ஒரே வருடத்தில் விவாகரத்து, புதிய கார்... இளம் இசையமைப்பாளரின் புதிய அசையும் சொத்து!! சாலையில் மிதக்கும் கப்பல்

சினிமா சிலரது வாழ்வை பெரிய அளவில் மாற்றியுள்ளது. நம் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் பிரபல நடிகர், நடிகைகளாக பலர் வளர்ச்சிக் கண்டுள்ளனர். முன்னணி நடிகர், நடிகையராகி விட்டாலே சொகுசு வாழ்க்கையில் மிதக்கலாம். அதேநேரம், ஒரு சிலர் சினிமாவில் நுழைந்த உடனேயே விலையுயர்ந்த கார் & பைக்குகளை வாங்குவதை பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில், இங்கு ஒரு இளம் இசையமைப்பாளர் விலையுயர்ந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காரை வாங்கியுள்ளார். யார் அந்த இளம் இசையமைப்பாளர் என்பதையும், அவர் வாங்கியுள்ள ஃபார்ச்சூனர் காரை பற்றியும் இனி பார்க்கலாம்.

ஒவ்வொரு காலக்கட்டத்தில் ஒவ்வொரு திரைப்பட இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்கள் புகழின் உச்சத்தில் இருப்பார்கள். அதாவது, அந்த காலக்கட்ட இளம் தலைமுறையினருக்கு அவர்களது இசையும், பாடல் வரிகளும் ஏற்றதாக இருக்கும். கோலிவுட்டில் அனிருத், டோலிவுட்டில் தமன் உள்ளிட்டோர் தற்சமயம் இருப்பதை போன்று.

chandan shetty buys fortuner legender

இந்த வரிசையில், கன்னட சினிமாவில் வளர்ந்துவரும் இசையமைப்பாளராக இருப்பவர் சந்தன் ஷெட்டி (Chandan Shetty). திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி, பாடல்களை எழுதுவது, தேவைப்பட்டால் பாடுவது என பன்முக திறமை கொண்டவராக சந்தன் ஷெட்டி விளங்குகிறார். இன்னும் சொல்லப்போனால், இவர் ஒரு அருமையான ராப் பாடகர் ஆவார். இடையில், கன்னட பிக்பாஸ் 5வது சீசனிலும் பங்கேற்றார்.

அப்போதுதான், பிக்பாஸ் வீட்டில் நிவேதா கவுடா என்பவருடன் காதல் ஏற்பட்டு, கடந்த 2020இல் சந்தன் ஷெட்டி திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களது திருமண வாழ்க்கை 4 வருடங்கள் கழித்து சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்றுக் கொண்டனர். விவாகரத்து பெறுவதற்கு முன்னர், சந்தன் ஷெட்டி மற்றும் நிவேதா கவுடா இருவரும் ஜோடியாக முட்டு ராக்‌ஷஷி என்கிற கன்னட திரைப்படத்தில் நடித்தனர்.

இந்த நிலையில் தற்போது, இசையமைப்பாளர் சந்தன் ஷெட்டி புதியதாக டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர் காரை வாங்கியுள்ளார். இந்த காருடன் நிற்கும் படங்களை சந்தன் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சந்தன் ஷெட்டி வாங்கியிருக்கும் புதிய ஃபார்ச்சூனர் கார் ஏற்கனவே ஆர்டிஓ-இல் பதிவு செய்யப்பட்டு, வெள்ளை நிற நம்பர் பிளேட் உடன் உள்ளது.

chandan shetty buys fortuner legender

இந்திய சந்தையில் பிரபலமான டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விலைமிக்க லக்சரி வேரியண்ட்டாக ஃபார்ச்சூனர் லெஜண்டர் விளங்குகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.43.66 லட்சத்தில் இருந்து ரூ.47.64 லட்சம் வரையில் உள்ளன. ஃபார்ச்சூனரின் டாப் வேரியண்ட்டான ஃபார்ச்சூனர் லெஜண்டர் கார் வெள்ளை நிற உடலில், கருப்பு நிற மேற்கூரை உடன் கிடைக்கிறது.

ஃபார்ச்சூனர் லெஜண்டர் ஆனது ஒரு 4X4 டிரைவ் சிஸ்டத்தை கொண்ட கார் ஆகும். அதாவது, இந்த காரில் என்ஜின் ஆற்றல் ஒரே நேரத்தில் காரின் 4 சக்கரங்களுக்கும் செல்லும். இந்த காரில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 201 பிஎச்பி மற்றும் 500 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

பயணிகளின் பாதுகாப்புக்கு 7 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், 360-டிகிரி கேமரா, ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான ஹேங்கர், வேகத்தை உணர்ந்து தானாக லாக் ஆகும் கதவுகள் மற்றும் எமர்ஜென்சி பிரேக் சிக்னல் உள்ளிட்டவை ஃபார்ச்சூனர் லெஜண்டரில் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆனது நம் இந்தியர்கள் மத்தியில் பிரபலமான காராகும். இத்தகைய காரின் டாப் வேரியண்ட்டை வாங்குவது என்பது நிறைய பேருக்கு கனவே. இத்தகைய ஃபார்ச்சூனர் காரை இசையமைப்பாளர் சந்தன் ஷெட்டி வாங்கியுள்ளார் எனும்போது அவர்மீது கொஞ்சம் பொறாமை ஏற்படுகிறது. ஆனால், அவருக்கு இந்த காரை வாங்குவது எல்லாம் பெரிய விஷயமாகவே இருக்காது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 4, 2024, 8:00 [IST]
English summary
Indian young music composer chandan shetty buys toyota fortuner legender
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+