விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... டெலிவரி எடுத்த மனைவி... யார்னு தெரியுமா?

பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... டெலிவரி எடுத்த மனைவி... யார்னு தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் சஹால். இவர் மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் (Mercedes Benz C-Class) காரை தற்போது வாங்கியுள்ளார். இது இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் சந்தைகளிலும் மிகவும் பிரபலமாக இருந்து வரும் செடான் ரக கார் ஆகும். இந்த புதிய சொகுசு காரை தனஸ்ரீ வர்மா சஹால் டெலிவரி எடுத்துள்ளார். இவர் சஹாலின் மனைவி ஆவார்.

விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... டெலிவரி எடுத்த மனைவி... யார்னு தெரியுமா?

இந்த புதிய சி-க்ளாஸ் காரின் புகைப்படங்கள், ஆட்டோஹேங்கர் மெர்சிடிஸ் பென்ஸால் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளன. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் காரை சஹால் நீல நிறத்தில் வாங்கியுள்ளார். இது பார்ப்பதற்கே மிகவும் அருமையாக உள்ளது. ஏ-க்ளாஸ் லிமோசின் மற்றும் இ-க்ளாஸ் கார்களுக்கு இடையே சி-க்ளாஸ் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... டெலிவரி எடுத்த மனைவி... யார்னு தெரியுமா?

மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் காரின் ஆரம்ப விலை 50 லட்ச ரூபாய் ஆகும். அதே சமயம் இந்த காரின் டாப் மாடலின் விலை 1.41 கோடி ரூபாயாக உள்ளது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். இந்த கார் பல வேரியண்ட்களாக விற்பனை செய்யப்படுகிறது.

விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... டெலிவரி எடுத்த மனைவி... யார்னு தெரியுமா?

எனவே மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் காரின் எந்த வேரியண்ட்டை சஹால் வாங்கியுள்ளார்? அதன் விலை எவ்வளவு? என்பது தற்போதைய நிலையில் உறுதியாக தெரியவில்லை. மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் காரில் வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை. சொகுசான இன்டீரியரை மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் கார் பெற்றுள்ளது.

விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... டெலிவரி எடுத்த மனைவி... யார்னு தெரியுமா?

இந்த காரின் இருக்கைகளில் எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட்மெண்ட், மெமரி ஆப்ஷன் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மசாஜ் செய்து கொள்ளும் வசதி கூட உள்ளது. எனவே தொலைதூர பயணங்கள் சோர்வை ஏற்படுத்தாது. ஒருவேளை சோர்வு ஏற்பட்டாலும் கூட, நீங்கள் இந்த காரின் இருக்கைகளில் மசாஜ் செய்து கொள்ளலாம்.

விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... டெலிவரி எடுத்த மனைவி... யார்னு தெரியுமா?

மேலும் பின்புற பயணிகளுக்காக விண்டோக்களில் ரியர் சன்ஷேடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர ஆம்பியண்ட் லைட்டிங், பனரோமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகளையும் மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் பெற்றுள்ளது. அத்துடன் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது.

விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... டெலிவரி எடுத்த மனைவி... யார்னு தெரியுமா?

மேலும் வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல் என மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் காரில் இடம்பெற்றுள்ள வசதிகளை அடுக்கி கொண்டே போகலாம். அத்துடன் ரியர் கேமராவுடன் ரியர் பார்க்கிங் சென்சார்களையும் சி-க்ளாஸ் காரில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும் எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் எல்இடி ஹெட்லேம்ப்பையும் இந்த கார் பெற்றுள்ளது.

விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... டெலிவரி எடுத்த மனைவி... யார்னு தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலர் விலை உயர்ந்த கார்களை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியே மிகச்சிறந்த உதாரணம். விராட் கோஹ்லியிடம் நிறைய ஆடி கார்கள் இருக்கும் நிலையில், அவரது நெருங்கிய நண்பரான சஹால் தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Spinner Chahal Buys Mercedes-Benz C-Class: Check Details Here. Read in Tamil
Story first published: Thursday, July 29, 2021, 20:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X