அமராவதி- விஜயவாடா இடையே இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து!

அமராவதி- விஜயவாடா இடையே இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து தடம் அமைக்கப்பட உள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

ஆந்திர மாநிலம் அமராவதி- விஜயவாடா நகரங்களுக்கு இடையே இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து தடம் அமைக்கப்பட உள்ளது. ஆந்திர அரசு மற்றும் ஹைப்பர்லூப் நிறுவனம் இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அமராவதி- விஜயவாடா இடையே இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து!

மணிக்கு 1,200 கிமீ வேகம் வரை செல்லும் ஹைப்பர்லூப் சாதனம் எதிர்கால போக்குவரத்து தேவைகளை கச்சிதமாக நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிவேக போக்குவரத்து சாதனத்தையும், அதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்குவதில் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அமராவதி- விஜயவாடா இடையே இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து!

இந்த நிலையில், இந்த போக்குவரத்து இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன. ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக உருவாக்கப்படும் அமராவதி நகருக்கும், விஜயவாடா நகருக்கும் இடையில் இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி இருக்கின்றன.

அமராவதி- விஜயவாடா இடையே இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து!

இதற்காக, ஹைப்பர்லூப் போக்குவரத்து நிறுவனத்திற்கும், ஆந்திர மாநில பொருளாதார மேம்பாட்டு வாரியத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது. முதல்முறையாக ஹைப்பர்லூப் போக்குவரத்துக்காக முறையாக போடப்பட்டிருக்கும் முதல் ஒப்பந்தமாக இது தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அமராவதி- விஜயவாடா இடையே இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து!

அரசு மற்றும் தனியார் முதலீட்டு திட்டத்தின் கீழ் இந்த புதிய போக்குவரத்து கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இந்த புதிய போக்குவரத்து சாதனத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக அக்டோபர் மாதத்தில் ஆய்வுப் பணிகள் துவங்கப்படுகிறது. முதல் கட்டமாக 6 மாதங்களுக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

அமராவதி- விஜயவாடா இடையே இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து!

அதன் பின்னர், ஹைப்பர்லூப் போக்குவரத்துக்கான தடம் அமைக்கும் பணிகள் துவங்கப்படும். அமராவதி- விஜயவாடா நகரங்களுக்கு இடையிலான ஒரு மணி நேர பயணத்தை, இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து சாதனம் வெறும் 5 நிமிட பயண நேரத்தில் இணைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அமராவதி- விஜயவாடா இடையே இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து!

இந்த புதிய போக்குவரத்து மூலமாக ஆந்திராவில் 2,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும், அந்த பகுதியின் பொருளாதாரத்திற்கும் இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமராவதி- விஜயவாடா இடையே இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து!

ஆந்திராவை தொடர்ந்து இதர மாநிலங்களும் இந்த புதிய ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் விமான போக்குவரத்தின் வேகம் என இரண்டின் கலவையாக இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
India’s First Hyperloop Connecting Vijayawada and Amaravati.
Story first published: Wednesday, September 6, 2017, 21:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X