மும்பையிலிருந்து கோவாவிற்கு இந்தியாவின் முதல் சொகுசு கப்பல் அறிமுகம்!

மும்பையிலுள்ள மத்கான் துறைமுகத்தின் விக்டோரியா முனையத்திலிருந்து இந்த பயணிகள் கப்பல் சேவை துவங்கியது. மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கோவாவிற்கு சென்றது.மும்பையிலிருந்து 15 மணிநேர பயணத்தில் கோவா

By Saravana Rajan

நீண்ட தாமத்திற்கு பின்னர் ஒருவழியாக மும்பையிலிருந்து கோவாவிற்கு சொகுசு கப்பல் சேவை துவங்கப்பட இருக்கிறது. இந்த சொகுசு கப்பல் சேவையின் முழு விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

மும்பையிலிருந்கு கோவாவிற்கு இந்தியாவின் முதல் சொகுசு கப்பல் அறிமுகம்!

நாட்டின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கோவாவையும், வர்த்தக தலைநகரான மும்பையையும் கடல் வழியாக இணைக்கும் விதத்தில், சொகுசு கப்பல் சேவை துவங்க திட்டமிடப்பட்டது. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக இந்த கப்பல் சேவை துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மும்பையிலிருந்கு கோவாவிற்கு இந்தியாவின் முதல் சொகுசு கப்பல் அறிமுகம்!

ஆனால், கப்பல் தயார் நிலையில் இல்லாததும், அனுமதி கிடைக்காததாலும் தாமதமாகி வந்தது. இந்த நிலையில், ஒருவழியாக மும்பை- கோவா இடையே சொகுசு கப்பல் சேவை நேற்றுமுன்தினம் சோதனை ஓட்டமாக முதல் பயணத்தை துவங்கியது.

மும்பையிலிருந்கு கோவாவிற்கு இந்தியாவின் முதல் சொகுசு கப்பல் அறிமுகம்!

மும்பையிலுள்ள மத்கான் துறைமுகத்தின் விக்டோரியா முனையத்திலிருந்து இந்த பயணிகள் கப்பல் சேவை துவங்கியது. மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கோவாவிற்கு சென்றது.

மும்பையிலிருந்கு கோவாவிற்கு இந்தியாவின் முதல் சொகுசு கப்பல் அறிமுகம்!

அங்காரியா என்ற பெயரிலான பயணிகள் கப்பல் பயன்பபடுத்தப்பட இருக்கிறது. இந்த கப்பலில் 400 பேர் பயணிக்க முடியும். 5 நட்சத்திர விடுதிகளுக்கு இணையான தரத்தில் அறைகள் மற்றும் வசதிகளை இந்த கப்பல் பெற்றிருக்கிறது.

மும்பையிலிருந்கு கோவாவிற்கு இந்தியாவின் முதல் சொகுசு கப்பல் அறிமுகம்!

மும்பையிலிருந்து 15 மணிநேர பயணத்தில் கோவாவை சென்றடையும். ராய்கட்டிலுள்ள திகி, தாபோல், ரத்னகிரியிலுள்ள ஜெய்கட், விஜயதுர்க், சிந்துதுர்க்கில் உள்ள மால்வன், பனாஜி ஆகிய இடங்களில் இந்த கப்பல் நின்று செல்லும்.

மும்பையிலிருந்கு கோவாவிற்கு இந்தியாவின் முதல் சொகுசு கப்பல் அறிமுகம்!

மும்பை மற்றும் கோவாவில் மாலை 5 மணிக்கு இந்த கப்பல் புறப்படும். இருமார்க்கத்திலும் ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற கணக்கில் இந்த கப்பல் சேவையை அளிக்க இருப்பதாக இந்த கப்பல் சேவையை துவங்கி இருக்கும் சீ ஈகிள் க்ரூசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மும்பையிலிருந்கு கோவாவிற்கு இந்தியாவின் முதல் சொகுசு கப்பல் அறிமுகம்!

இந்த கப்பலில் 7 வகுப்புகள் கொண்ட இருக்கை மற்றும் தங்கும் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கப்பலில் பயணிக்க ஆரம்ப கட்டணமாக ரூ.7,000 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சுற்றுலா கப்பல்களில் வெளிநாடு செல்ல வேண்டிய நிர்பந்தத்தை இந்த கப்பல் தவிர்க்கும்.

மும்பையிலிருந்கு கோவாவிற்கு இந்தியாவின் முதல் சொகுசு கப்பல் அறிமுகம்!

இது சுற்றுலாப் பயணிகளிடையே அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒரே இரவில் மும்பையிலிருந்து கோவாவை அடைந்துவிடலாம் என்பதால், வர்த்தக ரீதியில் இந்த கப்பல் சேவையை ஸ்திரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மும்பையிலிருந்கு கோவாவிற்கு இந்தியாவின் முதல் சொகுசு கப்பல் அறிமுகம்!

1960களிலிருந்து மும்பை- கோவா இடையே பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. கொங்கன் ஷக்தி மற்றும் கொங்கன் சேவக் ஆகிய இரண்டு நீராவி எஞ்சின் பொருத்தப்பட்ட கப்பல்கள் சேவையில் இருந்தன. இரு நகரங்களையும் இந்த கப்பல் 24 மணிநேரத்தில் இணைத்தது.

மும்பையிலிருந்கு கோவாவிற்கு இந்தியாவின் முதல் சொகுசு கப்பல் அறிமுகம்!

சிறப்பான சாலை கட்டமைப்பு மற்றும் ரயில் பயணம் எளிதானதால், இந்த கப்பல்களுக்கான வரவேற்பு குறைந்தது. இதனால், 1991ல் இந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது நினைவுறகூறத்தக்கது. தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கும் அங்காரியா கப்பல் 1997ம் ஆண்டு ஜப்பானில் கட்டப்பட்டது.

Article Published On: Friday, May 25, 2018, 16:03 [IST]
English summary
India's first cruise service starts from Mumbai to Goa.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+