பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே திடீரென 19.3 கிமீ தூரத்திற்கு பிரம்மாண்ட பாலம் கட்டுகிறது இந்தியா..

பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே திடீரென 19.3 கிமீ தூரத்திற்கு பிரம்மாண்ட பாலம் கட்டவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப்பாலம் என்ற பெருமையை இது பெறவுள்ளது.

பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே திடீரென 19.3 கிமீ தூரத்திற்கு பிரம்மாண்ட பாலம் கட்டவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப்பாலம் என்ற பெருமையை இது பெறவுள்ளது. இதற்கான காரணங்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சீனாவிற்கு போட்டியாக பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 19.3 கிமீ தூரத்திற்கு பாலம் கட்டுகிறது இந்தியா..

அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ள துப்ரி மற்றும் மேகாலயா மாநிலத்தில் அமைந்துள்ள புல்பரி ஆகிய இரண்டு நகரங்களையும் இணைக்கும் வகையில், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே, மிக நீளமான பாலம் ஒன்றை கட்டும் திட்டம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

சீனாவிற்கு போட்டியாக பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 19.3 கிமீ தூரத்திற்கு பாலம் கட்டுகிறது இந்தியா..

பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்படும் இந்த மிக நீண்ட பாலமானது, 19.3 கிலோ மீட்டர்கள் நீளம் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப்பாலம் (India's Longest River Bridge) என்ற பெருமையை இது பெறும்.

சீனாவிற்கு போட்டியாக பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 19.3 கிமீ தூரத்திற்கு பாலம் கட்டுகிறது இந்தியா..

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகமானது, இந்த பாலம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கான முதற்கட்ட லோனுக்கு (Loan) ஒப்புதல் கிடைத்து விட்டது என்பது மற்றொரு மகிழ்ச்சிகரமான செய்தி.

சீனாவிற்கு போட்டியாக பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 19.3 கிமீ தூரத்திற்கு பாலம் கட்டுகிறது இந்தியா..

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்தான் (Japan International Cooperation Agency-JICA), இந்த திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்குகிறது. இதில், முதற்கட்ட நிதிக்கான ஒப்புதலை இந்நிறுவனம் ஏற்கனவே வழங்கி விட்டது.

சீனாவிற்கு போட்டியாக பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 19.3 கிமீ தூரத்திற்கு பாலம் கட்டுகிறது இந்தியா..

தற்போதைய நிலையில் துப்ரி மற்றும் புல்பரி ஆகிய நகரங்களுக்கு இடையே பயணிக்கும் மக்கள் படகுகள் மூலமாக மட்டுமே பிரம்மபுத்திரா ஆற்றை கடந்து வருகின்றனர். அதே சமயத்தில் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் சுமார் 100 கிலோ மீட்டர்கள் சுற்றி வர வேண்டியுள்ளது.

சீனாவிற்கு போட்டியாக பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 19.3 கிமீ தூரத்திற்கு பாலம் கட்டுகிறது இந்தியா..

ஆனால் துப்ரி-புல்பரி இடையேயான பாலம் கட்டப்பட்டு விட்டால் இது போன்ற பிரச்னைகள் எழாது. துப்ரி மற்றும் புல்பரி ஆகிய நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை வெகுவாக குறைக்க வேண்டும் என்பதற்காக, 4 லேன்கள் (4-lane) கொண்ட பாலமாக இது கட்டமைக்கப்படுகிறது.

சீனாவிற்கு போட்டியாக பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 19.3 கிமீ தூரத்திற்கு பாலம் கட்டுகிறது இந்தியா..

டோலா மற்றும் சாடியா என்ற இரு நகரங்களை இணைக்கும் வகையில், லோகித் ஆற்றின் (பிரம்மபுத்திராவின் துணை ஆறு) குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம்தான், தற்போதைய நிலையில் இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப்பாலம் என்ற பெருமையை தன் கைவசம் வைத்துள்ளது.

சீனாவிற்கு போட்டியாக பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 19.3 கிமீ தூரத்திற்கு பாலம் கட்டுகிறது இந்தியா..

அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களை இணைக்கும் இந்த பாலத்தின் நீளம் 9.15 கிலோ மீட்டர்கள். இதன்மூலம்தான் இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப்பாலம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. ஆனால் இந்த பெருமை இன்னும் சில ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிக்கும்.

சீனாவிற்கு போட்டியாக பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 19.3 கிமீ தூரத்திற்கு பாலம் கட்டுகிறது இந்தியா..

ஏனெனில் துப்ரி மற்றும் புல்பரி ஆகிய நகரங்களுக்கு இடையே பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்படவுள்ள புதிய பாலம் 2026-27ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ளபடி இதன் நீளம் 19.3 கிலோ மீட்டர்கள்.

சீனாவிற்கு போட்டியாக பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 19.3 கிமீ தூரத்திற்கு பாலம் கட்டுகிறது இந்தியா..

அதாவது டோலா மற்றும் சாடியா நகரங்களுக்கு இடையே கட்டப்பட்டுள்ள பாலத்தை காட்டிலும் இதன் நீளம் சுமார் 10 கிலோ மீட்டர்கள் அதிகம். இந்த பாலம் பயன்பாட்டிற்கு வந்து விட்டால், 200 கிலோ மீட்டர்கள் பயணமானது வெறும் 20 கிலோ மீட்டர்களாக குறைந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனாவிற்கு போட்டியாக பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 19.3 கிமீ தூரத்திற்கு பாலம் கட்டுகிறது இந்தியா..

முன்னதாக இந்தியாவின் தற்போதைய மிக நீளமான ஆற்றுப்பாலம் என வர்ணிக்கப்படும் டோலா-சாடியா பாலத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கட்டுமான பணிகள் நிறைவடைந்தன.

சீனாவிற்கு போட்டியாக பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 19.3 கிமீ தூரத்திற்கு பாலம் கட்டுகிறது இந்தியா..

சீனாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காகவே டோலா-சாடியா பாலம் கட்டப்பட்டது. சீன ராணுவமானது இந்தியாவிற்கு எப்போதும் ஒரு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. எனவே அவசர காலங்களில் சீன எல்லையை இந்திய ராணுவம் விரைவாக அடைய வேண்டும் என்பதற்காகவே இந்த பாலம் கட்டப்பட்டது.

சீனாவிற்கு போட்டியாக பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 19.3 கிமீ தூரத்திற்கு பாலம் கட்டுகிறது இந்தியா..

இந்த சூழலில் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் டோலா-சாடியா பாலம் திறக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இந்த பாலத்தை, தற்போதைய பிரதமர் மோடிதான் திறந்து வைத்தார். இந்த பாலம் திறக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அடுத்த பிரம்மாண்ட பாலத்திற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

சீனாவிற்கு போட்டியாக பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 19.3 கிமீ தூரத்திற்கு பாலம் கட்டுகிறது இந்தியா..

சீனாவின் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டே இருப்பதால், வட கிழக்கு மாநிலங்களில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்தியாவின் தற்போதைய மிக நீளமான ஆற்றுப்பாலமான டோலா-சாடியா பாலம் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் அமைந்துள்ளது.

சீனாவிற்கு போட்டியாக பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 19.3 கிமீ தூரத்திற்கு பாலம் கட்டுகிறது இந்தியா..

அதனை காட்டிலும் இரு மடங்கு அதிக நீளம் கொண்ட துப்ரி-புல்பரி ஆற்றுப்பாலமும் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் கட்டப்படவுள்ளது. சீனாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க வட கிழக்கு மாநிலங்களில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியே ஆக வேண்டும் என்ற இந்தியாவின் ஆர்வத்தை இது எடுத்துக்காட்டுகிறது.

சீனாவிற்கு போட்டியாக பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 19.3 கிமீ தூரத்திற்கு பாலம் கட்டுகிறது இந்தியா..

முன்னதாக உலகின் மிக நீளமான கடல் பாலம் கடந்த சில நாட்களுக்கு முன்தான் சீனாவில் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.1.40 லட்சம் கோடி செலவில், கடலில் சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவிற்கு கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் திறந்து வைத்தார்.

உலகின் நீளமான கடல் பாலம் சீனாவில் திறப்பு: சுவாரஸ்யத் தகவல்கள்!

உலகின் மிக நீளமான கடல் பாலம் சீனாவில் திறக்கப்பட்டு இருக்கிறது. சீனாவின் தென் பகுதியில் அமைந்துள்ள ஸுஹாய் நகரில் நடந்த நிகழ்ச்சியில், இந்த ராட்சத கடல் பாலத்தை, அந்நாட்டு அதிபர் ஷி ஜிங்பிங் திறந்து வைத்தார்.

உலகின் நீளமான கடல் பாலம் சீனாவில் திறப்பு: சுவாரஸ்யத் தகவல்கள்!

னாவின் நிலப்பகுதியையும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள மக்காவ் மற்றும் சுயாட்சி பிரதேசமான ஹாங்காங் உள்ளிட்ட தீவுப் பகுதிகளை இணைக்கும் விதத்தில், இந்த பிரம்மாண்ட கடல் பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கடல் பாலம் 55 கிமீ தூரத்திற்கு கடலில் அமைந்துள்ளது. ரூ.1.40 லட்சம் கோடி மதிப்பீட்டில் இந்த கடல் பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

உலகின் நீளமான கடல் பாலம் சீனாவில் திறப்பு: சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்த பிராந்தியத்தில் வசிக்கும் 6.8 கோடி மக்கள் இந்த பாலத்தால் நன்மை பெறுவர். ஹாங்காங், மக்காவ் தவிர்த்து 11 நகரங்களை சேர்ந்த மக்களுக்கு இந்த கடல் பாலம் எளிதான போக்குவரத்து தொடர்பை வழங்கும்.

உலகின் நீளமான கடல் பாலம் சீனாவில் திறப்பு: சுவாரஸ்யத் தகவல்கள்!

கடந்த 2009ம் ஆண்டு இந்த பாலம் கட்டும் பணிகள் துவங்கின. கடந்த 9 ஆண்டுகளாக நடந்த கட்டுமானப் பணிகள் சில வருடங்கள் தாமதத்திற்கு பின் முடிவடைந்து இன்று பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டு இருக்கிறது.

உலகின் நீளமான கடல் பாலம் சீனாவில் திறப்பு: சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்த பாலத்தில் பேருந்துகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. கார் உள்ளிட்ட தனிநபர் பயன்பாட்டு வாகனங்களில் செல்ல விரும்புவோர் சிறப்பு அனுமதி பெற்ற பிறகே செல்ல முடியும்.

உலகின் நீளமான கடல் பாலம் சீனாவில் திறப்பு: சுவாரஸ்யத் தகவல்கள்!

சீனாவின் முக்கிய நிலப்பகுதியில் அமைந்துள்ள ஸுஹாய் நகரிலிருந்து ஹாங்காங் நகருக்கு செல்வதற்கு ஏற்கனவே 4 மணிநேரம் பிடிக்கும். இந்த பாலத்தின் மூலமாக பயண நேரம் இப்போது வெறும் 30 நிமிடங்களாக குறைந்துள்ளது.

உலகின் நீளமான கடல் பாலம் சீனாவில் திறப்பு: சுவாரஸ்யத் தகவல்கள்!

சீனாவின் கிரேட்டர் வளைகுடா பிராந்திய வளர்ச்சிக்கான முக்கிய திட்டமாக சீனா கூறினாலும், தென் சீன கடல்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் உத்தியாக பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலகின் நீளமான கடல் பாலம் சீனாவில் திறப்பு: சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்த பாலம் 30 கிமீ தூரத்திற்கு கடலில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில், 6.7 கிமீ தூரத்திற்கு கடலுக்கு அடியில் 44.5 மீட்டர் ஆழத்தில் சுரங்கப் பாதையாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சுரங்கப்பாதை துவங்கம் இடங்களில் செயற்கை தீவுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சுரங்கப் பாதைக்கு அமைந்துள்ள கடல் பகுதிக்கு மேலாக கப்பல்கள் தங்கு தடை இல்லாமல் பயணிக்க முடியும்.

உலகின் நீளமான கடல் பாலம் சீனாவில் திறப்பு: சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்த பாலத்தின் மீதமுள்ள 22.9 கிமீ தூரம் கடலுக்கு மேலே உயர்மட்ட பாலமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள பாலமம் நிலப்பகுதி மற்றும் ஆற்றுக்கு குறுக்காக அமைக்கப்பட்டு இருக்கிறது. மொத்தமாக 30 கிமீ தூரம் மட்டுமே கடல் பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகின் நீளமான கடல் பாலம் சீனாவில் திறப்பு: சுவாரஸ்யத் தகவல்கள்!

ஈபிள் கோபுரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இரும்புக்கு இணையான தரம் கொண்ட 4 லட்சம் மெட்ரிக் டன் உயர் வகை ஸ்டீல் இந்த பால கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இந்த அளவில் 60 ஈஃபிள் கோபுரங்களை அமைக்க முடியுமாம்.

உலகின் நீளமான கடல் பாலம் சீனாவில் திறப்பு: சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்த பகுதியில் மணிக்கு 360 கிமீ வேகத்தில் புயல் அடித்தாலும், ரிக்டர் அளவுகோலில் 8 என்ற அளவில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டாலும் இந்த பாலத்தை ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது என்று சீனா தெரிவித்துள்ளது.

உலகின் நீளமான கடல் பாலம் சீனாவில் திறப்பு: சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்த பாலத்தில் நாள் ஒன்றுக்கு 9,200 வாகனங்கள் பயன்படுத்தும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பாலங்கள் மற்றும் சாலை திட்டங்கள் மூலமாக இந்த பாலத்தில் வாகனப் போக்குவரத்து குறையும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது.

உலகின் நீளமான கடல் பாலம் சீனாவில் திறப்பு: சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த கடல் பாலத்தை 'மரண பாலம்' என்று அழைக்கின்றனர். அதாவது, கட்டுமானப் பணியின்போது இந்த பகுதியில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உலகின் நீளமான கடல் பாலம் சீனாவில் திறப்பு: சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்த பாலத்தை சீனா ஆர்வத்துடன் கட்டி திறந்துள்ள நிலையில், ஹாங்காங் மக்களுக்கு இந்த கடல் பாலத்தை விரும்பவில்லை. தங்களது மீது சீனாவின் பிடி இறுகுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதுடன், சீனர்கள் அதிக அளவில் ஹாங்காங் வந்து தங்களது வேலைவாய்ப்புகள் மற்றும் வளத்தை அபகரித்துவிட வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சுகின்றனர்.

உலகின் நீளமான கடல் பாலம் சீனாவில் திறப்பு: சுவாரஸ்யத் தகவல்கள்!

மறுபுறத்தில் இந்த ராட்சத கடல்பாலத்தால் இந்த பகுதியில் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டுவிட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கடல்வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

உலகின் நீளமான கடல் பாலம் சீனாவில் திறப்பு: சுவாரஸ்யத் தகவல்கள்!

பாலம் கட்டுமானத்திற்கு முன் இந்த பகுதியில் 148 வெள்ளை டால்பின்கள் இருந்ததாகவும், தற்போது 47 என்ற எண்ணிக்கையில் குறைந்துவிட்டதுடன், பாலம் அமைந்துள்ள கடல் பகுதியில் ஒன்று கூட தென்படவில்லை என்பதுடன், அதன் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உலகின் நீளமான கடல் பாலம் சீனாவில் திறப்பு: சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்த பாலத்தை வைத்து ஹாங்காங் நகரை தனது கட்டுப்பாட்டில் வைப்பதற்காகவே இவ்வளவு பெரிய முதலீட்டை செய்துள்ளாதாகவும், வேறு எந்த காரணமும் இல்லை என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Most Read Articles

இந்திய ராணுவத்துடனான தங்களது நிறுவனத்தின் நீண்ட கால உறவை போற்றும் வகையில் ராயல் என்பீல்டு வெளியிட்ட கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட்
English summary
India's Longest River Bridge Will Build Between Assam & Meghalaya. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X