TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
விவசாய பணிக்கு பயன்படுத்தப்படும் ஆடம்பர கார்கள்...! ஏன் இப்படி செய்தார்கள் தெரியுமா?
இந்தியாவில் ஆடம்பர எஸ்யூவி காரை வைத்திருக்கும் பலர் தங்கள் கார்களை விவசாய பணிக்காக பயன்படுத்தி வீடியோ சமூகவலைதளங்கில் வைரலாக பரவி வருகிறது. அவர்கள் பயன்படுத்திய கார்கள் என்னென்ன விவசாய பணிக்கு பயன்படுத்தும் அளவிற்கு இருக்கும் அந்த கார்களின் பவர் தான் என்ன என்பதை இங்கே பார்க்கலாம் வாருங்கள்.
இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம் தான். சமீபமாக நாடு முழுவதும் சில பிரச்னைகள் எழுந்து வருகிறது. கார் தயாரிப்பு ஆலைகளில் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது. இதனால் கார் தயாரிப்பு ஆலைகளை அனுமதிக்க கூடாது என்ற பேச்சும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
ஆனால் இந்தியாவில் நாளுக்கு நாள் கார்களின் விற்பனையும் அதிகரித்துதான். வருகிறது. இந்நிலையில் சில எஸ்யூவி கார் ஓனர்கள் தங்களின் விவசாய பயன்பாட்டிற்காக காரை பயன்படுத்தும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இதை நாம் ஒவ்வொன்றாக கீழே பார்க்கலாம்.
மஹேந்திரா தார்
இந்தியாவில் ஆப் ரோட்டிற்கான சிறந்த கார்கள்களில் மஹேந்திர தார் காரும் ஒன்று தான். இந்த காரின் பின்பக்கம் நிலங்களை உழுவதற்கான கருவியை பொருத்தி உழுவதற்கான முயற்சியை செய்துள்ளார் இந்த காரின் டிரைவர் இந்த வீடியோவை நீங்கள் கீழே பார்க்கலாம்.
இந்த மஹேந்திர தார் காரில் 2.5 லிட்டர் டர்போ சார்ஜ் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 105 பிஎச்பி பவரையும், 247 என்எம் டார்க் திறனையும் வழங்ககூடியது. இது 4X4 சிஸ்டம் லோ ரேஷியோ டிரான்பர் கேஸ் பொருத்தப்பட்டுள்ளது.
மிட்சுபிஸி மான்டிரியோ
இந்தியாவில் விற்பனையாகும் சொகுசு ரக எஸ்யூவியில் இதுவும் ஒன்று, அதற்கு காரணம் இதன் விலை தான். இந்தியாவில் இந்த கார் சுமார் ரூ 1 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரை வாங்கிய ஓனரும் இதை விவசாய பணிக்கு பயன்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை நீங்கள் கீழே பார்க்கலாம்.
இந்த மிட்சுபிஸி மான்டிரியோ கார் 3.2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் விற்பனை செய்யப்படுகிறது. இது 189 பிஎச்பி பவரையும், 441 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.
மஹேந்திர ஸ்கார்ப்பியோ
இந்தியாவில் பல ஆண்டுகளாக சிறப்பான விற்பனையில் உள்ள கார் மஹேந்திரா ஸ்கார்ப்பியோ கார் தான். இந்தியாவில் அரசியல்வாதிகள் பெரும்பாலோனோர் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு காரணம் அதன் லுக் தான். இந்த காரை வாங்கிய ஓனரும் இதை விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகிறார்.
இந்த கார் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 120 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதுவும் 4x4லோ ரேஷியோ டிரான்பர் கேஸை கொண்டது.
டொயோட்டா பார்ச்சூனர்
இந்திய மார்கெட்டிற்கு இந்த கார் வந்தது. முதல் இதற்கு போட்டியாக உள்ள மற்ற கார்களை அடித்து வீழ்த்து விட்டு ஒரு ராஜாவாகவே இந்த கார் விற்பனை தொடர்ந்து நடந்து வருிகறுது. இந்த 7 சீட்டர் மாடல்களை இந்தியர்கள் அதிகமாக வாங்குகிறார்களாம். அப்படி ஒருவர் தான் வாங்கிய இந்த காரை விவசாய பணிக்காக பயன்படுத்தியுள்ளார். இதை நீங்கள் கீழே பார்க்கலாம்.
இந்த கார் 3.0 லிட்டர் டீசல் இன்ஜினுடன் விற்பனைக்க வருகிறது. இது 169 பிஎச்பி பவரையும், 343 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த கார் ஸிப்ட்-ஆன்-பிளை லோ ரேஷியோ டிரான்பர் கேஸ் கொண்டது.
டாடா சபாரி ஸ்டோர்ம்
இந்தியாவில் நல்ல புகழை பெற்று பெரும் விற்பனையில் இருந்த கார் சபாரி ஸ்டோர்ம். டாடா நிறுவனம் இந்த காரை தற்போது நிறுத்தி விட்டது. தற்போது இந்திய ராணுவத்திற்காக இந்த கார் பயன்படுத்தப்படுகிறது. இந்த கார் ஆப் ரோட்டில் சிறப்பாக செயல்படும். இந்த காரையும் ஓனர் ஒருவர் விவசாய பணிக்காக பயன்படுத்தியுளார். இதை நீங்கள் கீழே பார்க்கலாம்.
இந்த கார் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனையில் இருந்தது. ஆனால் 4x4 வேர்சன் கார் வெரிகோர் 400 இன்ஜினை பெறு்றுள்ளது. இது 2.2 லிட்டர் இன்ஜினை பெற்று அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதுவும் லோ ரேஷியோ டிரான்பர் கேஸ் கொண்டது.
டிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
01. ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்
02. ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...!!! எப்படி?
03. இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் பஸ் தயார்... இனி இதுதான் டவுண் பஸ்....
04. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகில் புரட்சி... ஏத்தர் 340, 450 லான்ச் ஆனது... விலைதான் கொஞ்சம் அதிகம்...
05. டோல்கேட் டிராபிக் ஜாமில் பாடம் கற்ற அமைச்சர் செய்த அதிரடி... வாகன ஓட்டிகள் குதூகலம்...
Source:Cartoq