7ஆம் நம்பரோட பவர் இதுதான்... ஒரே நாளில் மொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்த தொழிலதிபர்! வீடு முழுக்க கார்

விலையுயர்ந்த கார்களுக்காக பல செல்வந்தர்கள் பல இலட்ச ரூபாய் செலவு செய்து ஃபேன்சி நம்பர் பிளேட் (Fancy Number Plate) வாங்கியுள்ள சம்பவங்களை இதற்கு முன்னர் பார்த்துள்ளோம். சிலர் கோடி ரூபாய் அளவில் கூட செலவு செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து சென்று துபாயில் பெரும் தொழிலதிபராக விளங்கும் பல்விந்தர் சிங் சாஹ்னி என்பவர் தனது காஸ்ட்லீயான ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) காருக்காக சுமார் ரூ.76 கோடி வரையில் செலவு செய்து 'D5' என்கிற ஃபேன்சி நம்பர் பிளேட்டை வாங்கியது கவனத்தை ஈர்த்தது.

புகாட்டி சிரோன் (Bugatti Chiron) காரையும் வைத்துள்ள துபாயில் வசிக்கும் இந்த இந்திய தொழிலதிபர், சமீபத்தில் துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்டு, 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) காருக்காக இந்தியாவிலேயே அதிகமாக பல இலட்ச ரூபாய் செலவு செய்து ஃபேன்சி நம்பர் பிளேட்டை வாங்கியது சமீபத்தில் வைரலாகியது.

venu gopalakrishnan s car garage

இந்த கேரள தொழிலதிபரின் பெயர், வேணு கோபாலகிருஷ்ணன் ஆவார். கேரளாவில் செயல்படும் இந்தியாவின் முன்னணி ஐடி கம்பெனிகளுள் ஒன்றான லிட்மஸ்7 (Litmus7) ஐடி கம்பெனியின் உரிமையாளரான இவரிடம் மஞ்சள் நிறத்திலான லம்போர்கினி உருஸ் மட்டுமின்றி, இன்னும் ஏகப்பட்ட விலையுயர்ந்த கார்கள் உள்ளன.

இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணனின் கார் கேரஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு லம்போர்கினி கார்களை பார்க்க முடிகிறது. இதில் ஒன்றான லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மண்டே காருக்கு தான் இவர் சமீபத்தில் ஃபேன்சி நம்பர் பிளேட்டை வாங்கி பொருத்தினார்.

venu gopalakrishnan s car garage

இந்த ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்கான ஏலம் நடக்கும்போது நான் ஏலத்தில் கலந்துக் கொள்ளவில்லை எனவும், அந்த நேரத்தில் தொழில் சம்பந்தமாக நியூசிலாந்து நாட்டிற்கு சென்றுக் கொண்டிருந்ததாகவும், இதனால் தனது குழுவை ஏலத்தில் பங்கேற்க கூறியதாகவும் வீடியோவில் தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஏலத்தில் பங்கேற்க முடியாவிடினும், ரூ.8 லட்சத்திற்கு மேல் ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்காக செலவு செய்ய வேண்டாம் என தனது குழுவிடம் வேணு கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆனால், ஏலம் துவங்கியதும் நிலைமை அப்படியே தலைக்கீழாக மாறியது. வேணு கோபாலகிருஷ்ணனின் குழுவினர் எதிர்பார்த்ததை காட்டிலும் ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்கான ஏலம் மிகவும் ஆக்ரோஷமாக சென்றுள்ளது.

ஏலத்தில் பங்கேற்றவர்கள் பல இலட்ச ரூபாய்கள் செலவு செய்ய தயாராக இருந்துள்ளனர். இதனால் கடைசியில் சுமார் ரூ.46 லட்சத்தில் தான் தனது உருஸ் காருக்கு வேணு கோபாலகிருஷ்ணன் '0007' என்கிற ஃபேன்சி நம்பர் பிளேட்டை வாங்கியுள்ளார். மஞ்சள் நிறத்தில் வீடியோவில் காட்சித்தரும் இந்த உருஸ் பெர்ஃபார்மண்டே காருக்கு அருகே ஆரஞ்சு நிறத்தில் நிற்கும் லம்போர்கினி ஸ்டெர்ராடோ (Sterrato) காரும் தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணனுக்கு சொந்தமானதே ஆகும்.

பள்ளம், மேடான ஆஃப்-ரோடுகளுக்கும் கொண்டு செல்லக்கூடிய ஸ்டெர்ராடோ கார்களை உலகம் முழுவதுமே வெறும் 1,499 யூனிட்கள் மட்டுமே லம்போர்கினி உருவாக்கியது. இந்த இரு லம்போர்கினி கார்கள் மட்டுமின்றி, போர்ஷே 911 டர்போ எஸ் (Porsche 911 Turbo S), பி.எம்.டபிள்யூ எக்ஸ்5 (BMW X5) கார்களும் வேணு கோபாலகிருஷ்ணனின் கார் கேரேஜில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணனனின் கார் கேரேஜ் வரும் மாதங்களில் இன்னும் பெரியதாக உள்ளது. ஏனெனில், இவர் ரோல்ஸ்-ராயஸ் கோஸ்ட் பிளாக் பேட்ஜ், போர்ஷே ஜிடி3 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி உள்ளிட்ட கார்களை புக் செய்துள்ளார். இவை விரைவில் டெலிவிரி செய்யப்பட உள்ளன. இவ்வாறு, விலையுயர்ந்த கார்களுக்காக அதிக எண்ணிக்கையிலான பணத்தை செலவழிக்க கூடியவராக இந்த தொழிலதிபர் விளங்குகிறார்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 8, 2025, 11:45 [IST]
English summary
Indias most expensive fancy number plate owner venu gopalakrishnans car garage
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+