தண்ணீரில் இயங்கும் விமான சேவை, குஜராத்தில் தொடக்கம்!! வேற லெவல் திட்டங்களை கொண்டுவரும் மோடி

குஜராத் மாநிலத்தில் 'சீ ப்ளேன்' என அழைக்கப்படும் கடல் விமான சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த கடல் விமான சேவையை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

தண்ணீரில் இயங்கும் விமான சேவை, குஜராத்தில் தொடக்கம்!! வேற லெவல் திட்டங்களை கொண்டுவரும் மோடி

இந்திய முன்னாள் பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் வருடாவருடம் அக்டோபர் 31ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக 2018ல் இந்த தினத்தில் வல்லபாய் பட்டேல்லின் மிக பெரிய உருவ சிலை ‘ஒற்றுமையின் வலிமை' என்ற பெயரில் திறக்கப்பட்டது.

தண்ணீரில் இயங்கும் விமான சேவை, குஜராத்தில் தொடக்கம்!! வேற லெவல் திட்டங்களை கொண்டுவரும் மோடி

நம் நாட்டு மக்களில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரையிலானவர்களை வெகுவாக கவர்ந்துவரும் இந்த சிலை குஜாராத்தில் மிக முக்கியமான சுற்றுலா தளங்களுள் ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஊரடங்கு உத்தரவுகளினால் சில மாதங்கள் மூடப்பட்டிருந்த இந்த சுற்றுலா இடத்திற்கு கடந்த சில வாரங்களாக அதிகளவில் மக்கள் வர துவங்கியுள்ளனர்.

தண்ணீரில் இயங்கும் விமான சேவை, குஜராத்தில் தொடக்கம்!! வேற லெவல் திட்டங்களை கொண்டுவரும் மோடி

அதிலும் இன்று வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்திருப்பர். இந்த நிலையில்தான் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தும் விதமாக ‘ஒற்றுமை சிலை'-ஐ காண கடல் விமான (சீ பிளேன்) சேவை இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது.

தண்ணீரில் இயங்கும் விமான சேவை, குஜராத்தில் தொடக்கம்!! வேற லெவல் திட்டங்களை கொண்டுவரும் மோடி

ராஷ்டிரிய ஏக்தா திவாஸ் என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் மூலம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த கடல் விமானம் முதற்கட்டமாக அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து நர்மதா மாவட்டம், கெவாடியா காலனியில் உள்ள ஒற்றுமை சிலை வரையில் செல்லும்.

தண்ணீரில் இயங்கும் விமான சேவை, குஜராத்தில் தொடக்கம்!! வேற லெவல் திட்டங்களை கொண்டுவரும் மோடி

200 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய இந்த விமான பயணத்தின் மூலம் பயணத்தை 45 நிமிடங்களாக குறைக்க முடியும். அதுவே வழக்கமான சாலை பயணம் நான்கு மணிநேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுதான் இந்தியாவின் முதல் கடல் விமான பயணமாகும். இந்த சேவையை ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் ஏற்று கொண்டுள்ளது.

தண்ணீரில் இயங்கும் விமான சேவை, குஜராத்தில் தொடக்கம்!! வேற லெவல் திட்டங்களை கொண்டுவரும் மோடி

ஒரு நாளை இரண்டு முறை என்கிற வீதத்தில் இயக்கப்படவுள்ள கடல் விமானத்தில் பயணம் செய்ய ஒருவருக்கு குறைந்தபட்சம் ரூ.1,400-ல் இருந்து ரூ.4,800 வரையில் செல்வாகும். 19 நபர்கள் பயணம் செய்ய முடியும் என்றாலும், 12 பேர் வரையில் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

தண்ணீரில் இயங்கும் விமான சேவை, குஜராத்தில் தொடக்கம்!! வேற லெவல் திட்டங்களை கொண்டுவரும் மோடி

‘சீ பிளேன்' பயணத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் சின்னத்தை முதல் ஸ்பைஸ்ஜெட் விமானம் எடுத்துச் சென்றது. இரண்டு நாள் பயணமாக குஜராத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுவரும் மோடி இந்த நிகழ்ச்சி உள்பட அந்த மாநிலத்தில் மேலும் சில நிகழ்ச்சிகளையும் முடித்து கொண்டுள்ளார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
PM Narendra Modi Launches Sea Plane Flight Service
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X