பாகிஸ்தான் சாலைகளை பார்த்து இந்திய யூடியூபர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! பிஎம்டபிள்யூ பைக்குடன் தூக்கிய என்.ஐ.ஏ
விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ (BMW) பைக்கில் பாகிஸ்தானில் சாலை மார்க்கமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய யூடியூப்பர் (Youtuber)-ஐ பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த நிலையில், இந்த நபர் தேசிய புலனாய்வு குழுவினரால் (NIA) கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை விமான நிலையத்திற்கு வந்தவரை அதிரடியாக என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. என்ன நடந்தது? பாகிஸ்தான் சாலைகளில் இந்த இந்தியர் ஓட்டிய பிஎம்டபிள்யூ பைக் எத்தகையது என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வெளிநாடுகளுக்கு சாலை வழியாக பயணம் மேற்கொள்வது என்பது பண்டை காலங்களில் இருந்தே மேற்கொள்ளப்படும் ஒன்றாகும். அந்த சமயங்களில் குதிரை வண்டியை பயன்படுத்தினர்; தற்போது பவர்ஃபுல்லான மோட்டார்சைக்கிள் அல்லது கார் அல்லது கேரவன் போன்றதான வேனை பயன்படுத்துகிறோம். ஆனால், பழங்காலத்தில் இவ்வாறு வேறு பிரதேசங்களுக்கு செல்வதற்கு பெரியதாக எந்த நடைமுறை சிக்கலும் இல்லை.

எங்கு தோன்றுகிறதோ அங்கு செல்லக்கூடிய சூழல் இருந்தது. ஆனால், தற்போது நாடுகளுக்கு இடையே எல்லையை பிரித்துக் கொண்டு, இது உன்னுடையது, இது என்னுடையது என ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு இருப்பதால், வெளிநாடுகளுக்கு பயணம் செல்வதற்கு பல கட்ட விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டியதாக உள்ளது.
அதுவும், சாலை மார்க்கமாக செல்வதாக இருந்தால் எத்தனை சட்ட சிக்கல்களை சமாளிக்க வேண்டியிருக்கும் என்பதை இவ்வாறான பயணங்களை மேற்கொண்டவர்களிடம் கேட்டு பாருங்கள். பொதுவாக, இவ்வாறான சாலை மார்க்கமாக வெளிநாட்டு பயணங்களை நம் இந்தியர்கள் அதிகமாக மேற்கொள்வது இல்லை. ஏனெனில், நம் இந்தியாவே பெரிய பரந்து விரிந்த தேசம் என்பதால், அதனை சுற்றி பார்க்கவே நிறைய பேருக்கு நேரம் போதவில்லை.

நீண்ட தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ளும் அளவிற்கு ஆற்றல்மிக்க பைக் அல்லது காரை வைத்திருக்கும் மிகவும் சில இந்தியர்கள் மட்டுமே இவ்வாறான வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்கின்றனர். அத்தகையவர்களும் நேபாளம், சிக்கிம், சீனா போன்ற இமயமலை தொடரை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு ட்ரிப் அடிக்கின்றனர். ஆனால், பாகிஸ்தானுக்கு செல்வதற்கு நிறைய பேர் விரும்புவது இல்லை.
ஏனெனில், பொருளாதாரத்தில் நம்மை விட பின்தங்கிய பாகிஸ்தானில் நம் இந்தியாவை காட்டிலும் பார்ப்பதற்கு பெரியதாக ஒன்றுமில்லை என்பது இதற்கு காரணம் என சொன்னாலும், அதைவிட முக்கியமான காரணம் பாகிஸ்தானில் சாலை மார்க்கமாக பயணிப்பதற்கு இரு நாட்டு அரசாங்கத்திடமும் இருந்து முறையான அனுமதியை வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடுவது ஆகும்.
இருப்பினும், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் பய்யா சன்னி யாதவ் (Bayya Sunny Yadav) என்பவர் ஹைதராபாத்தில் இருந்து தனது விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ ஆர் 1300 ஜிஎஸ் (R1300 GS) பைக்கில் சாலை மார்க்கமாக பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளார். தகுந்த அதிகாரிகளிடம் இருந்து முறையான அனுமதி வாங்கி இந்த பயணத்தை மேற்கொண்ட பய்யா சன்னி யாதவ் இந்த பாகிஸ்தான் பயணத்தை வீடியோவாக காட்சிப்படுத்தி கடந்த மே மாத துவக்கத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு தொடராக வெளியிட்டுள்ளார்.
இவர் சென்ற நேரமோ என்னமோ தெரியவில்லை... சரியாக அந்த நேரம் பார்த்து இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. இரண்டும் சரியாக சொல்லி வைத்தது போன்று நடந்ததினாலேயே பய்யா சன்னி யாதவ் மீது ஒரு கண் வைத்த இந்திய தேசிய புலனாய்வு குழு, அவர் பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியதும் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சம்பவத்திற்கு பிறகு பய்யா சன்னி யாதவ்வின் உடைமைகள் மற்றும் மொபைல் போன் & லேப் டாப்பை சோதனை செய்யும் பணிகள் நடைபெற்றுவரும் சூழலில், இந்த பாகிஸ்தான் பயணத்திற்கு இந்த நபர் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ ஆர்1300 ஜிஎஸ் பைக்கை நம்மால் கவனிக்காமல் இருக்க முடியாது. இந்தியாவில் புரோ என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த பிஎம்டபிள்யூ பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.24.68 லட்சமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








