சீனா, அமெரிக்காலாம் கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க... ஒட்டுமொத்த உலகையும் அண்ணாந்து பாக்க வைத்த சென்னை...

இந்திய சாலைகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் பிரச்னை அதிகமாகி கொண்டே செல்கிறது. குறிப்பாக சென்னை (Chennai), பெங்களூர் (Bangalore) மற்றும் மும்பை (Mumbai) ஆகிய பெரு நகரங்களில், போக்குவரத்து நெரிசல் பிரச்னை கையை மீறி சென்று விட்டது. வரும் காலங்களில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படாவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகலாம்.

எனவே பறக்கும் டாக்ஸி (Flying Taxi) போன்ற வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்தால் நன்றாக இருக்குமே என பலரும் நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் ஒரு தரப்போ இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று வாதிட்டு வருகின்றனர். இதில், 2வது ரகத்தை சேர்ந்தவர்களின் கருத்து கூடிய விரைவில் பொய்யாகவுள்ளது. ஆம், இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி (Electric Flying Taxi) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மஹிந்திரா குழுமத்தின் தலைவராக (Mahindra Group Chairman) உள்ள ஆனந்த் மஹிந்திராதான் (Anand Mahindra), இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியை வெளியிட்டுள்ளார்.

ePlane e200

ஆனந்த் மஹிந்திராவால் வெளியிடப்பட்டிருப்பது, எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியின் ப்ரோட்டோடைப் (Prototype) ஆகும். அனேகமாக அடுத்த ஆண்டு (2025), இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி பயன்பாட்டிற்கு வந்து விடும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்ளேன் (ePlane) என்ற நிறுவனத்தால், இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்ஸி உருவாக்கப்பட்டுள்ளது.

இப்ளேன் இ200 (ePlane e200) என்ற பெயரில் இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்ஸி அழைக்கப்படும். சென்னையில் உள்ள ஐஐடி (IIT - Indian Institute of Technology) முயற்சியில், இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்ஸி உருவாக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த இப்ளேன் இ200 எலெக்ட்ரிக் பறக்கும் டாக்ஸியில் 2 பேர் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் (Range) 200 கிலோ மீட்டர்கள் ஆகும். அதாவது பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணம் செய்யக்கூடிய தொலைவுதான் ரேஞ்ச் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்ஸி அதிகபட்சமாக மணிக்கு 200 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியாவின் வான் வழி போக்குவரத்தில் இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்ஸி ஒரு மிக முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிக கடுமையான போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டுள்ள பெரு நகர மக்களின் போக்குவரத்திற்கு, இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்ஸி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்ஸியில் மற்றொரு மிக முக்கியமான ப்ளஸ் பாயிண்ட் உள்ளது.

செங்குத்தாகவே ஏறி, இறங்க கூடிய தன்மைதான் அந்த ப்ளஸ் பாயிண்ட். இந்த சிறப்பம்சம் காரணமாக டேக்-ஆஃப் ஆவதற்கும், லேண்டிங் செய்வதற்கும் ரன்வே தேவையில்லை. இன்னும் புரியும்படி சொல்வதென்றால், விமானங்களை போல் அல்லாமல், ஹெலிகாப்டர்களை போல் இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்ஸி செயல்படும்.

பயணிகளின் விரைவான போக்குவரத்திற்கு மட்டுமல்லாது, சரக்கு போக்குவரத்திற்கும் இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்ஸியைநாம் பயன்படுத்த முடியும். இந்தியாவின் வான்வெளியில், கூடிய விரைவில் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை போல், எலெக்ட்ரிக் பறக்கும் டாக்ஸிகளையும் நாம் பார்க்க போகிறோம். இது பறக்கும் டாக்ஸி உருவாக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு கூட பிரம்மிப்பை ஏற்படுத்த கூடிய விஷயமாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

More from DriveSpark

Article Published On: Monday, May 13, 2024, 18:43 [IST]
English summary
Indias first electric flying taxi unveiled by anand mahindra details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+