ஒருத்தரு கூட செக் பண்ண வேணாம், 762 கி.மீ தூரத்திற்குத் தானியங்கியாகச் செயல்படும் ரயில்வே சிக்னல்!
இந்தியாவில் ஆட்டோமெட்டிக் பிளாக் சிக்னலிங் முறையில் நீண்ட ரயில் பாதையாக 762 கி.மீ நீளம் கொண்ட ரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது என்ன ஆட்டோமெட்டிக் பிளாக் சிக்னலிங்? இதனால் என்ன பயன்? இது எப்படி ரயில் பயணத்திற்கு உதவுகிறது எனக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் நடக்கிறது. ஆனால் ரயில்களில் விபத்துக்கள் மிகக் குறைவு, மீறி ரயில்களில் விபத்துக்கள் நடந்தால் அது மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். பலர் இதனால் பாதிக்கப்படுவார்கள். இதனால் ரயில்கள் பாதுகாப்பாக இயங்கவேண்டியது கட்டாயமான ஒன்று. இப்படி ரயில்கள் பாதுகாப்பாக இயங்க சிக்னல்கள் முக்கியம்.

தானியங்கி சிக்னல்!
ஒரு காலத்தில் சிக்னல் போடுவது முற்றிலும் மேனுவலாக நடந்து கொண்டிருந்தது. தற்போது ரயில்வே நிர்வாகம் ரயில் சிக்கல்களைத் தானியங்கியாகச் செயல்படுத்தும் பணிகளைத் தீவிரமாகச் செய்து வருகிறது.அதன்படி இந்தியாவின் நீளமான தானியங்கி சிக்கல்களைக் கொண்ட ரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்தது. காசியாபாத் - பண்டிட் தீன்தயாள் உபதியா செகமெயண்ட் இடையே சுமார் 762 கி.மீ தூரம் கொண்ட ரயில் பாதை தானியங்கி சிக்கல்களுடன் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ரயில்வேயில் சிக்கல்களைத் தானியங்கியாக்க ஆட்டோமெட்டிக் பிளாக் சிக்னலிங் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சிக்னலுக்கும் இடைப்பட்ட பகுதி பிளாக்காக பிரிக்கப்படுகிறது. அதன்படி முந்தை பிளாக்கில் ரயில் நிற்கிறது என்றால் அடுத்தடுத்த பிளாக்கள் தானாக சிக்னலை மாற்றி மற்ற ரயில்கள் இந்த பிளாக்கிற்கு வராதவாறு சிக்கலை அமைத்துக்கொள்ளும். அந்த பிளாக்கிலிருந்து ரயில் வெளியேறிய பிறகே அடுத்த ரயில் குறிப்பிட்ட பிளாக்கிற்குள் நுழைய இடம் கிடைக்கும்.

எலெக்ட்ரானிக் பிளாக்கிங் முறை
முன்னர் இது முழுவதும் மேனுவலாக செய்யப்பட்டது. இதில் மனித தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் இந்த முறையை முற்றிலும் தானியங்கியாக மாற்றியுள்ளனர். இந்த ஆட்டோமெட்டிக் பிளாக் சிக்னலிங் முறை முற்றிலும் எலெக்ட்ரானிக் பிளாக்கிங் முறையில் செயல்படுகிறது. இந்த சிக்னலிங்கை அமைப்பதற்கான செலவும் மிகக் குறைவு. கடந்த 2022 டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி மொத்தம் 3706 கிமீ தூரம் பல்வேறு ஸோன்களில் ஏபிஎஸ் சிக்னலிங் சிஸ்டம் செயல்பாட்டிற்கு வந்துவிட்டது.
2022-2023 நிதியாண்டில் 268 ரூட்களை இந்த ஏபிஎஸ் சிக்னலிங் சிஸ்டமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மொத்தம் 347 ரயில் ரூட்கள் இந்த ஏபிஎஸ் சிஸ்டத்திற்கு வந்துவிட்டது. 2022ம் ஆண்டு இறுதியில் மொத்தம் 2888 ரயில்வே ஸ்டேஷன்கள் இந்த ஏபிஎஸ் சிஸ்டத்திற்கு வந்துவிட்டன. அதாவது இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த ரயில் நிலையங்களில் 45.5 சதவீத ரயில் நிலையங்களில் இந்த சிஸ்டம் செயல்பாட்டிற்கு வந்துவிட்டது.
செயல்பாடு!
இந்த ஆட்டோமெட்டிக் பிளாக் சிக்னலிங் முறையில் ரயில்களை நிறுத்துவது, ரயில் மூவ்மெண்ட்களை முறைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை செய்யும் இந்த சிக்னலிங் முறையில் இல்லாத பகுதியிலிருந்து இந்த சிக்னல் உள்ள பகுதிக்கு ரயில் நுழைந்தாலே இந்த சிக்னல் ஆக்டிவேட் ஆகிவிடும். மேலும் இந்த சிஸ்டத்தின்படி புதிய ஸ்டேஷன்களை சேர்ப்பது, இந்த சிக்னல்களை நீடிப்பது எல்லாம சுலபம் தான்.
இந்தியாவின் ரயில்வேபாதை கட்டுமானத்தை பாதுகாப்பானதாகவும் துரிதமானதாகவும் மாற்ற ரயில்வே நிர்வாகம் ஏகப்பட்ட பணத்தை செலவு செய்து வருகிறது. இதன் மூலம் ரயில்வே துறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் இந்த ஆட்டோமெட்டிக் பிளாக் சிக்னலிங், இது நாடு முழுவதும் செயல்பாட்டிற்கு வந்துவிட்டால் ரயில் விபத்திற்கான வாய்ப்புகள் வெகுவாக குறையும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் ரயில்வேகாக தனி பட்ஜெட் கொடுக்கப்படுகிறது. அதன்படி இருப்பதிலேயே அதிகமாக கடந்த 2022-23ம் நிதியாண்டில் தான் ரூ2.45 லட்சம் கோடி பணம் ரயில்வேவிற்காக ஒதுக்கப்பட்டது. முன்னதாக 2020-21ம் நிதியாண்டில் ரூ1.55 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. 2014-19 நிதியாண்டில் மொத்தம் ரூ99,178 கோடி தான் ஒதுக்கப்பட்டது. இது குறித்த உங்கள் கருத்துக்களை காணலாம் வாருங்கள்.


Click it and Unblock the Notifications