டயர் தொழில்நுட்பத்தில் இந்தியர்களின் மாபெரும் கண்டுபிடிப்பு

By Ravichandran

டயர் தொழில்நுட்பம் தொடர்பாக நாஸா அமைப்பு, கிரியேட் தி ஃப்யூச்சர் டிசைன் காண்டெஸ்ட்-2015 என்ற பெயரில் அமெரிக்காவின் நியூ யார்க்கில் நடத்திய போட்டியில், இந்திய அணி பதக்கத்தை வென்றுள்ளது.

நமது அன்றாட வாழ்வில் விபத்துகள் பல்வேறு வகைகளில் நடை பெறுகின்றன. அவற்றில் டயர்கள் வெடித்து, அதுவும் அதிக வேகத்தில் செல்லும் போது, டயர்கள் வெடித்தால், அதனால் ஏற்படும் விபத்துகளும் ஏராளமாக உள்ளது. இதனால், உயிரிழப்புகளும் அதிக அளவில் நிகழ வாய்ப்புகள் இருக்கிறது.

இதனை தவிர்க்கும் விதத்தில், டயர் பர்ஸ்ட் பிரிவென்ஷன் டெக்னாலஜி தொடர்பாக நாஸா விண்வெளி ஆய்வு மையம் ஒரு போட்டி ஒன்று நடத்தியது. இதில் இந்தியாவை சேர்ந்த டைஷிஜூனோ என்ற கண்டுபிடிப்பாளர்கள் குழு பதக்கத்தை வென்றுள்ளது. இந்த டைஷிஜூனோ கண்டுபிடிப்பாளர்கள் குழுவுக்கு தலைமை வகித்தவர் ஒடிஸாவை சேர்ந்த சமீர் பாண்டா என்பது குறிப்பிடதக்கது.

டைஷிஜூனோ கண்டுபிடிப்பாளர்கள் குழு உருவாக்கிய பிபிசிசி எனப்படும் பர்ஸ்ட் பிரிவென்ஷன் அண்ட் பங்க்சர் க்யூரேட்டிவ் டெக்னாலஜி தொழில்நுட்பம், கிரியேட் தி ஃப்யூச்சர் டிசைன் காண்டெஸ்ட்-2015 போட்டியில் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளது.

பிபிசிசி டைஷிஜூனோ கண்டுபிடிப்பாளர்கள் குழு உருவாக்கிய இந்த டயருக்கு தி மைல்ட் ரன் ஃப்ளாட் டயர் என்று பெயரிடபட்டுள்ளது.

தி மைல்ட் ரன் ஃப்ளாட் டயர் என்பது, சீலண்ட் என்ற முத்திரை குத்தப் பயன்படும் மெழுகு போன்ற ஒரு வகைப் பொருள் உடன் கூடிய மல்டி-சாம்பர்ட் (பல சேம்பர்கள்) ட்யூப் உள்ள அல்லது ட்யூப்கள் இல்லாத டயர்கள் கொண்டுள்ளது.

இதனால், இந்த மைல்ட் ரன் ஃப்ளாட் டயர்களில் இருந்து, காற்று வெளியாவது தடுக்கபடுகிறது.

இந்த தொழில்நுட்பத்தில் பல்வேறு வகையான நன்மைகள் உள்ளது. இந்த பிபிசிசி தொழில்நுட்பம் டையர்களில் பங்க்சர்கள் உருவாகுவதை தடுக்கின்றது. மேலும், வாகனத்தின் டயர்களில் பங்க்சர்கள் ஆனாலும், டயர்களை சாலைகளில் வழக்கம் போல் இயக்க வழி வகுக்கிறது.

Indian Team Wins NASA Award For invention of Tyre Burst Prevention Technology

இந்த பிபிசிசி தொழில்நுட்பம் டைனமிக் வீல் பேலன்சிங் விஷயத்தில் உதவுகிறது. மேலும், இந்த பிபிசிசி தொழில்நுட்பமானது, டயர்களின் ஆயுளை நீட்டித்து, எரிபொருள் திறனை கூட்டுகிறது.

இந்த பிபிசிசி தொழில்நுட்பம் ஒரு வருடத்தில், குறைந்தது 10 மில்லியன் வாகனங்களுக்கு உப்யோகபடுத்தபட்டாலும், டயர் மாற்றங்களினால் ஏற்படும் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வு, 2,00,000 டன்கள் என்ற அளவில் குறைக்கபடலாம் என சமீர் பாண்டா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பிபிசிசி தொழில்நுட்பம் மூலம், 200 மில்ல்யன் கேலன்கள் வரை எரிபொருள் உபயோகம் குறைக்க முடியும் என சமீர் பாண்டா கூறுகிறார்.

சர்வதேச அளவில், 60 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் இந்த ஃப்யூச்சர் டிசைன் காண்டெஸ்ட்-2015 போட்டியில் கலந்து கொண்டனர். இதில், நமது இந்திய குழுவான டைஷிஜூனோ கண்டுபிடிப்பாளர்கள் குழுவில் அங்கம் வகித்த உதித் போண்டியா, கே.என். பாண்டா மற்றும் ஸ்மிதிபர்னா சத்பதி உள்ளிட்டவர்களின் பிபிசிசி எனப்படும் இந்த மாபெரும் கண்டுபிடிப்பை பாராட்டியே தீர வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 17, 2015, 15:10 [IST]
English summary
Indian Team Wins NASA Award For Tyre Burst Prevention Technology. A team of innovators called TycheeJuno, led by Sameer Panda, engineer based in Odisha, won an award from NASA, in their Create the Future Design Contest - 2015, held in New York.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+