ஓட்டி வந்தது பேயா!.. அமெரிக்காவில் டாக்சியை புக் செய்த இந்திய பெண்.. பட்டபகலில் ஆளில்லாமல் வந்த கார்.. வீடியோ!

சமீபத்தில் அமெரிக்கா சென்ற இந்திய பெண் ஒருவர் அங்கு பயணிப்பதற்காக கால் டாக்சியை புக் செய்திருக்கின்றார். அப்போதே, இந்த விநோத சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. அவர் புக் செய்த கார் ஓட்டுநரே இல்லாமல் அவரை நோக்கி வந்திருக்கின்றது. இந்த நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவைச் சேர்ந்தவர் நேஹா தீபக் ஷா. 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற 'மாஸ்டர் செஃப் இந்தியா சீசன் 4' (MasterChef India Season 4) போட்டியில் கலந்துக் கொண்ட போட்டியாளர்களில் இவரும் ஒருவர். இவரே சமீபத்தில் விடுமுறையை முன்னிட்டு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பயணித்திருக்கின்றார்.

Neha deepak shah reviews self driving

இந்த நிலையிலேயே, அவர் தங்கும் இடத்தில் இருந்து வெளியில் செல்வதற்காக கால் டாக்சியை புக் செய்திருக்கின்றார். அப்போதே டிரைவரே இல்லாமல் கார் ஒன்று அவரை நோக்கி வந்திருக்கின்றது. தான் சந்தித்த இந்த விநோத காட்சியைப் படமாக்கிய நேஹா தீபக் ஷா, அதுகுறித்த வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார்.

டிரைவரே இல்லாமல் தானாக நகர்ந்து வந்த அந்த கார், மனிதனின் உதவியே இல்லாமல் இயங்கும் திறன் கொண்ட கார் ஆகும். இதனை செல்ஃப் டிரைவிங் கார் என்று அழைப்பர். ஆகையால், இது அமானுஷ்ய வேலை அல்ல. அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் வேமோ (Waymo) எனும் நிறுவனமே டிரைவரே இல்லாமல் இயங்கும் கால் டாக்சியை அமெரிக்காவில் வழங்கி வருகின்றது.

Self driving

இந்த சேவையையே இந்தியாவைச் சேர்ந்த நேஹா தீபக் ஷா பயன்படுத்தி இருக்கின்றார். இந்த ரைடு அனுபவத்தையே அவருடைய இந்திய ஃபேன்களுக்கு தெரிவிக்கும் விதமாக பயணம்குறித்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார். வேமோ டாக்சியைப் புக் செய்வது ஊபர், ஓலா கால் டாக்சியை புக் செய்வது போல சுலபமான ஒன்றாகும்.

இதை புக் செய்த பின்னர் ஓலா, ஊபருக்கு ஓடிபி-யைச் சொல்வதுபோல வேமோ டாக்சியைப் பயணிக்க செல்போன் செயலி வாயிலாக நாம் கன்ட்ரோல் செய்ய வேண்டும். இவ்வாறே டாக்சி வந்த பின்னர் மாஸ்டர் செஃப் இந்தியா புகழ் நேஹா அவருடைய பயணத்தை மேற்கொள்கின்றார்.

Neha deepak shah

அவர் பயணித்தது சாதாரணமான ஆளில்லாமல் ஓடும் கார் மட்டுமில்லைங்க, அது ஓர் எலெக்ட்ரிக் காரும்கூட. ஜாகுவார் நிறுவனத்தின் மிக முக்கியமான மின்சார தயாரிப்புகளில் ஒன்றான ஐ-பேஸ் ஆகும். இந்த லக்சூரி காரையே வேமோ அதன் கால் டாக்சி சேவையில் பயன்படுத்தி வருகின்றது.

ஆளில்லாமல் இயங்குவதற்காக காரின் மேற்கூரை, முன் பக்க, முன் பக்கத்தின் இரு முனைகள் மற்றும் பின் பக்கம் என அனைத்து பகுதிகளிலும் சென்சார்களை வேமோ நிலை நிறுத்தி இருக்கின்றது. கேமிராவுடன் கூடிய இந்த சென்சார்கள் சாலையை மிக தீவிரமாகக் கண்கானிக்கும். இதன் வாயிலாக ஆள் நடமாட்டம் கண்டறியப்பட்டு அதற்கு ஏற்ப வாகனத்தை வழிநடத்தும்.

Neha deepak shah rides self driving

ஒருவேளை பாதசாரி யாரும் குறுக்கே வந்துவிட்டால், அந்த கார் உடனடியாக பாதசாரிக்கும் தனக்கும் உள்ள இடைவெளியை அளவிட்டு வேகத்தைக் குறைத்தல் மற்றும் பிரேக்கை பிடித்தல் போன்றவற்றை தானாகவே செய்துவிடும். அத்துடன், சேரும் இடத்திற்கு ஏற்ப வழித் தடத்தை அதுவே கண்டறிந்து செல்லும்.

இதற்காகவே ஏகப்பட்ட தொழில்நுட்ப கருவிகள் அந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இத்தகைய சூப்பரான தானியங்கி சொகுசு காரிலேயே இந்திய பெண் பயணித்திருக்கின்றார். ஜாகுவார் நிறுவனம் வேமோ பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்த சூப்பர் லக்சூரி எலெக்ட்ரிக் காரை இந்தியாவிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 1.19 கோடி தொடங்கி ரூ. 1.24 கோடி வரையிலான விலையில் அது விற்கப்படுகின்றது. இந்த காரில் 90kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 480 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இதனை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 45 நிமிடங்களே போதுமாது. ஆனால், ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டை பயன்படுத்தினால் மட்டுமே இந்த அளவு அதிக வேகத்தில் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். அதேவேளையில், வழக்கமான சார்ஜிங் பாயிண்டிலும் வைத்து சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். ஆனால், இதைப் பயன்படுத்தும்போது குறைந்தது 10 மணி நேரங்களாவது முழுமையாக சார்ஜாக ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் வெகு விரைவில் ஆளில்லாமல் இயங்கும் கால் டாக்சிகள் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பறக்கும் கால் டாக்சிகளும் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. இதன் வருகை 2026 ஆம் ஆண்டிற்குள் அரங்கேறிவிடும் என கூறப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 28, 2023, 12:40 [IST]
English summary
Indian women uses waymo self driving e car taxi service
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X