ஆளை பார்த்தால் தமிழ்காரர் மாதிரி உள்ளார்! இந்தியாவிலேயே இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காருக்கு இவர்தான் முதல் கஸ்டமர்!!

ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce), பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான அல்ட்ரா-லக்சரி கார் நிறுவனம். ரோல்ஸ்-ராய்ஸ் காரை வைத்திருந்தாலே தனி கெத்து என நினைக்க கூடியவர்கள் தான் நம் நாட்டில் அதிகம் பேர் இருக்கின்றனர். இதனாலேயே பெரும் செல்வந்தர்களாகி விட்டாலே எப்படியாவது குறைந்தது ஒரு ரோல்ஸ்-ராய்ஸ் காரை ஆவது வாங்கிவிட வேண்டும் என பலரும் நினைக்கின்றனர். இந்த நிலையில், இந்தியாவிலேயே முதல் ஆளாக ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 2 பிளாக் பேட்ஜ் (Ghost Series 2 Black Badge) காரை இந்திய தொழிலதிபர் ஒருவர் வாங்கியுள்ளார். அவரை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

கேரள மக்கள் சொகுசு கார்கள் என்றாலே கொள்ளை பிரியம் கொண்டவர்கள் என்பதை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். ஆனால், இந்தியாவின் முதல் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 2 பிளாக் பேட்ஜ் காரை மலையாளத்தவர் ஒருவர் வாங்குவார் என்பதை எதிர்பார்க்கவே இல்லை. கேரளாவின் கொச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐடி நிறுவனமான லிட்மஸ்7 (Litmus7) நிறுவனத்தை பற்றி அவ்வப்போது நமது செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம்.

india s first rolls-royce ghost series-2

இந்த நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கும் வேணு கோபாலகிருஷ்ணன் ஓர் லக்சரி கார் பிரியர் ஆவார். அவ்வப்போது விலையுயர்ந்த கார்களை வாங்கி போடக்கூடிய பழக்கம் கொண்டவராக விளங்கும் வேணு கோபாலகிருஷ்ணன், சமீபத்தில் ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்காக சுமார் ரூ.46 லட்சத்தை செலவு செய்தது நாடு முழுக்க வைரலாகியது. அதுகுறித்து நமது செய்தித்தளத்தில் கூட விரிவாக பார்த்திருந்தோம்.

இந்த ஃபேன்சி நம்பர் பிளேட்டை தனது லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மண்டே (Lamborghini Urus Performante) காருக்காக வாங்கிய வேணு கோபாலகிருஷ்ணன் தற்போது இந்தியாவிலேயே முதல் ஆளாக ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 2 பிளாக் பேட்ஜ் காரை வாங்கியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக, இந்த அரிதான ரோல்ஸ்-ராய்ஸ் கார் வேணு கோபாலகிருஷ்ணனின் குடும்பத்தாரிடம் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.

india s first rolls-royce ghost series-2

இந்தியாவில் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்திற்கு மொத்தமாக 4 நகரங்களில் மட்டுமே ஷோரூம்கள் உள்ளன. டெல்லி, மும்பை, சென்னை மற்றும் ஹைதராபாத் என்பன அந்த 4 நகரங்கள் ஆகும். அப்படியென்றால், தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணன் எவ்வாறு கேரளாவில் இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரை டெலிவிரி பெற்றுள்ளார் என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம்.

இவர் சென்னையில் இருந்து தனது கோஸ்ட் சீரிஸ் 2 பிளாக் பேட்ஜ் காரை வரவழைத்துள்ளார். வேணு கோபாலகிருஷ்ணனின் இந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் பிளாக் டைமண்ட் மற்றும் கன் மெட்டல் நிறங்களில் ஜொலிக்கிறது. அதேநேரம் காருக்குள் கேபின் ஆனது பீனிக்ஸ் ரெட் மற்றும் பிளாக் என்கிற பிரத்யேகமான ட்யூயல்-டோன் நிறங்களில் உள்ளது.

கோஸ்ட் காரின் சீரிஸ் 2 மாடலையும், அதன் பிளாட் பேட்ஜ் வெர்சனையும் கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில்தான் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. ரூ.10.51 கோடி என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த புதிய கோஸ்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் பெயரில் உள்ள சீரிஸ் 2 என்பது இது ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் காரின் 2ஆம் தலைமுறை வெர்சன் என்பதை குறிக்கிறது.

முந்தைய முதலாம் தலைமுறை மாடல் உடன் ஒப்பிடுகையில் 2ஆம் தலைமுறை ஆனது தோற்றத்திலும் சரி, தொழிற்நுட்ப அம்சங்களிலும் சரி மேம்பட்டதாக உள்ளது. மேம்படுத்தப்பட்ட ஹெட்லேம்ப் டிசைன், மறுவேலை செய்யப்பட்ட பம்பர்கள், சிறந்த டிசைனில் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை கோஸ்ட் சீரிஸ் 2 காரின் சிறப்பம்சங்கள் ஆகும். சுமார் 5.5 மீட்டர்களில் நீளம் கொண்ட இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரில் 6.75 லிட்டர் வி12, ட்வின்-டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரோல்ஸ்-ராய்ஸ் கார் ஒன்றை நேரில் பார்ப்பதே நம்மில் நிறைய பேருக்கு கனவாக இருக்கும் சூழலில், இந்தியாவிலேயே குறிப்பிட்ட ரோல்ஸ்-ராய்ஸ் கார் ஒன்றை ஒருவர் முதல் ஆளாக வாங்கி இருக்கிறார் என்பது ஆச்சிரியமாக உள்ளது. இதைவிட ஆச்சிரியம் என்னவென்றால், இந்த கார் சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்டு இருப்பதாகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 17, 2025, 23:59 [IST]
English summary
Indias first rolls royce ghost series 2 black badge car delivered to kerala businessman
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+