அமெரிக்காவில் ஒட்டுமொத்த இந்தியாவைவும் பெருமைப்பட வைத்த இளைஞர்!! நடுரோட்டில் இதை செய்யாமல் இருந்து இருக்கலாம்!

இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N) காரில் அமெரிக்கா வரையில் சென்று, நியூயார்க்கின் பரபரப்பான சாலையில் கார் மீது ஏறி இந்திய தேசிய கொடியை பறக்கவிட்டுள்ளார். யார் இந்த இளைஞர்? எதற்காக இவ்வாறு செய்தார்? வாருங்கள் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

என்னதான்... விமான போக்குவரத்து மிக பெரிய வளர்ச்சியை கண்டிருந்தாலும், சாலை வழியாக பல்வேறு நாடுகளுக்கு செல்ல விரும்பும் ஒரு தனி கூட்டமும் உள்ளது. ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு நடந்தே செல்பவர்களும் இருக்கின்றனர். பெரியதாக எந்த சிரமமும் இல்லாமல், உலகம் முழுவதையும் சாலை வழியாக சுற்றி பார்க்க வேண்டும் என்றால், காரில் செல்வதுதான் பெஸ்ட்.

man indian flag in america

அவ்வாறு, இந்திய இளைஞர் ஒருவர் தனது மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரில் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். சில வாரங்களுக்கு முன்பே அமெரிக்க்காவை சென்றடைந்துவிட்ட இந்த இளைஞர், அங்குள்ள பிரபலமான இடங்களுக்கு சென்று வருகிறார். மேலும், அதனை காட்சிப்படுத்தி இணையத்தில் வீடியோக்களாக வெளியிடவும் அவர் மறப்பதில்லை. ஏனெனில், யுடியூப்பர் ஆன இவர் இதற்காக தான் அமெரிக்காவுக்கு காரில் சென்றுள்ளார்.

இந்த நிலையில், இந்த இளைஞர் சமீபத்தில் நியூயார்க் நகரத்திற்கு சென்றுள்ளார். நியூயார்க்கின் பிரபலமான 'டைம் ஸ்கௌயர்' (Times Square) கட்டத்திற்கு முன்பாக தனது ஸ்கார்பியோ காரை நிறுத்திய இந்த இளைஞர், உடனே காரின் பொனெட் மீது ஏறி நின்று, தான் கையில் வைத்திருந்த இந்திய தேசிய கொடியை இரு கைகளால் ஏந்தி பறக்க விட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ 'யுனிடெட் வண்டர்' என்கிற இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

பொருத்தமான இசையுடன் எடிட் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவை இப்போதுவரையில் கிட்டத்தட்ட 15 இலட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்திய தேசிய கொடியை அத்தனை பேர் முன்னிலையில் பறக்க செய்தது, அங்கிருந்த சிலரது கவனத்தை ஈர்த்ததை வீடியோவில் காண முடிகிறது. இதே இளைஞர் சில வாரங்களுக்கு முன், அமெரிக்காவில் பிரபலமான ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தார்.

இந்த பயணத்திற்கு இவர் பயன்படுத்தும் ஸ்கார்பியோ காரை உருவாக்கிய மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா படித்த கல்லூரி இந்த ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழகம் ஆகும். ஆனந்த் மஹிந்திரா படித்த கல்லூரியில், இன்று அவரது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நிறுவனம் உருவாக்கிய வாகனம் நிற்பது ஆச்சிரியமானதாக இருக்கும் என்பதற்காக அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை இந்த யூடியுப் இளைஞர் ஆனந்த் மஹிந்திரா டேக் செய்து பதிவிட்டு இருந்தார்.

man indian flag in america

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு முழுவதுமாக சாலை வழியாக செல்ல முடியாது. ஐரோப்பா வரையில் சென்று, பின் அங்கிருந்து கப்பல் வழியாகவே காரை அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல முடியும். இந்தியாவில் இருந்து விமானம் மூலமாகவும் அமெரிக்காவுக்கு காரை கொண்டு செல்லலாம். ஆனால், அதற்கு மிகவும் செலவாகும். இந்த பயணத்தில் இந்த நபர் பயன்படுத்தியுள்ள மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரில் கர்நாடகா மாநிலத்தின் நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது.

அதாவது, இந்த யூடியூப்பர் கர்நாடகாவை சேர்ந்தவராக இருக்கலாம். இந்த தொலைத்தூர பயணத்திற்கு ஏற்ற வாகனம் ஸ்கார்பியோ-என் ஆகும். ஏனெனில், புதுமையான லேடார்-ஆன்-ஃப்ரேமில் உருவாக்கப்படுகின்ற ஸ்கார்பியோ-என் பாதுகாப்பு விஷயத்திலும் சிறப்பான காராக விளங்குகிறது. இதன் காரணமாகவே, தற்சமயம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா காராக ஸ்கார்பியோ விளங்குகிறது.

man indian flag in america

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நியூயார்க் நகரில் இந்திய தேசிய கொடி பறப்பது பெருமை அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கும் அதேநேரத்தில், பரபரப்பான நியூயார்க் சாலையில் கர்நாடகாவின் KA நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட கார் இருப்பது கொஞ்சம் விசித்திரமாக உள்ளது. இந்திய தேசிய கொடியை கைகளில் சுமக்கும் அதேவேளையில், தோளில் அமெரிக்க தேசிய கொடியை இந்த இளைஞர் சுமந்துள்ளார். இதில் இருந்து, எந்தவொரு நாட்டையும் அவமதிக்க கூடாது என இந்த இளைஞர் எண்ணுவதை உணர முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 16, 2024, 8:00 [IST]
English summary
Indian young man with indian flag in america new york check all details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X