பென்ஸ் காரை விட்டு இறங்கியதும் எங்கிருந்து அவ்வளவு கூட்டம் வந்ததுனே தெரியல! நடிகை கூட கிடையாது இவங்க!

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), இந்தியாவில் விலையுயர்ந்த சொகுசு கார்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனம். கோடி ரூபாய் விலை கொண்ட கார்களை இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான நிறுவனமாக மெர்சிடிஸ்-பென்ஸ் விளங்குகிறது.

இதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் மிடில்-கிளாஸ் மக்களில் இருந்து பெரும் பணக்காரர்கள் வரையில் பலர் பென்ஸ் கார்களை வாங்க விரும்புகின்றனர். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களுக்கான கஸ்டமர்கள் உள்ளனர். எல்லா சமூகத்திலும் உள்ளனர். கடவுள் இல்லை என கூறுபவரும் பென்ஸ் காரை வைத்திருக்கிறார்; எந்நேரமும் கடவுளையே நினைத்துக் கொண்டிருப்பவரிடமும் பென்ஸ் கார் உள்ளது.

indian spiritual singer jaya kishori

இதையெல்லாம் இப்போது ஏன் நான் கூறுகிறேன் என்றால், ஆன்மீகத்தில் அதீத ஈடுப்பாடு கொண்ட பாடகி ஒருவர் தனது புத்தம் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் கார் உடன் காட்சி தந்துள்ளார். இந்த பாடகியின் பெயர், ஜெயா கிஷோரி (Jaya Kishori). ராஜஸ்தானில் ஒரு பிராமிண குடும்பத்தில் பிறந்தவரான ஜெயா கிஷோரிக்கு சிறுவயது முதலே ஆன்மீகத்தில் அதிக ஈடுப்பாடு உள்ளது.

9 வயதின் போதே சிவன் பாடல்களை பாடி பலரது பாராட்டை பெற்றவர், அதன்பின் ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுப்பட்டு சொற்பொழிவுகளையும் வழங்க ஆரம்பித்தார். ஜெயா கிஷோரியின் 7-நாள் பகவத் கீதை மற்றும் 3-நாள் 'நானி பாய் ரோ மைரோ' உள்ளிட்ட சொற்பொழிவுகள் பிரபலமானவை ஆக உள்ளன. இன்னும் சொல்லப்போனால், வட இந்தியாவிலும், தென்னிந்தியாவின் சில பகுதிகளிலும் கிருஷ்ணர் கோயில்களில் ஒலிக்கும் பெரும்பாலான பாடல்கள் ஜெயா கிஷோரியின் குரலில் பாடப்பட்டவை ஆகும்.

indian spiritual singer jaya kishori

அந்த அளவிற்கு, பிரபலமான பல கிருஷ்ணர், ராமர் பாடல்கள் இவரது குரலில் பாடப்பட்டவை ஆக உள்ளன. அல்லது ஜெயா கிஷோரியின் குரலினால் அவை பிரபலமாகியதா என்பது தெரியவில்லை. யூடியூப்பில் ஜெயா கிஷோரியின் பாடல்களுக்கு அதிக பார்வையாளர்கள் கிடைக்கும் அளவிற்கு இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த அளவிற்கு பிரபலமான பாடகியான ஜெயா கிஷோரி தற்போது நிகழ்ச்சி ஒன்றிற்கு தனது புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் காரில் வந்துள்ளார்.

இதுகுறித்த வீடியோவில், கார் பளபளப்பாக காட்சியளிப்பதால் இந்த பென்ஸ் காரை சமீபத்தில்தான் ஜெயா கிஷோரி வாங்கியிருக்க கூடும். மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தில் 'ஜி.எல்.இ 450' (GLE 450) காரை இந்த பாடகி வாங்கியுள்ளார். ஜெயா கிஷோரியிடம் முற்றிலும் வெள்ளை நிறத்திலான மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ 450 கார் உள்ளது. இதனை 'போலார் வெள்ளை' (Polar White) என மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அழைக்கிறது.

இது இல்லாமல், அப்சிடியன் பிளாக் மெட்டாலிக், சோடாலைட் ப்ளூ மெட்டாலிக், செலெனைட் கிரே மெட்டாலிக், ஹை-டெக் சில்வர் மெட்டாலிக் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ கார் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் மற்றும் ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் இந்த பென்ஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.99 லட்சத்தில் இருந்து ரூ.1.16 கோடி வரையில் உள்ளன.

இதில், ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷனில் ஜிஎல்இ 450 காரை ஆன்மீகவாதி ஜெயா கிஷோரி வைத்துள்ளார். டீசல் மற்றும் ஹைப்ரீட் என இரு என்ஜின் ஆப்ஷன்களிலும் என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. விற்பனையில் இந்த மெர்சிடிஸ்-பென்ஸ் காருக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5) மற்றும் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலர் (Land Rover Range Rover Velar) கார்கள் போட்டியாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜெயா கிஷோரி போன்ற விஐபிகள் சொகுசாக பயணம் செய்வதற்கு ஜிஎல்இ ஆனது ஏற்ற கார் ஆகும். மேலே கூறப்பட்டு இருப்பது இந்த பென்ஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலைகள் இன்னும் பல இலட்சங்கள் அதிகமாக வரும். இருப்பினும், இவ்வளவு விலை கொடுத்து பென்ஸ் காரை வாங்குவது எல்லாம் பாடகி ஜெயா கிஷோரிக்கு பெரிய விஷயமாகவே இருக்காது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 22, 2025, 20:54 [IST]
English summary
Indian spiritual singer jaya kishori spotted with new mercedes benz gle car
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+