நம்பர் பிளேட்டை சாதாரணமா நினைக்காதீங்க! இது பின்னாடி இவ்வளவு பெரிய வரலாறு இருக்குது!

இந்தியாவில் நம்பர் பிளேட் என்பது கட்டாயம். புதிதாக வாகனம் வாங்கி இயக்க வேண்டும் என்றால் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்து பதிவெண் பெற வேண்டும். இப்படியாக பெற்ற பதிவெண்ணை நம்பராக பதிவு செய்து வாகனத்தின் முன்பக்கமும் பின்பக்கமும் பொருத்த வேண்டும். பதிவு செய்யாத வாகனங்களை இயக்குவது இந்தியாவில் மோட்டார் வாகன சட்டப்படி குற்றமாகும். ஆனால் இந்தியாவில் சில வாகனங்கள் மட்டும் பதிவெண் இல்லாமல் இயக்க அனுமதி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பதிவெண் இல்லாமல் இயக்க அனுமதி வழங்கப்பட்ட வாகனங்களில் முக்கியமானது இந்தியாவின் ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தான். இந்த வாகனங்கள் வழக்கமான வாகனங்கள் போல ஆர்டிஓ அலுவலகங்களில் பதிவு செய்யப்படாது. மாறாக இதில் தேசியசின்னமான அசோக சக்கரம் இருக்கும். இதை வைத்தே அந்த வாகனம் யாருடைய வாகனம் என்பதை கண்டுபிடித்துவிட முடியும்.

Number plate History

இப்படியாக கவர்னர்கள் பயன்படுத்தும் கார்கள் முழுமையாக ராஷ்டிரபதி பவன் மூலம் மேனேஜ் செய்யப்படுகிறது. மேலும் இதன் பராமரிப்பும் முழுமையாக ராஷ்டிரபதி பவன் மூலமே நடைபெறும். இதற்கான தனி புரோட்டோகால் இருக்கிறது. இதை கவர்னர்கள் அல்லது நாட்டின் ஜனாதிபதி தான் பயன்படுத்துவார். இந்த வாகனங்கள் எல்லாம் ஆர்டிஓவில் பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை.

அதே போல ராணுவத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்களும் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால் ராணுவ வாகனங்களை பதிவு செய்வதற்கு தனி சிஸ்டம் இருக்கிறது. இந்திய ராணுவத்துறை மூலம் இந்த வாகனங்களின் பதிவுகள் பராமரிக்கப்படுகிறது. ராணுவத்தில் உள்ள கார்கள் எல்லாம் நாம் பார்க்கும் போதே தெரிந்துவிடும் இதற்கென தனி ஃபார்மெட்டை ராணுவத்தில் பின்பற்றுகிறார்கள்.

Number plate History

ராணுவத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் பதிவெண் முதலில் மேற்குறி போடப்பட்டது போல பதிவெண் துவங்கும். அதன் பிறகு 2 இலக்க நம்பர்கள் இருக்கும். இது வாகனம் பதிவான ஆண்டை குறிக்கும். உதாரணமாக 2025ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் 25 என்ற என குறிக்கப்பட்டிருக்கும். அதற்கு பிறகு ஆங்கிலத்தில் ஒரு எழுத்தும். அதற்கு பிறகு சில எண்களும் இருக்கும். இது எல்லாம் வாகனத்தின் வகை மற்றும் வாகனத்தின் பதிவெண்னை குறிக்கும்.

ராணுவத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் வெள்ளை நிற எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும். இதற்கு பின்புறம் கருப்பு நிறத்தில் இருக்கும். இது சாதாரணமாக மக்கள் பயன்படுத்தும் நம்பர் பிளேட்டிலிருந்து வேறபடுத்தி காட்டுவதற்காக இப்படியான விஷயத்தை கையாளுகிறார்கள். இந்த வாகனத்தின் பதிவுகள் முழுவதும் ராணுவத்தின் ரெக்கார்டில் பராமரிக்கப்படுகிறது. இந்த வாகனங்களுக்கு தனி விதிகள் உள்ளது. சாலைகளில் இந்த வாகனங்களுக்கு முன்னுரிமையும் வழங்கப்படுகிறது.

Number plate History

பிரிட்டிஷ் காலத்திற்கு முன்பு வாகனங்களுக்கு தனியாக பதிவெண் என்ற எதுவும் கிடையாது. கடந்த 1914ம் ஆண்டு தான் இந்தியாவின் முதன்முறையாக வாகன பதிவெண் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அப்பொழுது தான் இந்திய மோட்டார் வாகன சட்டம் பிரிட்டிஷ் அரசால் கொண்டு வரப்பட்டது. வாகன பதிவும், வாகனத்தை இயக்குவதற்கான உரிமை வழங்குவதும் இந்தியாவில் அப்பொழுது தான் துவங்கியது.

அந்த காலகட்டத்தில் மோட்டார் வாகனங்களை அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள், பெரும் பணக்காரர்கள் உள்ளிட்ட வெகு சிலர் தான் வைத்திருந்தனர். இதனால் வாகன பதிவு வெகு குறைவாக தான் இருந்தது. அந்த காலகட்டத்தில் ஜெய்ப்பூர் பகுதியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு 'JP' என்ற எழுத்திலும், கவாலியர் பகுதியில் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு 'GWL' என்ற எழுத்திலும், ஐதராபாத் பகுதியில் பதிவு செய்யப்படும் வாகன்ஙகளுக்கு 'HYD' என்ற எழுத்திலும், பரோடா பகுதியில் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு 'BRD என்ற எழுத்திலும் பதிவெண்கள் துவங்கும்.

இந்தியாவில் கடந்த 1914ம் ஆண்டு தான் இந்திய மோட்டார் வாகனம் முதன் முதலில் உருவாக்கப்பட்டு வாகனங்களுக்கான பதிவெண் கட்டாயம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு விற்பனை செய்யப்பட்ட வாகனங்கள் மட்டுமே பதிவெண் கொண்ட வாகனங்களாக இருக்கும். அப்பொழுது வெறும் பதிவெண் மட்டுமே வழங்கப்பட்டது. அதை எப்படி வாகனங்களில் பதிக்க வேண்டும் என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.

1939ம் ஆண்டு தான் முதன் முதலில் வாகனங்களில் பதிவெண் எப்படி அச்சிடப்பட வேண்டும் என்ற ஃபார்மெட் மற்றும் ஸ்டார்டர்ட்கொண்டு வரப்பட்டன. அதன்பிறகு தான் குறிப்பிட்ட ஃபார்மெட்டில் பதிவெண்கள் வழங்கப்பட்டன. அந்த ஃபார்மெட் தமிழகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. அதற்கு முன்னர் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு விதமான ஃபார்மெட்களில் பதிவெண் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1989ம் ஆண்டு தான் மத்திய அரசு இந்தியாவில் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான நம்பர் பிளேட் டிசைனை உருவாக்கியது. அந்த டிசைனில் அவ்வப்போது மாற்றங்களும் செய்யப்பட்டன. இதனால் சில ஆண்டுகள் குழப்பங்களும் நீடித்தன. ஆனால் தற்போது ஒரே மாதிரியான நம்பர் பிளேட்கள் கொடுக்கப்படுகிறது. இதனால் குழப்பங்கள் எதுவும் இல்லை.

2019ம் ஆண்டு தான் முதன் முதலில் ஹை செக்யூரிட்டி ரிஜிஸ்ட்ரேஸன் பிளேட்கள் கொண்டு வரப்பட்டன. இதனால் நம்பர் பிளேட் டெம்பரிங் என்ற பிரச்சனையை தவிர்க்க இது கொண்டு வரப்பட்டது. நம்பர் பிளேட் டெம்பரிங் இந்தியாவில் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. நம்பர் பிளேட்களில் தவறான நம்பரை பதிவு செய்து குற்ற செயல்களில் பலர் ஈடுபட்டனர். இதனால் குற்றவாளிகள் எளிமையாக தப்பி வந்தனர். இதை தடுக்க தற்போது எச்எஸ்ஆர்பி ரக நம்பர் பிளேட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கடந்த 1893ம் ஆண்டு தான் பிரான்ஸ் நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமானது மற்றும் அதிக விபத்து ஏற்பட்டதன் காரணமாக நம்பர் பிளேட் முறை அமலுக்கு வந்தது. இதனால் வாகனங்களை எளிதாக அடையாளம் காண முடிந்தது. அதன் பிறகு மற்ற நாடுகளும் அந்த நடைமுறைய பின்பற்ற துவங்கினர். பிரிட்டிஷ் அரசு இதை 1903ம் ஆண்டு துவங்கியது. ஜெர்மனியில் 1906ம் ஆண்டு இது துவங்கியது.

பிரிட்டிஷ் அரசு அரச குடும்பத்தினர் பயன்படுத்தும் வாகனங்களுக்கு வாகன பதிவெண் தேவையில்லை என்ற நடைமுறையை பின்பற்றியது. அப்பொழுது ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள அரசர்கள் அவர்களது பட்டங்களை தங்கள் காரில் அச்சடித்து பயன்படுத்தி வந்தனர். அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு பொதுவாக பதிவு எண் தேவையில்லை என்ற அறிவித்தனர். அது தான் தற்போது ஜனாதிபதி கவர்னர் பயன்படுத்தும் வாகனங்களிடம் பின்பற்றப்படுகிறது.

1947க்கு பிறகு இந்தியாவிலும் பல இடங்களில் செல்வந்தர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பதிவு செய்யப்படவில்லை. சில வாகனங்கள் பழைய பதிவெண்ணை கொண்டு பயன்படுத்தப்பட்டு வந்தன. ஐதராபாத் நவாப்கள், ஜெய்பூர் மகாராஜாக்கள் உள்ளிட்ட பலர் காஸ்ட்லியான கார்களை வாங்கி அதை பதிவு செய்யாமலேயே பயன்படுத்தினர். அவர்களுக்கு பதிவு தேவையில்லை எனவும் கூறப்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது வாகன பதிவெண் கட்டாயம் செய்யப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கிறது. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை வாகன பதிவெண் கொண்டு சுலபமாக பிடிக்க முடிகிறது. இந்தியாவின் வளர்ச்சி மற்றும் காற்றுமாசு உள்ளிட்டவற்றை வாகன பதிவெண் மூலம் கண்காணிக்க முடிகிறது. இந்த நடைமுறை தற்போது இந்தியாவில் அதிக பலனை தருகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, April 7, 2025, 16:54 [IST]
English summary
Indian vehicle number plate history all you need to know
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X