இந்தியாவின் மிக நீளமான ரயில் பாலம் பற்றிய தகவல்கள்!

By Saravana

இந்தியாவின் மிக நீளமான ரயில் பாலம் என்ற பெருமையை வேம்பநாடு ரயில் பாலம் பெற்றிருக்கிறது. கொச்சி நகரின் எடப்பள்ளி ரயில் நிலையத்திற்கும், வல்லர்படம் தீவிற்கும் இடையில் இந்த பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது.

சரக்கு போக்குவரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த பாலம் கட்டுவதற்கான அவசியம் மற்றும் இதரத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பொருளாதார முக்கியத்துவம்

பொருளாதார முக்கியத்துவம்

பொருளாதாரத்தில் வேகமாக வளரந்து வரும் இந்தியாவில், முன்பு சர்வதேச தரத்திலான ஒரு சரக்கு மாற்று வசதி கொண்ட துறைமுகம் கூட இல்லை. இது இந்தியாவிற்கு பெரும் பின்னடைவாக இருந்தது. ஆனால், அந்த குறையை வல்லர்படம் துறைமுகம்தான் நிறைவு செய்து வருகிறது. இந்த துறைமுகத்திற்காகவே அமைக்கப்பட்ட மிக முக்கியமான ரயில் பாலம்தான் இது. இந்த ரயில் வழித்தடம் சரக்கு போக்குவரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

 மிகப்பெரிய ரயில் பாலம்

மிகப்பெரிய ரயில் பாலம்

இந்த பாலம் 4.62 கிமீ நீளம் கொண்டது. 5 மீட்டர் அகலமும், 7.5 மீட்டர் உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பாலத்தில் 134 தூண்கள் இருக்கின்றன.

துறைமுக இணைப்பு

துறைமுக இணைப்பு

இந்த பாலத்தின் 80 சதவீதம் நீருக்கு மேலே கட்டப்பட்டிருக்கிறது. அத்துடன் 3 குட்டித் தீவுகளையும் கடந்து செல்கிறது. எடப்பள்ளியிலிருக்கும் சரக்கு கையாளும் நிலையத்திற்கும், வல்லர்படம் துறைமுகத்தையும் இணைக்கிறது.

கட்டுமானம்

கட்டுமானம்

2007ம் ஆண்டு இந்த ரயில் பாலத்தின் கட்டுமானம் துவங்கி 2010ல் முடிந்தது. 2011ல் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. Afcons infrastructure ltd நிறுவனம் இந்த ரயில் பாலத்தை கட்டமைத்தது.

 திட்ட செலவு

திட்ட செலவு

இந்த ரயில் பாலம் ரூ.298 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ரயில் பாலத்திற்காக 18,000 டன் சிமென்ட்டும், 50,000 டன் உலோகமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்திய பொறியியல் துறையின் வல்லமையை எடுத்துக்காட்டும் பாலமாக இது கம்பீரமாக நிற்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The Vallarpadam railway link in Kochi, Kerala, is the longest rail bridge in India. The 4.62km rail bridge is part of an 8.86km rail corridor connecting the International Container Trans-shipment Terminal (ICTT) on Vallarpadam Island with Edappally, a suburb in Kochi city.
Story first published: Tuesday, June 23, 2015, 12:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X