சீனாவுக்கு போட்டியாக இந்திய சாலைகளில் நிறுவப்படும் அதிநவீன டவர்கள்... மிரண்டு கிடக்கும் வல்லரசுகள்..

சீனாவுக்கு போட்டியாக இந்திய சாலைகளில் அதிநவீன டவர்கள் நிறுவப்படவுள்ளன. உலகின் வல்லரசுகள் என தம்பட்டம் அடித்து கொள்ளும் நாடுகள் கூட இன்னும் இந்த டவர்களை கண்டறியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்கு போட்டியாக இந்திய சாலைகளில் அதிநவீன டவர்கள் நிறுவப்படவுள்ளன. உலகின் வல்லரசுகள் என தம்பட்டம் அடித்து கொள்ளும் நாடுகள் கூட இன்னும் இந்த டவர்களை கண்டறியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்கு போட்டியாக உலகின் மிகப்பெரிய காற்று தூய்மைபடுத்தும் கருவியை கண்டறிந்தது இந்தியா...

சர்வதேச அளவில் காற்று மாசுபாடு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமல்லாது, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளும் கூட காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி தவித்து வருகின்றன.

சீனாவுக்கு போட்டியாக உலகின் மிகப்பெரிய காற்று தூய்மைபடுத்தும் கருவியை கண்டறிந்தது இந்தியா...

உலக சுகாதார நிறுவனம் (World Health Organization-WHO) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ''உலகில் மிக மோசமாக காற்று மாசுபாடு அடைந்துள்ள முதல் 10 நகரங்களில், 6 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை'' என கூறப்பட்டுள்ளது.

சீனாவுக்கு போட்டியாக உலகின் மிகப்பெரிய காற்று தூய்மைபடுத்தும் கருவியை கண்டறிந்தது இந்தியா...

இதில், இந்தியாவின் தலைநகர் புது டெல்லி முதலிடத்தில் இருப்பது வருத்தமான விஷயம். காற்று மாசுபாடு பிரச்னை காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 12 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர் என மற்றொரு அறிக்கை கூறுகிறது.

சீனாவுக்கு போட்டியாக உலகின் மிகப்பெரிய காற்று தூய்மைபடுத்தும் கருவியை கண்டறிந்தது இந்தியா...

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள்தான், காற்று மாசுபாட்டிற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன. பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையானது, சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி கொண்டுள்ளது.

சீனாவுக்கு போட்டியாக உலகின் மிகப்பெரிய காற்று தூய்மைபடுத்தும் கருவியை கண்டறிந்தது இந்தியா...

எனவே இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளும் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை வெகு வேகமாக குறைத்து கொண்டு வருகின்றன. அதற்கு பதிலாக பொதுமக்களிடையே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

சீனாவுக்கு போட்டியாக உலகின் மிகப்பெரிய காற்று தூய்மைபடுத்தும் கருவியை கண்டறிந்தது இந்தியா...

இதுதவிர காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் மற்றும் குறைக்கும் வகையிலான புதிய நவீன கருவிகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளும் ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்று கொண்டுதான் உள்ளன. இதில், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் ஈடுபட்டுள்ளனர்.

சீனாவுக்கு போட்டியாக உலகின் மிகப்பெரிய காற்று தூய்மைபடுத்தும் கருவியை கண்டறிந்தது இந்தியா...

இந்த சூழலில் டெல்லியை சேர்ந்த குரின் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் 40 அடி உயர ப்யூரிஃபையர் (Purifier) ஒன்றினை டிசைன் செய்துள்ளது. 3 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் சுமார் 75 ஆயிரம் மக்களுக்கு இந்த ப்யூரிஃபையர் சுத்தமான காற்றினை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்கு போட்டியாக உலகின் மிகப்பெரிய காற்று தூய்மைபடுத்தும் கருவியை கண்டறிந்தது இந்தியா...

''உலகின் மிகப்பெரிய மற்றும் வலுவான காற்று தூய்மைப்படுத்தி'' (World's Largest as well as The strongest Air Purifier) என்ற பெருமையை இது பெறுகிறது. இதற்கான காப்புரிமையை குரின் சிஸ்டம்ஸ் நிறுவனம் பெற்றுவிட்டது என்பது மற்றொரு குறிப்பிடத்தகுந்த விஷயம்.

சீனாவுக்கு போட்டியாக உலகின் மிகப்பெரிய காற்று தூய்மைபடுத்தும் கருவியை கண்டறிந்தது இந்தியா...

இதுகுறித்து குரின் சிஸ்டம்ஸ் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ''நமது நாட்டில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பிரச்னையை மனதில் வைத்தே இந்த ப்யூரிஃபையர்களை டிசைன் செய்துள்ளோம். ஒவ்வொரு ப்யூரிஃபையரும் சுமார் 40 அடி உயரம் கொண்டதாக இருக்கும்.

சீனாவுக்கு போட்டியாக உலகின் மிகப்பெரிய காற்று தூய்மைபடுத்தும் கருவியை கண்டறிந்தது இந்தியா...

இந்த ப்யூரிஃபையர் சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சுத்தமான காற்றை வழங்கும் திறன் வாய்ந்தது. எந்த இடத்தில் இதனை நிறுவுகிறோமோ, அங்கிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சுத்தமான காற்று கிடைக்கும். இதன்மூலம் அந்த சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் 75 ஆயிரம் பேர் பயனடைவர்'' என்றனர்.

சீனாவுக்கு போட்டியாக உலகின் மிகப்பெரிய காற்று தூய்மைபடுத்தும் கருவியை கண்டறிந்தது இந்தியா...

குரின் சிஸ்டம்ஸ் நிறுவன அதிகாரிகள் இதனை 'சிட்டி க்ளீனர்' என அழைக்கின்றனர். இது ஒரு நாளைக்கு 32 மில்லியன் க்யூபிக் மீட்டர் (Cubic Metre) காற்றை சுத்தப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என குரின் சிஸ்டம்ஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவுக்கு போட்டியாக உலகின் மிகப்பெரிய காற்று தூய்மைபடுத்தும் கருவியை கண்டறிந்தது இந்தியா...

இதுகுறித்து குரின் சிஸ்டம்ஸ் நிறுவன அதிகாரிகள் மேலும் கூறுகையில், ''360 டிகிரி கோணத்தில் இருந்தும் இது காற்றை உள்வாங்கி கொள்ளும். ஒரு மணி நேரத்திற்கு 13 லட்சம் க்யூபிக் மீட்டர் சுத்தமான காற்றை இது உருவாக்கி வெளியிடும். இந்த ப்யூரிஃபையர் காற்றை 99.99 சதவீதம் அளவிற்கு சுத்தப்படுத்தி விடும்.

சீனாவுக்கு போட்டியாக உலகின் மிகப்பெரிய காற்று தூய்மைபடுத்தும் கருவியை கண்டறிந்தது இந்தியா...

சோலார் பேனல்கள் மூலம் உருவாக்கப்படும் எனர்ஜியை கொண்டு இது இயங்கும். இந்த ப்யூரிஃபையர்கள் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்படுகிறது. இதனை உருவாக்க தேவையான எந்த பொருளையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவில்லை.

சீனாவுக்கு போட்டியாக உலகின் மிகப்பெரிய காற்று தூய்மைபடுத்தும் கருவியை கண்டறிந்தது இந்தியா...

நமக்கு நமது வீட்டில் மட்டும் சுத்தமான காற்று கிடைத்தால் போதும் என இருந்து விடக்கூடாது. அது பிரச்னைக்கு உரிய தீர்வாகவும் இருக்காது. ஒட்டுமொத்தமாக பெரிய அளவில் காற்றை தூய்மையாக்க வேண்டும். அப்போதுதான் பிரச்னை முடிவுக்கு வரும்.

சீனாவுக்கு போட்டியாக உலகின் மிகப்பெரிய காற்று தூய்மைபடுத்தும் கருவியை கண்டறிந்தது இந்தியா...

அதற்காகதான் காற்றை சுத்தப்படுத்தும் ப்யூரிஃபயர்களை கண்டறிந்துள்ளோம். சீனாவில் உள்ள ஸியான் நகரில் இதுபோன்று காற்றை சுத்தப்படுத்தும் டவர்கள் ஏற்கனவே உள்ளன. ஆனால் அது ஒரு நாளைக்கு 10 மில்லியன் க்யூபிக் மீட்டர் காற்றை மட்டுமே சுத்தப்படுத்தும் திறன் வாய்ந்தது.

சீனாவுக்கு போட்டியாக உலகின் மிகப்பெரிய காற்று தூய்மைபடுத்தும் கருவியை கண்டறிந்தது இந்தியா...

நாங்கள் கண்டறிந்துள்ள காற்றை சுத்தப்படுத்தும் டவர்கள் ஒரு நாளைக்கு 32 மில்லியன் க்யூபிக் மீட்டர் காற்றை சுத்தப்படுத்தும் திறன் கொண்டது. எனவேதான் இது ''உலகின் மிகப்பெரிய மற்றும் வலுவான காற்று தூய்மைப்படுத்தி'' என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

சீனாவுக்கு போட்டியாக உலகின் மிகப்பெரிய காற்று தூய்மைபடுத்தும் கருவியை கண்டறிந்தது இந்தியா...

ஒரு டவரை அமைக்க ரூ.1.75 கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை செலவாகும். இதன் செயல்திறனுடன் ஒப்பிடுகையில் இது குறைவான செலவுதான்'' என்றனர். அரசு அனுமதி வழங்கியவுடன் முதற்கட்டமாக புது டெல்லியில் உள்ள சாலைகளில் இந்த டவர்கள் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #ஆஃப் பீட்
English summary
India's Kurin Systems Designed World's Largest And Strongest Air Purifier. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X