம் தலைமுறையினரும் அதிகளவில் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை வாங்குவதை பார்க்க முடிகிறது.

singer buys jawa perak bobber

இந்த வகையில், பிரபல இந்தி பாடகர் கைலாஷ் கெர் புதியதாக ஜாவா பெராக் பாப்பர் மோட்டார்சைக்கிளை வாங்கியுள்ளார். மெலடி பாடல்களை பாடுவது மட்டுமின்றி, இசை அமைப்பதிலும் நிபுணத்துவம் வாய்ந்தவராக விளங்கும் கைலாஷ் கெர் தனது புதிய ஜாவா பெராக் பைக்கை ஷோரூமில் டெலிவிரி எடுத்ததில் இருந்து வீட்டிற்கு கொண்டுவந்தது வரையில் வீடியோவாக காட்சிப்படுத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்த கைலாஷ் கெர்ரின் இன்ஸ்டாகிராம் பதிவில், "ஜாவா எப்போதுமே எனது இதயத்தில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. இந்த புதிய பைக் உடன் பைக்கிங்கில் எனது பேஷன் இதற்குமுன் இருந்ததை விட அதிகரித்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த இன்ஸ்டாகிராம் வீடியோவில், பைக்கிற்கு பொருத்தமான நிறத்தில் ஓபன்-ஃபேஸ் ஹெல்மெட்டை கெர் அணிந்திருப்பதையும் காணலாம்.

singer buys jawa perak bobber

ஜாவா பெராக் பைக்கின் சிங்கிள்-சீட் வெர்சன் தான் பெராக் பாப்பர் ஆகும். அதாவது, இந்த மோட்டார்சைக்கிளில் ஒரேயொரு இருக்கை மட்டுமே கிடைக்கும். தற்சமயம் இந்த ஜாவா பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.13 லட்சமாக உள்ளது. ஜாவா பெராக் பைக்குகள் 1950ஆம் காலக்கட்டத்திலும் இந்தியாவில் விற்பனையில் இருந்தன. கிட்டத்தட்ட அதே தோற்றத்தில், சில மாடர்ன் டச்களுடன் புதிய பெராக் பைக் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்பட சில மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களும் ஜாவா பெராக் பைக்கில் வழங்கப்படுகின்றன. ஜாவா பெராக் பைக்கில் 334சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 30.22 பிஎச்பி மற்றும் 32.74 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

singer buys jawa perak bobber

ஜாவா பெராக் பைக் கருப்பு நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதனால், பாடகர் கைலாஷ் கெர்ரும் ஜாவா பெராக் பைக்கை கருப்பு நிறத்தில் வாங்கியுள்ளார். மேட் ஃபினிஷிங்கில் கருப்பு நிறத்தில் கிடைக்கும் இந்த பைக்கில் இருக்கை மட்டும் தனியாக தெரியும் வகையில் ப்ரவுன் நிறத்தில் வழங்கப்படுகிறது.

ஜாவா பெராக்கை போன்று, ஜாவாவின் 42 பைக்கும் பாப்பர் வெர்சனில் கிடைக்கிறது. 42 பாப்பர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.25 லட்சமாக உள்ளது. இந்தியாவில் ஜாவா மற்றும் யெஸ்டி பைக் பிராண்ட்கள் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்குகின்றன. கடைசியாக, இந்த ஆண்டு துவக்கத்தில் ஜாவா 350 பைக் அப்டேட் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, ஜாவா 42 மற்றும் பெராக் பைக்குகளும் விரைவில் அப்டேட் செய்யப்பட உள்ளன.

singer buys jawa perak bobber

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு பைக்குகள் அளவிற்கு ஜாவா, யெஸ்டி பைக்குகளை பலர் வாங்குவதில்லை. இதற்கு முக்கிய காரணம், ஜாவா பைக்குகளின் அதிகப்படியான விலை ஆகும். இருப்பினும், கைலாஷ் கெர் போன்ற பிரபலங்கள் மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக ஜாவா, யெஸ்டி பைக்குகளை வாங்குகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 26, 2024, 22:35 [IST]
English summary
Indian singer kailash kher takes delivery of jawa perak bobber check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X