அமெரிக்காவில் லாரி வாங்கினாலும் இந்தியாவை மறக்கல! நடுரோட்டில் இந்திய தம்பதி செய்த காரியம்!
நம் இந்திய நாட்டின் அடையாளமே அதன் பல்வேறு விதமான கலாச்சாரம், பண்பாடு கலந்த கலவை ஆகும். இதனாலேயே, உலகின் எந்தவொரு பகுதியில் வசித்தாலும் இந்தியர்கள் மட்டும் அவர்களது தனித்துவமான பாரம்பரியம் மூலமாக தனித்து தெரிகின்றனர். குறிப்பாக, உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் இந்தியர்கள் நடத்தும் பிரம்மாண்டமான இந்து கோயிலை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். மற்றவர்களுடன் இணைந்து தங்களது கலாச்சாரத்தை கடைப்பிடிப்பது மட்டுமின்றி, வெளிநாட்டில் வசித்தாலும் குடும்பத்தில் தங்களது பாரம்பரிய முறைகளை எப்போதும் இந்தியர்கள் பின்பற்றுகின்றனர்.
இதனாலேயே, வெளிநாடுகளில் அதிக சொத்துக்கள் உடன் எவ்வளவு உயரிய இடத்தில் இருந்தாலும் இந்து மத இறை வழிப்பாட்டை தவறாமல் சிலர் பின்பற்றுவதை பார்க்க முடியும். அந்த வகையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் ஒருவர் புதியதாக வாங்கிய லாரிக்கு இந்து முறைப்படி பூஜை செய்து பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.

இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், தனது மனைவியின் கால் பாதங்களை குங்குமத்தில் நெனைத்து, அவரது கால் பாத சுவடுகளை தனது லாரியின் முன்பக்கத்தில் அச்சிட்டுள்ளார். இதற்காக, குங்குமத்தில் கால் பாதங்களை தனது மனைவி முழுவதுமாக பூசிக்கொண்டதும் அவரை அப்படியே தூக்கி லாரியின் முன்பக்க கிரில் பகுதிக்கு மேல் அச்சிட்டுள்ளார்.
பொதுவாகவே, நம்ம ஊர் லாரிகள் நன்கு உயரமானவை என்பதை நான் சொல்ல வேண்டியது இல்லை. அதிலிலும், அமெரிக்க லாரிகள் இன்னும் உயரம் அதிகமானவை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியிருந்தும், அமெரிக்காவில் வசிக்கும் இந்த இந்தியர் தனது மனைவியை லாரியின் முன்பக்க கிரில் பகுதிக்கும் மேல் வரையில் தூக்கி ஆச்சிரியப்படுத்தி உள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பலர் இந்த வீடியோவுக்கு ஹார்டின் விட்டாலும், சிலர் இது மிகவும் செயற்கையாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் இந்த இந்தியரின் பெயர், நீரவ் ராவ் (Neerav Rao) ஆகும். இவர் தனது புதிய லாரியை 'நீல திமிங்கலம்' (Blue Whale) என அழைக்கிறார்.
ஏனெனில், அந்த அளவிற்கு முழுவதும் நீல நிறத்தில் இந்த கனரக லாரியின் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. நீரவ் ராவ் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், லாரி மிகவும் பளபளப்பாக காட்சியளிப்பதால், இதனை நீரவ் ராவ் சமீபத்தில்தான் அமெரிக்காவில் வாங்கியிருக்க கூடும்.

வீடியோவில் காட்டப்படும் லாரி ஆனது ஃபிரைட்லைனர் டிரக்ஸ் (Freightliner Trucks) என்கிற பழமையான அமெரிக்க டிரக் உற்பத்தி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது ஆகும். இந்த லாரி அளவில் பெரியதாக இருப்பினும், உண்மையில் இது ஃபிரைட்லைனர் டிரக்ஸ் நிறுவனம் உருவாக்கும் செமி-டிரக் ஆகும். அதாவது, இதனை காட்டிலும் பெரிய பெரிய கனரக லாரிகளை எல்லாம் ஃபிரைட்லைனர் நிறுவனம் உருவாக்குகிறது.
அமெரிக்காவில் வசிக்கும் நீரவ் ராவ்வின் புதிய லாரியில் போக்குவரத்துக்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது. இதில் இருந்து நீரவ் ராவ் இந்த லாரியை வைத்து அங்கு தொழில் பார்த்து வருவதை அறிய முடிகிறது. இவரிடம் இன்னும் சில கனரக வாகனங்கள் கூட பயன்பாட்டில் இருக்கலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, நீரவ் ராவ் இந்தியாவில் லாரி டிரைவராக இருந்து வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டதாகவும் கூறுகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதியதாக வாங்கிய லாரியின் மீது கால்களை வைப்பது தவறு என்று உங்களில் சிலருக்கு தோன்றலாம். ஆனால், லாரி மீதும், மனைவி மீதும் நீரவ் ராவ் வைத்திருக்கும் அன்பை இதில் பார்க்க முடிகிறது. அமெரிக்காவில் இவ்வளவு பெரிய லாரிகளை வாங்குவது எல்லாம் சாதாரணமான விஷயம் அல்ல.


Click it and Unblock the Notifications









