பைக் சாகசம் செய்த பெண் ரைடர்: தேடிச் சென்று அபராதம் வசூல் செய்த போலீஸ்..!

Written By:

ஆண்கள் மட்டுமே செய்யக்கூடியவை என்று தற்போது எதுவும் இல்லை என்று கூறுமளவுக்கு இன்று அனைத்து துறைகளிலும் பெண்களும் தடம் பதித்து முத்திரை பதித்து வருகின்றனர்.

 வைரல் வீடியோவால் புகழின் உச்சியில் பெண் பைக் ஸ்டண்ட் ரைடர்.!

பைக் ஸ்டண்ட் சாகசம் என்பது பொதுவாக ஆண்கள் மட்டுமே ஈடுபடக்கூடியதாகவே பார்க்கப்படுகிறது. பெண்கள் பைக் ஸ்டண்ட் செய்வது என்பது மிகவும் அரிதிலும் அரிதான ஒன்றாகவே உள்ளது.

 வைரல் வீடியோவால் புகழின் உச்சியில் பெண் பைக் ஸ்டண்ட் ரைடர்.!

ஆண்களே அதிகம் ஈடுபடும் பைக் ஸ்டண்ட் சாகசங்களை, செய்வதில் வல்லவராக திகழும் ஒரு இந்தியப் பெண் குறித்த தகவல்கள் ஒரு வைரல் வீடியோ மூலமாக தெரியவந்துள்ளது.

 வைரல் வீடியோவால் புகழின் உச்சியில் பெண் பைக் ஸ்டண்ட் ரைடர்.!

சில நாட்களுக்கு முன்னர் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெண் ஒருவர் பைக்கில் நின்றுகொண்டும், படுத்துக்கொண்டும் சாகசத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று நாடு முழுவதும் வைரலாக பரவிவந்நது.

 வைரல் வீடியோவால் புகழின் உச்சியில் பெண் பைக் ஸ்டண்ட் ரைடர்.!

இந்த பைக் ஸ்டண்ட் சண்டிகர் பகுதியின் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் படமாக்கப்பட்டது என்று தெரியவந்ததால், அம்மாநில காவல்துறையினர் இது தொடர்பாக, வீடியோவை ஆராய்ந்து பார்த்ததில் அந்த பைக் எண் கண்டுபிடிக்கப்பட்டது.

 வைரல் வீடியோவால் புகழின் உச்சியில் பெண் பைக் ஸ்டண்ட் ரைடர்.!

பைக் எண்ணை கொண்டு விசாரித்ததில் அந்த பைக் சாகசத்தை நிகழ்த்தியது ஜலந்தர் நகரைச் சேர்ந்த ரவீந்தர் கவுர் என்றழைக்கப்படும் ரூபி என்று தெரியவந்தது. ( பார்ப்பதற்கு வெளிநாட்டுக்காரர் போல காணப்படுகிறார்...!)

 வைரல் வீடியோவால் புகழின் உச்சியில் பெண் பைக் ஸ்டண்ட் ரைடர்.!

ரூபியை தொடர்பு கொண்ட காவல்துறையினர் பொதுவெளியில் தனக்கும், அடுத்தவர்களுக்கும் ஆபத்தை உருவாக்கும் வகையில் பைக் ஸ்டண்டில் ஈடுபட்டதால் 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அந்த அபராதத்தை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செலுத்தியுள்ளார் ரூபி.

தேசிய அளவில் தற்போது தான் ரூபி வெளிச்சத்திற்கு வந்திருந்தாலும் உள்ளூர் மக்களுக்கு இவரின் ஸ்டண்ட்கள் ஏற்கெனவே பரிட்சயம். ஏற்கெனவே அங்கு அவர் ஸ்டண்ட் செய்வது வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது.

 வைரல் வீடியோவால் புகழின் உச்சியில் பெண் பைக் ஸ்டண்ட் ரைடர்.!

அபராதம் விதிக்கப்பட்டாலும் இந்த வைரல் வீடியோவிற்கு பின்னர் ரூபியின் புகழ் தேசிய அளவில் வீசத்தொடங்கியுள்ளது. இவர் கடந்த 10 ஆண்டுகளாகவே பைக் சாகசத்தில் ஈடுபட்டு வருகிறாராம்.

அபராதம் விதிக்கப்பட்டிருப்பதால் புதிய பாடம் ஒன்றினை தான் கற்றுள்ளதாகவும், இனி சாலைகளில் இதைப்போன்று ஸ்டண்ட் செய்வது இல்லை என்றும் முடிவெடுத்துள்ளதாக ரூபி தெரிவித்தார்.

 வைரல் வீடியோவால் புகழின் உச்சியில் பெண் பைக் ஸ்டண்ட் ரைடர்.!

மொஹாலியில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் ரூபி பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். ஜலந்தரில் உள்ள தன் பெற்றோர்களை காண அடிக்கடி அந்த தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் செல்வாராம்.

 வைரல் வீடியோவால் புகழின் உச்சியில் பெண் பைக் ஸ்டண்ட் ரைடர்.!

அப்படி ஒரு நாள் தன்னுடைய பயணத்தின் போது சாகசம் செய்து கொண்டே சென்றுள்ளார். அதனை காரில் சென்ற ஒருவர் வீடீயோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

பைக் என்றால் தன் சிறு வயதில் இருந்தே கொள்ளை பிரியும் என்று கூறும் ரூபிக்கு பஞ்சாபி மொழி படங்களில் பைக் ஸ்டண்ட் செய்ய வாய்ப்புகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about Lady bike stunt artist fined by cops for her stunt at highway.
Story first published: Friday, May 19, 2017, 17:09 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark