வந்தே பாரத் எல்லாம் ஓரமா போ! புதிய ரேபிட் ரயிலை அறிமுகப்படுத்தப்போகும் பிரதமர் மோடி!
இந்தியாவின் முதல் ரேபிட் ரயிலாக டெல்லியில் இருந்து காஸியாபாத் வழியாக மீரட் பகுதியை இணைக்கும் முதல் ரேபிட் எக்ஸ் சிஸ்டம் ரயில் அடுத்த வாரம் அறிமுகமாக போகிறது. பிரதமர் மோடி இந்த ரயிலை துவக்கி வைக்கிறார். இந்த ரயில் சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சிங்கப்பூர் நாட்டில் எம்ஆர்டி எனப்படும் அதிவேக ரயில் பயன்பாட்டில் இருக்கிறது. மக்கள் பலர் அந்நாட்டில் அந்த ரயில்களை தான் அதிகம் பயன்படுத்தி பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவிற்கான எம்ஆர்டி சிஸ்டமாக டில்லியில் இருந்து காஸியாபாத் வழியாக மீரட் பகுதியை இணைக்கும் வகையில் ரேப்பிட் எக்ஸ் ரயில் சிஸ்டம் கட்டமைக்கப்பட்டு வந்தது. இது தற்போது அறிமுகத்திற்கு தயாராகியுள்ளது.

இந்த சிஸ்டத்தை அடுத்த வாரம் பிரதமர் மோடி துவக்கி வைக்க போகிறார். டில்லியிலிருந்து மீரட் வரை மொத்தம் 82.1 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த ரயில் ஓட போகிறது. இதில் முதற்கட்டமாக ஷாபிபாபாத் முதல் தூஹாய் வரை மொத்தம் 17 கிலோ மீட்டருக்கு மட்டுமே இந்த சேவை துவங்க உள்ளது. டெல்லியில் முதல் மீரட் வரை முழுமையான சேவை 2025 ஆம் ஆண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரேபிட் ரயிலை பொறுத்தவரை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ரயிலாகும். இது ஏரோ டைனமிக்ஸ் முறையில் நீளமான மூக்குப்பகுதி கொண்ட ரயிலாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த ரயில் அதிக வேகத்தில் பயணிக்க முடியும். மேலும் இந்த ரயிலில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் பெரிய அளவில் வழங்கப்பட்டுள்ளன.

ரேபிட் ரயிலில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் பெரிதாக இருப்பதால் இதில் பயணிக்கும் பயணிகளுக்கு அகலமான வியூ கிடைக்கும். மேலும் இந்த ரயில் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. இதனால் இந்த ரயிலில் வந்து இறங்கி நேரடியாக மெட்ரோ ரயிலுக்கு மாறி அதன் மூலம் உள்ளூர்களில் பயணம் செய்ய ஏதுவாக இருக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் போலவே இந்த ரயில் பயணிக்கும் தண்டவாளங்களும் ஜல்லி கற்கள் இல்லாத தண்டவாளங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண ரயில்கள் தண்டவாளங்களில் அசைவு இல்லாமல் இருக்க ஜல்லி கற்கள் கொட்டப்படுவது வழக்கம். ஆனால் இந்த ரேப்பிட் ரயில் பயணிக்கும் தண்டவாளத்தில் இப்படியான ஜல்லி கற்கள் தேவையில்லை.

ரேபிட் ரயில் சேவை பெருமலான மாசுவை குறைக்கிறது. டில்லி முதல் மீரட் வரை உள்ள இந்த ரேப்பிட் ரயில் ஒரு ஆண்டிற்கு 2.5 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை குறைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயிலில் கவச் தொழில்நுட்பம் இருப்பதால் விபத்துக்கள் தவிர்க்கப்படும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
ரயிலை வந்தே பாரத் ரயிலுக்கு போட்டியாக பார்க்கின்றனர். வந்தே பாரத் ரயில் என்பது சாதாரண ரயில் தண்டவாளத்தில் இயங்கக்கூடிய வகையிலான ரயில் ஆகும். ஆனால் இந்த ரேபிட் ரயில் தண்டவாளம் என்பது இதற்கான பிரத்தியேகமான ரயில் பாதைகள் அமைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் இந்த ரயில் இயக்க முடியும்.
மத்திய அரசு இந்த ரேபிட் ரயில் திட்டத்தை ஒரு சோதனை முயற்சியாகவே டெல்லி முதல் மீரட் வரை கட்டமைத்துள்ளது. இது வெற்றி பெரும் பட்சத்தில் குறுகிய தொலைவில் உள்ள இரண்டு பெரிய நகரங்களை இணைக்கும் வகையில் இது உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உதாரணமாக தமிழகத்தை பொறுத்தவரை கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய நகரங்கள் அருகருகே இருந்தாலும் இதன் தூரம் சற்று அதிகம் என்பதால் இந்த நகரங்களை இணைக்க மெட்ரோ ரயில் சேவையை விட இந்த ரேபிட் ரயில் தேவை தான் ரொம்ப உதவியாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் நிலையில் தற்போது ரேபிட் ரயில் சேவையும் துவங்குவது மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கும். தற்போது வட இந்தியாவில் மட்டும் இந்த சேவையை அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் நிலையில் விரைவில் தமிழகம் உட்பட தென்னிந்தியாவிற்கும் இந்த ரேபிட் டிரைவ் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications









