இந்தியாவில் யார்கிட்டயும் இப்படியொரு கார் இல்ல - குடும்பத்துடன் ஜாலியாக டெலிவிரி எடுத்த கேரள தொழிலதிபர்!!

உலகளவில் கூட உங்களால் பரவலாக பச்சை நிறத்திலான கார்களை பார்ப்பது அரிதாகவே இருக்கும். ஏனெனில், கார்களை பச்சை நிறத்தில் வாங்கவோ அல்லது வாங்கிய பின்னர் அதற்கு பச்சை நிற பெயிண்ட்டை கொடுக்கவோ பலர் விரும்புவதில்லை. பெரும்பாலும் விலையுயர்ந்த சொகுசு கார்கள் தான் அரிதாக பச்சை நிறத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. அதேநேரம் சிலர் தங்களது கார்களை பிரத்யேகமாக பச்சை நிறத்திற்கு பெயிண்ட் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் இங்கு ஒரு லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 கார் பிரத்யேகமான பச்சை நிறத்தில் கேரளாவில் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இவ்வாறு ஒரு எஸ்யூவி கார் பச்சை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை ஆகும். உலகளவில் லேண்ட் ரோவர் கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் நாடுகளுள் நம் இந்தியாவும் ஒன்றாகும். குறிப்பாக, மலையாள மக்கள் லேண்ட் ரோவர் கார்களை அதிக எண்ணிக்கையில் வாங்குவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

land rover defender in green

லேண்ட் ரோவர் கார்களுக்கு இந்திய மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைப்பதற்கு முக்கிய காரணம், அவற்றின் விலை அதிகமாக இருப்பினும் அந்த அளவிற்கு அவை பிரம்மாண்டமானதாக இருப்பதாகும். லேண்ட் ரோவர் கார்களில் டிஃபெண்டர் கார்கள் மாடர்ன் தரத்தில் உருவாக்கப்படுகின்றன. அத்தகைய டிஃபெண்டர் காரை தான் பிரத்யேகமான பச்சை நிறத்தில் கேரளாவில் ஒரு வாடிக்கையாளர் வாங்கி உள்ளார்.

இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார்கள் 90, 110 மற்றும் 130 என 3 விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், டிஃபெண்டர் 110 கார் தற்போது பிரத்யேகமான பச்சை நிறத்தில் கேரளாவில் வாங்கப்பட்டுள்ளது. இந்த பச்சை நிறத்தை மம்பா பச்சை என அழைக்கின்றனர். இந்த பச்சை நிறத்தில் டிஃபெண்டர் 110 காரை வாங்கியிருக்கும் கேரள வாடிக்கையாளரின் பெயர் பிரேம்ஷா ஆகும்.

land rover defender in green

கேரளா மாநிலம் கொல்லம் அனச்சலில் இயங்கிவரும் ஆட்டோபேக்ஸ் நிறுவனத்தை விபின் என்பவருடன் இணைந்து, பிரேம்ஷா நடந்தி வருகிறார். ஆட்டோபேக்ஸ் ஆனது ஓர் டூர் பிளானர் நிறுவனம் ஆகும். தமிழில் சொல்ல வேண்டுமென்றால், சுற்றுலா பயணங்களை வகுத்து, அதற்கேற்ப வாடிக்கையாளர்களை அழைத்து செல்லும் நிறுவனமாகும். ஆட்டோபேக்ஸ் நிறுவனத்தின் கீழ் பல்வேறு வாகனங்கள் செயல்படுகின்றன.

இத்தகைய நிறுவனத்தை செயல்படுத்தும் பிரேம்ஷா கொச்சியில் உள்ள முத்தூட் மோட்டார்ஸ் என்கிற டீலர்ஷிப் ஷோரூம் மூலமாக மம்பா பச்சை நிறத்தில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 காரை வாங்கியுள்ளார். இந்தியாவில் இப்போதுவரையில் 1200க்கும் அதிகமாக டிஃபெண்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவை எல்லாவற்றை விடவும் பிரேம்ஷாவின் பச்சை நிற டிஃபெண்டர் 110 கார் வித்தியாசமானது மற்றும் ஸ்பெஷல் ஆனது ஆகும்.

land rover defender in green

இந்தியாவில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எந்த என்ஜின் ஆப்ஷனில் பிரேம்ஷா டிஃபெண்டர் காரை வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. இந்த காரில் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 4-வீல் டிரைவ் சிஸ்டம் இணைக்கப்படுகிறது.

டிஃபெண்டர் கார்களின் சிறப்பம்சம் என்னவென்றால், இவை விலையுயர்ந்ததாக உருவாக்கப்பட்டாலும், இவற்றை கரடு முரடான சாலைகளுக்கும் கொண்டு செல்லலாம். டிஃபெண்டர் கார்களின் நீளம் 5,018மிமீ, அகலம் 2,008மிமீ, உயரம் 1,967மிமீ மற்றும் காரின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 3,022மிமீ ஆகும். இந்த காருக்கு உள்ளே 12.3 இன்ச்சில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் 10-இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸடம் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், பச்சை நிறத்தில் காரை வாங்க யாரும் பெரியதாக விரும்பதில்லை. இதனால், ஆட்டோபேக்ஸ் நிறுவனத்தின் பிரேம்ஷா வாங்கியிருக்கும் மம்பா பச்சை நிற டிஃபெண்டர் 110 கார் ஆனது சாலையில் தனியாக தெரியும் என்பது உறுதி. லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வைத்திருந்தாலே தனி கெத்துதான். அதிலிலும் இந்த நபர் பச்சை நிறத்தில் இந்த காரை வாங்கியிருப்பது தனி சிறப்பு ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 2, 2024, 8:00 [IST]
English summary
Indias first land rover defender in green colour check all details here
மேலும்... #off beat #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X