இந்தியால இருந்திருந்தா இலட்சம், இலட்சமா சம்பாதிச்சு இருப்பாரு!! கனடாவில் நம்ம ஊர் வாலிபர் படும் கஷ்டம்!

கனடா (Canada)-இல் வேலையை இழந்த இந்திய தொழிற்நுட்ப நிபுணர் தனது டெஸ்லா எலக்ட்ரிக் காரை வைத்து பிழைப்பை ஓட்டும் செய்தி நம்மை பரிதாபப்பட வைத்துள்ளது. யார் இந்த இந்திய தொழிற்நுட்ப நிபுணர்? டெஸ்லா காரை வைத்துக் கொண்டு என்ன மாதிரியான தொழிலை அவர் தற்போது கவனித்துக் கொண்டு வருகிறார்? இவற்றிற்கான பதில்களை அறிய வாருங்கள் செய்திக்குள் போவோம்.

வேலை இழப்புகள் எல்லா நாடுகளிலும் அவ்வப்போது பரவலாக நடக்கக்கூடிய ஒன்றுதான். இதில் நாம் கனடா நாட்டை மட்டும் குறிப்பிட்டு குறை கூற முடியாது. ஓர் தனியார் நிறுவனம் அதன் முதலீடுகளை இழந்து திவால் ஆகும்போது, வேறு வழியில்லாமல், அந்த நிறுவனம் மற்றும் அதன் கீழ் இயங்கும் மற்ற நிறுவனங்களை இழுத்து மூட வேண்டியதாகிறது.

youth working as delivery boy

அல்லது குறைந்தப்பட்சம், பணியாளர்கள் சிலரை வேலையை விட்டு நீக்க வேண்டி வருகிறது. அவ்வாறு, வேலைக்காக கனடா நாட்டிற்கு சென்ற இந்திய இளைஞர் ஒருவர், அங்கு தன்னை வேலைக்கு அழைத்த நிறுவனத்தில் இருந்து தொழிற்நுட்பம் சார்ந்த வேலையை இழந்துள்ளார். இதனால் தற்போது, தனது டெஸ்லா காரில் டெலிவிரி பாயாக வேலைப் பார்த்து வருகிறார்.

இதுகுறித்த வீடியோவை அவரே தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டெஸ்லா கார் முழுக்க பொருட்களை எடுத்துக் கொண்டு டெலிவிரி செய்வதற்காக சென்றுக் கொண்டிருக்கையில் இந்த வீடியோவின் மூலம் தனது நிலைமையை அவர் தெரியப்படுத்தி உள்ளார். அனிஷ் மாவெலிக்காரா என பெயர் கொண்ட இந்த இளைஞர் இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

youth working as delivery boy

தனது தற்போதைய நிலைமையை அனிஷ் மாவெலிக்காரா கூறுவதில் இருந்து அவர் யூடியூப்பில் பதிவிட்டுள்ள இது தொடர்பான வீடியோ துவங்குகிறது. பின்னர், தற்போது வேலை பார்த்துவரும் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வரவுள்ளதாக கூறும் அனிஷ், இதனால் தற்சமயம் வேறு வேலைகளை பார்த்து வருவதாக கூறுகிறார்.

சில நேர்காணல்களை அனிஷ் சந்தித்துள்ளார், இருப்பினும் எந்த நிறுவனமும் அவரை திரும்ப அழைக்கவில்லை. இதனால், அனுபவமில்லாத வேலையாக இருந்தால் கூட பரவாயில்லை என டெலிவிரி பாய் வேலையில் இறங்கியுள்ளார் அனிஷ். கனடாவில் தனது நண்பர்களினால் செயல்படும் ஒரு மளிகை சாமான் டெலிவிரி நிறுவனத்தில் பகுதி-நேர டெலிவிரி பாயாக அனிஷ் மாவெலிக்காரா வேலைப் பார்த்து வருகிறார்.

youth working as delivery boy

அனிஷிடம் டெஸ்லா எலக்ட்ரிக் கார் ஒன்று உள்ளது. இதனை வைத்துதான் அவர் மளிகை சாமான் பொருட்களை ஆர்டர் செய்தவர்களின் வீடுகளில் டெலிவிரி செய்து வருகிறார். காருக்கு உள்ளே, முன் இருக்கையில் கூட பொருட்களை அட்டை பெட்டியில் அனிஷ் கொண்டு செல்வதை அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் காணலாம்.

பொருட்களை டெலிவிரி செய்வது மட்டுமின்றி, தனது டெஸ்லா காரை அனிஷ் உபேர் டாக்ஸியாகவும் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த வேலைகளினால், முன்பை விட அதிகாலையில் 4 மணிநேரம் முன்னதாக காரை டிரைவ் செய்ய ஆரம்பிப்பதாக பரிதாபமாக கூறும் அனிஷ், அதிகாலையில் சீக்கிரமாக டாக்ஸி பணியில் ஈடுப்பட்டால்தான், விமான நிலையத்திற்கு செல்வோரை சவாரி பிடிக்க முடியும், வருமானத்தையும் பெருக்க முடியும் என்கிறார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் பல இளைஞர்கள் இன்னமும் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல், கிடைத்த வேலையை பார்த்து வருகின்றனர். அவர்களுடன் ஒப்பிடுகையில், அனிஷ் மாவெலிக்காரா கொஞ்சம் சவுகரியமாகவே வாழ்ந்து வருவார் என நம்புகிறோம். இருப்பினும் நிச்சயமாக, சொந்த நாட்டை விட்டு இவ்வளவு தொலைவிற்கு வேலை தேடி வந்து, பின் அந்த வேலையை இழந்து அனுபவமில்லாத ஒரு வேலையை செய்வது கஷ்டம்தான்.

More from DriveSpark

Article Published On: Monday, November 13, 2023, 13:43 [IST]
English summary
Indian youth working as grocery delivery boy with his tesla check full detail here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X