இவங்க எல்லாரும் யுட்யூபர்களா!! டீ விற்கல, எந்த படத்துலையும் நடிக்கல! ஆனா வாழுறத பாத்தா ரொம்ப பொறாமையா இருக்கு!

யுட்யூபர்கள் சிலர் பெரும் தொழிலதிபர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு அசத்தலான ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பதிவில் மிகுந்த செல்வந்தர்களாக வாழும் சில யுட்யூபர்களை பற்றியும் அவர்களிடம் பயன்பாட்டில் இருக்கும் மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர காரை பற்றியுமே பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

எல்விஷ் யாதவ் : நகைச்சுவையான வீடியோக்களுக்கு பெயர்போன நபராக இவர் இருக்கின்றார். யுட்யூபில் பிரபலமடைந்த காரணத்தினாலேயே இவர் பிக்-பாஸ் ஓடிடி சீசன் 2 ஷோவில் கலந்துக் கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. இவரிடம் உள்ள விலையுயர்ந்த கார் மாடலாக மெர்சிடிஸ் இ53 ஏஎம்ஜி கேப்ரியோலெட் (Mercedes E53 AMG Cabriolet) உள்ளது. இதன் விலை ரூ. 1.2 கோடி ஆகும்.

Youtubers expensive cars

இது ஓர் ஸ்போர்ட்ஸ் கூபே வகை கார் மாடல் ஆகும். இந்த காரில் 3.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 435 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த ஐசிஇ மோட்டாருடன் ஹைபிரிட் சிஸ்டமும் வழங்கப்பட்டு இருக்கின்றது. அது தனித்துவமாக 21 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

விகாஷ் தயாள் : இந்த யுட்யூபர் சமீபத்தில் ஓர் சொகுசு காரை வாங்கினார். அந்த நிகழ்வு மிகப் பெரிய அளவில் பேசு பொருளாக மாறியது. டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி300 வகை சொகுசு காரையே அவர் வாங்கினார். இதன் மதிப்பு ரூ. 2.10 கோடிக்கும் அதிகம் ஆகும். 3.3லிட்டர் வி6 டர்போ டீசல் மோட்டார் கொண்ட இந்த கார் அதிகபட்சமாக 309 பிஎஸ் மற்றும் 700 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

Elvish yadav mercedes amg convertible

சஞ்ஜு செர்வத் : இந்தியாவின் மற்றுமொரு புகழ்பெற்ற யுட்யூபர் மற்றும் மிக மிக விலையுயர்ந்த காரை பயன்படுத்தும் யுட்யூபராகவும் இவர் காட்சிளிக்கின்றார். இந்த யுட்யூபர் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-வேகன் காரையே பயன்படுத்தி வருகின்றார். இந்த கார் ரூ. 2.55 கோடி தொடங்கி ரூ. 4 கோடி வரையில் விற்கப்படுகின்றது. சஞ்ஜு செர்வத் வைத்திருக்கும் இந்த கார் எப்படியும் ரூ. 3 கோடிக்கும் அதிகம் இருக்கும் என கூறப்படுகின்றது.

ஹேரி உப்பல் : உணவு சார்ந்த வீடியோக்களை வெளியிட்டு வரும் நபரே இவர் ஆவார். இவர் சமீபத்திலேயே ஓர் சொகுசு காரை வாங்கினார். லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 காரையே அவர் வாங்கி இருக்கின்றார். இந்த காரின் மதிப்பு ரூ. 1 கோடிக்கும் அதிகம் ஆகும். இத்தகைய விலை உயர்ந்த காரையே சாப்பாடு சார்ந்த வீடியோவை பதிவிட்டும் வரும் யுட்யூபர் தற்போது பயன்படுத்தி வருகின்றார்.

Scout ford mustang

கவுரவ் சவுத்ரி : டெக்னிக்கல் குருஜி என்று யுட்யூப் தளத்தால் இவர் அறியப்படுகின்றார். இவரிடத்தில நிறைய கார்கள் உள்ளன. குறிப்பாக, மிக மிக விலை உயர்ந்த மற்றும் அதிக திறனை வெளியேற்றக் கூடிய கார் மாடலாக பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காட்சியளிக்கின்றது. இந்த காரில் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 340 பிஎஸ் மற்றும் 450 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 12.61 கிமீ வரை மட்டுமே மைலேஜ் தரும். அதேவேளையில் இதன் டீசல் மோட்டார் 16.55 கிமீ வரையில் மைலேஜ் தரும். இந்த காரின் விலை ரூ. 1.30 கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Gaurav chaudhary bmw 7 series

ஜட் பிரப்ஜோத் : இவரின் ஸ்டோரி சற்று சுவாரஷ்யமானது. இவர் நேபாளில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். இந்த சம்பவத்தை அடுத்தே அவர் யுட்யூபில் பிரபலமான நபராக மாறினார். இவர் சமீபத்திலேயே லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எனும் சொகுசு எஸ்யூவி ரக காரை வாங்கினார். இந்த கார் இந்தியாவில் ரூ. 94 லட்சத்திற்கும் அதிகமான ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஸ்கவுட் : விளையாட்டு (gamer) வீடியோக்களுக்கு புகழ்போனவர் இவர் ஆவார். இவரிடத்தில் உள்ள கார் இந்தியாவில் ஒரு சிலரிடத்தில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கின்றது. ஃபோர்டு மஸ்டாங் காரையே அவர் பயன்படுத்தி வருகின்றார். இதன் மதிப்பு ரூ. 75 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இந்தியாவில் விற்பனையில் இல்லாத ஓர் கார் மாடல் இதுவாகும். இதையே ஸ்கவுட் பயன்படுத்தி வருகின்றார். இவரின் இயற்பெயர் டேன்மே சிங் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கேரி மைனடி: யுட்யூபில் நகைச்சுவை வீடியோக்களை பதிவிட்டு மிகப் பெரிய அளவில் பணத்தை ஈட்டியவர்களில் இவரும் ஒருவர் ஆவார். இவர் ஆடி க்யூ7 (Audi Q7) சொகுசு எஸ்யூவி காரை பயன்படுத்தி வருகின்றார். க்யூ7 இந்தியாவில் உள்ள செல்வந்தர்கள் பலரின் பிரியமான கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் இந்தியாவில் ரூ.86.92லட்சம் தொடங்கி ரூ.94.45லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இவை வெறும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

கவுரவ் தனேஜா : இந்தியாவின் புகழ்பெற்ற யுட்யூபரான இவரிடத்தில் பிஎம்டபிள்யூ எக்ஸ்4 லக்சூரி எஸ்யூவி காரே பயன்பாட்டில் உள்ளது. இந்த காரை அவர் வாங்கி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் இப்போதும் அதை அவர் புத்தம் புதிது போல் பராமரித்து வருகின்றார்.

இதன் அப்போதைய மதிப்பு ரூ. 96.20 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். எக்ஸ்4 சொகுசு காரில் 3.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் இன்லைன் 6 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 355 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

கியான் கேமிங் : இந்த யுட்யூபர் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அரிய வகை கார் மாடலான இசட்4 ஸ்போர்ட்ஸ் காரை பயன்படுத்தி வருகின்றார். இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 3.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் அதிகபட்சமாக 301 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த காரின் மதிப்பு ஒரு கோடியை தொடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஃபுக்ரா இன்சான் : இவர் புகழ்பெற்ற யுட்யூபர் மட்டுமல்ல பாடகரும் கூட. இவரிடத்தில் ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவி ரக கார் பயன்பாட்டில் இருக்கின்றது. இதன் மதிப்பு ரூ. 80 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். விலைக்கு ஏற்ப அதிக சொகுசு வசதிகளைக் கொண்டதே எஃப்-பேஸ் ஆகும்.

இந்த கார் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 டீசல் என இரண்டு விதமான எஞ்சின் தேர்வுகளைக் கொண்டது. இதன் பெட்ரோல் வெர்ஷன் 246 பிஎச்பி மற்றும் 365 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. அதேவேளையில், டீசல் வெர்ஷன் 201 பிஎச்பி மற்றும் 430 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிகுந்த செல்வ செழிப்புடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் யுட்யூபர்களையே மேலே உள்ள பதிவில் பார்த்தோம். மேலும், இந்த கார்களை மட்டுமே அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என நினைத்துக் கொள்ள வேண்டாம். அவர்களிடத்தில் உள்ள பல கார்களில் முக்கியமானவற்றையே லிஸ்ட்டில் நாம் பார்த்திருக்கின்றோம்.

More from DriveSpark

Article Published On: Monday, March 18, 2024, 12:15 [IST]
English summary
Indian youtubers who use expensive cars and the price of those cars
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X