இந்தியாவிடம் சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...

சர்வதேச அளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வரும் சூழலில், உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை சரணடைய தொடங்கியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியத்தையும், பெருமிதத்தையும் ஏற்படுத்தலாம்.

இந்தியாவை சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...

இந்தியாவின் விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ (ISRO-Indian Space Research Organisation), விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை படைத்து கொண்டுள்ளது. மிக குறைந்த செலவில் இஸ்ரோ வெற்றிகரமாக செயல்படுத்தும் திட்டங்கள் உலகின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இந்தியாவை சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...

செவ்வாய் கிரகத்திற்கு இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான், பூமியின் துணைக்கோளான நிலவிற்கு அனுப்பிய சந்திராயன்-1 ஆகிய செயற்கைகோள்களின் வெற்றி, இஸ்ரோ அமைப்பின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகின்றன.

இந்தியாவை சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...

மங்கள்யான் திட்டத்திற்கு இஸ்ரோ செலவிட்ட தொகை வெறும் 450 கோடி ரூபாய் மட்டுமே. அதேபோல் சந்திராயன்-1 திட்டத்திற்கு ஆன செலவு வெறும் 380 கோடி ரூபாய்தான். தற்போது சந்திராயன்-2 செயற்கைகோளை விண்ணில் ஏவும் பணியில் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது.

இந்தியாவை சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...

சந்திராயன்-2 திட்டத்தின் பட்ஜெட் 800 கோடி ரூபாய் மட்டுமே. இவ்வளவு குறைந்த செலவில், விண்வெளி ஆராய்ச்சிகளை மிக வெற்றிகரமாக மேற்கொள்வதால்தான், இஸ்ரோ அமைப்பு உலகம் முழுக்க கவனம் ஈர்த்து கொண்டுள்ளது.

இந்தியாவை சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பாக விளங்கும் நாசா (NASA - National Aeronautics and Space Administration), ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு அமைப்பான ராஸ்காஸ்மோஸ் (Roscosmos) ஆகிய அமைப்புகள் தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்தியாவை சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...

ஆனால் நாசா, ராஸ்காஸ்மோஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு இணையாக இந்தியாவின் இஸ்ரோ வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. குறிப்பாக நானோ சாட்டிலைட் (Nano-Satellite) எனப்படும் சிறிய செயற்கைகோள்களை ஏவுவதில் இஸ்ரோ தற்போதே தலை சிறந்து விளங்குகிறது.

MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

இந்தியாவை சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...

வழக்கமான செயற்கைகோள்களில் காணப்படும் அதே செயல்திறன் நானோ சாட்டிலைட்களிலும் இருக்கும். ஆனால் நானோ சாட்டிலைட்களை தயாரிக்க ஆகும் செலவு மிகவும் குறைவு. எனவே தற்போது நானோ சாட்டிலைட் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

இந்தியாவை சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...

ராக்கெட்கள் மூலமாகதான் செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டு, அங்கு நிலை நிறுத்தப்படுகின்றன. ஆனால் அதிக எடை கொண்ட பெரிய செயற்கைகோள்களை விண்ணில் ஏவுவதில் பல்வேறு பிரச்னைகள் நிலவி கொண்டுள்ளன.

இந்தியாவை சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...

இதன் காரணமாகவும் எடை குறைந்த நானோ சாட்டிலைட்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கற்று கொள்ள உலக நாடுகள் ஆர்வமாக உள்ளன. ஏற்கனவே குறிப்பிட்டபடி நானோ செயற்கைகோள்களை தயாரிக்க ஆகும் செலவு குறைவு என்பதும் இதற்கு ஒரு முக்கியமான காரணம்.

இந்தியாவை சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...

ஆனால் நானோ சாட்டிலைட்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தில், இந்தியாவின் இஸ்ரோ அமைப்புதான் உலகிற்கே முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. எனவே இஸ்ரோவிடம் இருந்து நானோ சாட்டிலைட் தொழில்நுட்பத்தை கற்று கொள்ள உலகின் பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.

இந்தியாவை சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...

இந்த சூழலில் உலக நாடுகளுக்கு நானோ சாட்டிலைட் தொழில்நுட்பத்தை கற்று கொடுக்க இஸ்ரோ அமைப்பு தற்போது முன்வந்துள்ளது. ஒன்றல்ல... இரண்டல்ல... உலகில் மொத்தம் 45 நாடுகள் இஸ்ரோவிடம் பாடம் படிக்கவுள்ளன.

இந்தியாவை சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...

யுனிஸ்பேஸ் நானோ சாட்டிலைட் அசெம்பிளி மற்றும் டிரெய்னிங் (Unispace Nanosatellite Assembly and Training-UNNATI) என்ற பெயரில், நானோ சாட்டிலைட்களை தயாரிப்பது குறித்து, உலகின் 45 நாடுகளுக்கு இஸ்ரோ கற்று தரவுள்ளது.

MOST READ: ரூ.12.69 லட்சத்தில் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவை சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...

இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் மற்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர். இஸ்ரோ அமைப்பு மொத்தம் 3 கட்டங்களாக உலக நாடுகளுக்கு இந்த பயிற்சியை வழங்கவுள்ளது.

இந்தியாவை சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...

இதன்படி முதற்கட்டமாக அல்ஜீரியா, அர்ஜென்டினா, அஜர்பைஜான், பூடான், பிரேசில், கஜகஸ்தான், சிலி, எகிப்து, இந்தோனேஷியா, மலேசியா, மெக்ஸிகோ, மங்கோலியா, மொராக்கோ, மியான்மர், ஓமன், பனாமா மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய 17 நாடுகளுக்கு இஸ்ரோ பயிற்சி அளிக்கவுள்ளது.

இந்தியாவை சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...

எஞ்சிய 28 நாடுகளுக்கு அடுத்த 2 கட்டங்களில் பயற்சி வழங்கப்படும். பெங்களூருவில் உள்ள யு.ஆர். ராவ் செயற்கைகோள் மையத்தில் (U.R. Rao Satellite Centre-URSC), எட்டு வாரங்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இந்தியாவை சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...

யு.ஆர். ராவ் என்பவர் இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் ஆவார். இவரது வழிகாட்டுதலின் படிதான், இந்தியாவின் முதல் செயற்கைகோளான ஆர்யபட்டா விண்ணில் ஏவப்பட்டது. அவரது பெயரில் தற்போது பெங்களூருவில் இயங்கி வரும் செயற்கைகோள் மையத்தில்தான் பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்தியாவை சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...

இவ்வளவு நாட்களாக விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பல்வேறு விஷயங்களில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்தன. இதன்மூலம் உலக நாடுகளுக்கு அவை சிறு சிறு உதவிகளையும் செய்து வந்தன.

இந்தியாவை சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...

இதனை காரணமாக வைத்து அந்த நாடுகளின் மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்துவதையும் அவை வழக்கமாக வைத்திருந்தன. ஆனால் தற்போது அந்த நிலை மெல்ல மெல்ல மாறி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

MOST READ: பசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...

இந்தியாவை சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...

குறிப்பாக சர்வதேச அளவில் தற்போது இந்தியாவின் ஆதிக்கம் மேலோங்க தொடங்கியுள்ளது. அதிலும் விண்வெளி ஆராய்ச்சியில், உலகின் பல்வேறு நாடுகளும் இந்தியாவினுடைய உதவியைதான் நாடி வருகின்றன. நானோ செயற்கைகோள் தயாரிப்பு பயிற்சி அதற்கு ஓர் உதாரணம் மட்டுமே.

இந்தியாவை சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...

முன்னதாக வெளிநாடுகளின் செயற்கைகோள்களை இஸ்ரோ அமைப்பு இந்தியாவில் இருந்து விண்ணில் ஏவி வருவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய காரணங்களால், உலக அளவிலான தலைப்பு செய்திகளில் இஸ்ரோ இடம்பிடித்து வருகிறது. இதற்கான பெருமை முழுவதும் நம் நாட்டு விஞ்ஞானிகளையே சாரும்.

Note: Images for symbolic purpose only.

Image Courtesy: ISRO

Most Read Articles

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
India's ISRO Will Teach 45 Countries On How To Launch Nano-Satellites. Read in Tamil
 
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more