இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இவர்தானா! பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் லம்போர்கினி (Lamborghini), ஃபெராரி (Ferrari), அஸ்டன் மார்ட்டின் (Aston Martin) மற்றும் மெக்லாரன் (McLaren) போன்ற கார் நிறுவனங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. ஆனால் இந்த நிறுவனங்களின் கார்கள் மிகவும் விலை உயர்ந்தவை என்பதால், சாமானிய மக்களால் அவற்றை சொந்தமாக்க முடியாது.

கோடீஸ்வரர்களால் மட்டுமே மேற்கண்ட நிறுவனங்களின் கார்களை வாங்க முடியும். நிலைமை இப்படி இருக்கும்போது, ஐதராபாத் நகரை சேர்ந்த ஒரு நபர் மெக்லாரன் நிறுவனத்தின் சூப்பர் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அவரது பெயர் நசீர் கான் ஆகும். தொழில் அதிபரான இவர், மெக்லாரன் 765 எல்டி ஸ்பைடர் (McLaren 765 LT Spider) சூப்பர் காரை சொந்தமாக்கியுள்ளார்.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இவர்தானா! பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

எரிமலை சிகப்பு நிறத்தில் அவர் வாங்கியுள்ள மெக்லாரன் 765 எல்டி ஸ்பைடர் சூப்பர் கார், கண்களை கவரும் வகையில் உள்ளது. அனேகமாக இந்தியாவில் இந்த காரை வாங்கிய முதல் நபர் நசீர் கான்தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இதுதான் இந்தியாவிலேயே மிகவும் விலை உயர்ந்த சூப்பர் கார் எனவும் கூறப்படுகிறது.

மெக்லாரன் 765 எல்டி ஸ்பைடர் சூப்பர் காரின் விலை (Price) சுமார் 12 கோடி ரூபாய் என தெரிகிறது. இத்தனைக்கும் இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும் என்பதில் நமக்கு துளியும் சந்தேகமில்லை.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இவர்தானா! பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

இவ்வளவு விலை உயர்ந்த மெக்லாரன் 765 எல்டி ஸ்பைடர் சூப்பர் காரில் மிகவும் சக்தி வாய்ந்த 4.0 லிட்டர், ட்வின் டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 765 பிஎஸ் பவர் மற்றும் 800 என்எம் டார்க் திறனை வாரி வழங்கி, சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, இதன் மூலமாக, காரின் பின் பக்க சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது. இந்த சூப்பர் காரை சொந்தமாக்கியுள்ள தொழில் அதிபர் நசீர் கான், கார்களை உயிருக்கு உயிராக நேசிக்க கூடியவர் ஆவார்.

இதை நிரூபிக்கும் வகையில், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் (Rolls Royce Cullinan Black Badge), மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி (Mercedes-Benz G350d), ஃபோர்டு மஸ்டங் (Ford Mustang) மற்றும் ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் (Ferrari 812 Superfast) ஆகிய கார்களையும் நசீர் கான் சொந்தமாக வைத்துள்ளார்.

கொஞ்சம் மூச்சு வாங்கி கொள்ளுங்கள். ஏனெனில் தொழில் அதிபர் நசீர் கானிடம் லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) மற்றும் லம்போர்கினி அவென்டெடார் (Lamborghini Aventador) ஆகிய கார்களும் சொந்தமாக இருக்கின்றன. இவை அனைத்தும் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் மிகவும் விலை உயர்ந்த கார்கள் ஆகும்.

Article Published On: Thursday, March 9, 2023, 11:51 [IST]
English summary
Indias most expensive supercar mclaren 765 lt spider price all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+