வெளிநாட்டுக்கு போய் கஷ்டப்படும் பிரபல இந்திய பாடகி! ஜாகுவார் கார் ஒவ்வொன்னும் என்னா விலையில் விற்குது...!
திருட்டு சம்பவங்கள் உலகில் எல்லா பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. நம் இந்தியாவில்தான் திருட்டுகள் அதிகம் நடப்பதாக நம்மில் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் நீங்கள் நினைத்தே பார்க்காத உலகின் வல்லரசு நாடுகளிலும் அதிக திருட்டு சம்பவங்கள் நாள்தோறும் நடக்கின்றன. அத்தகைய வல்லரசு நாடுகளுள் ஒன்றாக இந்த தொகுப்பில் நாம் பார்க்க போவது, ஒரு காலத்தில் உலகையே கட்டி ஆண்ட இங்கிலாந்து நாட்டின் தலைநகர் இலண்டனில் நடந்த திருட்டு சம்பவத்தை ஆகும்.
உலகில் பலர் செல்ல விரும்பக்கூடிய இலண்டன் மற்றொரு விஷயத்திற்காகவும் மிகவும் பிரபலமானது. அதுதான், போக்குவரத்து நெரிசல் ஆகும். இங்கிலாந்தில் நிறைய திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றாலும், இந்த குறிப்பிட்ட சம்பவத்தை பற்றி மட்டும் நாம் பார்ப்பதற்கு காரணம், இலண்டனில் இந்த திருட்டை எதிர்கொண்டு இருப்பது இந்தியாவை சேர்ந்த பெண் ஆவார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் பிரபலமான பஞ்சாபி பாடகியாக உள்ளார். இவரது பெயர், சுனந்தா சர்மா (Sunanda Sharma) ஆகும். 2016இல் 'படாகே' என்கிற பஞ்சாபி பாடலை பாடியதன் மூலமாக வட இந்தியாவில் பிரபலமாகிய 33 வயதான சுனந்தா சர்மா சில திரைப்படங்களில் மற்றும் இசை வீடியோக்களில் நடித்தும் உள்ளார்.
தற்சமயம் இங்கிலாந்தின் இலண்டனில் வசித்துவரும் இந்த பாடகி, அங்கு கிரே நிறத்தில் ஜாகுவார் எஃப்-டைப் (Jaguar F-Type) என்கிற விலையுயர்ந்த காரை பயன்படுத்தி வருகிறார். நம்ம ஊருக்கு தான் இது விலைமிக்க கார் ஆகும்; இலண்டனில் இந்த ஜாகுவார் கார் எல்லாம் நார்மலாக நிறைய பேர் பயன்படுத்தக்கூடிய கார் ஆகும்.

இந்த அளவிற்கு பொருளாதாரத்தில் வளர்ந்த நகரமாக இருப்பினும், இலண்டனில் திருட்டு சம்பவங்கள் அதிகமாக பதிவாகுகின்றன. பஞ்சாபி பாடகி சுனந்தா சர்மாவின் ஜாகுவார் எஃப்-டைப் காரின் ஜன்னல் கண்ணாடி மற்றும் பின்பக்க விண்ட்ஷீல்டு (Windshield) கண்ணாடியை உடைத்து, காருக்குள் இருந்த மிக விலையுயர்ந்த லூயிஸ் வுட்டன் (Louis Vuitten) கைப்பைகளை அவற்றுள் இருந்த பொருட்களுடன் திருடர்கள் திருடி சென்றுள்ளனர்.
காரில் இருந்த பொருட்கள் திருடப்பட்டு உள்ளதை அறிந்ததும் பாடகி சுனந்தா சர்மா அதனை வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளார். கடினமாக உழைத்த பணத்தில் அந்த ஹேண்ட் பேக்குகளை வாங்கியதாக கூறும் சுனந்தா சர்மா, துணிகளை தவிர்த்து எல்லாமே திருடுப்போகி உள்ளதாகவும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். ஆனால், என்னென்ன பொருட்கள் திருடுப்போகி உள்ளன என்பதை அவர் விரிவாக கூறவில்லை.
இந்த சம்பவத்தில் சேதமடைந்துள்ள ஜாகுவார் எஃப்-டைப் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது ஜாகுவார் நிறுவனத்தின் பிரபலமான எஸ்யூவி ரக கார் ஆகும். இந்தியாவில் ஒரு சமயத்தில் விற்பனையில் இருந்த இந்த ஜாகுவார் கார் தற்சமயம் விற்பனையில் இல்லை. விற்பனையில் இருந்த சமயத்தில் கடைசியாக இந்தியாவில் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.20 கோடியில் இருந்து இருந்தன.
வெறும் 3 கதவுகள் மற்றும் 2 இருக்கைகளை கொண்ட ஸ்போர்ட்ஸ் ரக காரான எஃப்-டைப் 2 லிட்டர் மற்றும் 5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. டீசல் என்ஜின் ஆப்ஷன் எதுவும் வழங்கப்படவில்லை. அதேபோல், பெட்ரோல் என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டது; மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இலண்டனில் சமீப ஆண்டுகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. கடந்த 2022ஆம் ஆண்டில் புகாட்டி சிரோன் (Bugatti Chiron) கார் உரிமையாளரிடம் இருந்து விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை சிலர் திருட முயற்சித்தனர். அதனை தொடர்ந்து தற்போது பிரபல இந்திய விஐபி-க்கு இவ்வாறு நடந்திருப்பதில் இருந்து இலண்டன் பாதுகாப்பற்ற நகரமாக மாறி வருகிறதா என்கிற கேள்வி எழுகிறது.


Click it and Unblock the Notifications








