மழைநீர் சேகரிப்பு, சோலார் விளக்குகள்: நாட்டின் முதல் பசுமை நெடுஞ்சாலையில் உள்ள சிறப்புகள்..!

Written By:

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மற்றும் பசுமை நெடுஞ்சாலையை வரும் ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

நாட்டின் முதல் பசுமை நெடுஞ்சாலையில் பல சிறப்பு வாய்ந்த எதிர்கால தொழிற்நுட்பங்கள் நிறைந்துள்ளது ஆதலால் இது ஸ்மார்ட் நெடுஞ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

நாட்டின் கிழக்கு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் தலைநகர் டெல்லி வழியே செல்லாமல், நகருக்கு வெளியே போக்குவரத்தை திருப்பிவிடும் வகையில் இந்த எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

இது ஈஸ்டர்ன் பெரிபெரல் எக்ஸ்பிரஸ்வே அல்லது நேஷனல் எக்ஸ்பிரஸ்வே-2 என்றும் அழைக்கப்படுகிறது.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

இந்த எக்ஸ்பிரஸ் சாலை ஸ்மார்ட் மற்றும் நுண்ணறிவுமிக்க ஹைவே டிராஃபிக் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் (HTMS) கொண்டதாக இருக்கும்.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

ஹைவே டிராஃபிக் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் என்பது புதிய தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த போக்குவரது அமைப்பு ஆகும்.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

ஹைவே டிராஃபிக் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் பல்வேறு சிறப்பு வசதிகள் கொண்டிருக்கிறது. அவற்றில் சில முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !
  • தானியங்கி வாகன வகைப்படுத்துதல் மற்றும் எண்ணிக்கை
  • வேகம் கண்டறிதல்
  • சிசிடிவி கண்கானிப்பு
  • காலநிலை கண்டறியும் அமைப்பு
  • அவசரகால தொலைத்தொடர்பு வசதி
  • எச்சரிக்கை கருவிகள்
  • ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்
  • வாகன எடை நிலையங்கள்
  • நடைபாதை அமைப்பு
  • பிரத்யேக ஒருங்கிணைந்த தகவல் பெறும் அமைப்பு
நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

இந்த ஸ்மார்ட் எக்ஸ்பிரஸ் சாலையில் மொத்த நீளம் 135 கிமீ ஆகும். 6 லேண்கள் கொண்ட இது 11,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் ஆகும்.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

எனினும் இந்த சாலைத் திட்டத்தின் கட்டமைப்பு செலவு 4,418 கோடி ரூபாய் மட்டுமே.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

இந்த சாலைத் திட்டத்திற்காக நில ஆர்ஜிதம் செய்ய மட்டுமே 5,900 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

இந்தியாவிலேயே இந்த எக்ஸ்பிரஸ் சாலைத் திட்டத்திற்கு மட்டுமே கட்டமைப்பு செலவைக் காட்டிலும் நில ஆர்ஜிதம் செய்ய கூடுதலான தொகை செலவிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

2015ஆம் ஆண்டு நவம்பரில் இந்த திட்டத்திற்கான அடிக்கலை பிரதமர் மோடி நாட்டினார். நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு இதன் கட்டுமானப் பணிகள் 2016 பிப்ரவரியில் துவங்கியது.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

தொழில்நுட்பம் மற்றும் பசுமை ஆகிய இரண்டையும் கலவையாக கொண்ட இந்த எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

இந்த நெடுஞ்சாலை முழுவதும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இதில் பெறும் நீரைக் கொண்டு சொட்டு நீர் முறையில் இங்கு நடப்பட்டுள்ள செடிகளுக்கு தண்ணீர் அளிக்கப்படும்.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

மேலும் மரபு சாரா எரிசக்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த நெடுஞ்சாலைக்கு மின்சக்தி அளிக்கப்பட உள்ளது. இதற்காக சோலார் பேனல்கள் கொண்ட மின்கம்பங்கள் நடப்பட்டு வருகின்றன.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

இந்த நெடுஞ்சாலை முழுக்க தானியங்கி போக்குவரத்து மேலாண்மை அமைப்பு மூலம் இயங்க இருப்பது சிறப்பான ஒன்றாகும்.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

மேலும் இந்த ஹைவேயில் பயணம் செய்யும் வாகனங்கள் எலெக்ட்ரானிக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தும் வகையில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

அதேபோல மொத்த சாலைக்கும் அல்லாமல் பயணம் செய்யும் தூர அடிப்படையில் மட்டுமே இதற்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

இது தடையற்ற போக்குவரத்து அனுபவத்தை வாகன ஓட்டிகளுக்கு அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

ஈஸ்டர்ன் பெரிபெரல் எக்ஸ்பிரஸ்வேயில் ஒவ்வொரு 25 கிமீ இடைவெளியிலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறைகள் அமைக்கப்படும்.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

இது மட்டுமல்லாமல் சாலையில் குறிப்பிட்ட இடைவெளியில் ஓய்வு எடுக்கும் அமைப்பு, வாகன பழுதுநீக்கு மையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை அமைக்கப்படும்.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

பசுமைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வரும் இந்த நெடுஞ்சாலை இந்தியாவிலேயே முன்மாதிரியாக இருக்கும் என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

சுங்கச்சாவடி, ஓய்வு நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகள் அதிகப்படியான மரங்கள், சோலார் மின்சக்தி, நீரூற்று ஆகியவை கொண்டிருக்கும்.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

இந்த எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறக்கப்படும் போது இரண்டு லட்சம் வாகனங்கள் டெல்லி வழியே செல்லாமல் தடுக்கப்படும்.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

இதன் காரணமாக தலைநகர் டெல்லிக்கு மாசுவின் பிடியில் இருந்து விடுதலை கிடைக்க இருக்கிறது.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மற்றும் பசுமை நெடுஞ்சாலையில் 400 கட்டமைப்புகள், 8 சந்திப்புகள், 4 மேம்பாலங்கள் ஆகியவை உள்ளது.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

இதில் இரண்டு மேம்பாலங்கள் மிகவும் பெரியது. இதில் ஒன்று யமுனை நதிக்கு மேலாகவும், மற்றொன்று ஹிந்தன் மற்றும் ஆக்ரா கனவாய் மேலாகவும் கடக்க கட்டப்பட்டது ஆகும்.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

10.2 லட்சம் டன் சிமெண்டு, ஒரு லட்சம் டன் உருக்கு, 19 லட்சம் டன் மணல் மற்றும் 50 லட்சம் டன் இதர பொருட்கள் கொண்டு இந்த நேஷனல் எக்ஸ்பிரஸ்-2 கட்டமைக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

7,275 தொழிலாலர்களின் கடின உழைப்பில் உருவாகி வரும் இந்த எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் முதல் ஸ்மார்ட் - பசுமை நெடுஞ்சாலையின் சிறப்புகள் !

சுற்றுச்சூழலை பேணும் வகையிலும், தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டிருக்கும் இந்த முன்மாதிரி நெடுஞ்சாலை டெல்லியின் மாசு பிரச்சனைகளுக்கும் விடுதலை அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about India's first green, smart expressway to be inaugurated soon by modi. know more details about eastern peripheral expressway or national expressway-2.
Story first published: Saturday, April 29, 2017, 13:35 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos