உபேர் கார் டிரைவருக்குள் இந்த அளவிற்கு இரசனையா? நம்பவே முடியல... இதுக்காகவே புக்கிங் குவியுது!!

உபேர் (UBer)-இல் டாக்ஸி புக் செய்த பின், ஒரு விசித்திரமான தோற்றம் கொண்ட கார் உங்களை அழைத்து செல்ல வந்தால் எப்படியிருக்கும்? உபேர், சமீப காலங்களில் டாக்ஸி சேவைகளுக்கு பலர் அதிகளவில் பயன்படுத்தும் நிறுவனமாக மாறியுள்ளது. இந்த நிறுவனத்தில் பலரும் தங்களது கார்களை இணைத்துக் கொண்டு டாக்ஸி தொழிலை பார்க்கின்றனர். அந்த வகையில், உபேர் டாக்ஸியில் பல்வேறு விதமான கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இங்கு ஒருவர் தனது மாடிஃபை செய்யப்பட்ட ஹூண்டாய் எக்ஸ்செண்ட் (Hyundai Xcent) காரை பயன்படுத்துகிறார். இந்த மாடிஃபை செய்யப்பட்ட ஹூண்டாய் காரை பற்றித்தான் இந்த தொகுப்பில் இனி பார்க்க போகிறோம்.

புவன் சௌத்ரி என்பவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த மாடிஃபை செய்யப்பட்ட கார் குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த புவன் சௌத்ரி என்பவர் டெல்லியில் பயன்படுத்தப்படும் மாடிஃபை செய்யப்பட்ட கார்களை பற்றி அறிய முற்பட்டபோது, இந்த குறிப்பிட்ட மாடிஃபை செய்யப்பட்ட ஹூண்டாய் எக்ஸ்செண்ட் கார் குறித்த விபரம் அவருக்கு தெரியவந்துள்ளது.

india s unique modified hyundai xcent

வெள்ளை நிறத்திலான இந்த மாடிஃபைடு எக்ஸ்செண்ட் காரில் புவன் சௌத்ரி டெல்லியில் பல இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்துள்ளார். இந்த காரில் நிறைய பாடி பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, நன்கு அகலமானதாக இந்த கார் காட்சியளிக்கிறது. புவன் சௌத்ரி இந்த காரில் ஏறுவதற்கு முன் காரை சுற்றிலும் வீடியோ எடுத்துள்ளார். அதன் மூலமாக இந்த காரை நாமும் நெருக்கமாக பார்க்க முடிந்துள்ளது.

இந்த காரின் முன்பக்கத்தில் பம்பர் முற்றிலுமாக புதியதாக பொருத்தப்பட்டுள்ளது. காரில் இருந்து முன்பக்கமாக நீண்டுள்ள இந்த பம்பரினால், இந்த காரின் முன்பக்கம் கூடுதல் அகலமானதாக காட்சியளிக்கிறது. முன்பக்கத்தில் இந்த கார் கஸ்டம் ஹெட்லைட்களை கருப்பு நிறத்திலான L-வடிவ எல்இடி டிஆர்எல்-களுடன் கொண்டுள்ளது. ஃபாக் விளக்குகளும் இந்த காரில் உள்ளன.

india s unique modified hyundai xcent

இந்த மாடிஃபைடு ஹூண்டாய் எக்ஸ்செண்ட் காரின் பக்கவாட்டிற்கு சென்றால், ஃபெண்டர் நன்கு அகலமானதாக மாற்றப்பட்டுள்ளது. உண்மையில் இதுதான் இந்த காருக்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகிறது. இதற்கு ஏற்றாற் போன்று, கோல்டு நிறத்தில் நன்கு அகலமான அலாய் சக்கரங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. சக்கரங்களுக்கும், ஃபெண்டர்களுக்கும் இடையேயான இடைவெளியை குறைப்பதற்காக பெரிய அளவிலான ஸ்பேசர்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கார் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

காரின் முன்பக்கத்திற்கு இணையாக பின்பக்கத்திலும் டக்பில் ஸ்பாய்லர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்துடன், காரின் மேற்கூரையில் ஸ்கை பாக்ஸ் ஒன்றை பொருத்தியுள்ளதையும் வீடியோவில் காணலாம். பொருட்களை வைத்து எடுத்து செல்ல பயன்படும் இந்த பாக்ஸ் ஆனது இந்த மாடிஃபைடு ஹூண்டாய் எக்ஸ்செண்ட் காருக்கு விசித்திரமான தோற்றத்தை வழங்கியுள்ளது.

india s unique modified hyundai xcent

காருக்கு வெளியே தான் இவ்வாறு உள்ளது என்று பார்த்தால், உள்ளேயும் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் கேபின் வடிவமைக்கப்பட்டுள்ளது. காருக்குள் முன்பக்கத்தில் 2, பின்பக்கத்தில் 2 என மொத்தம் 4 ஸ்பீக்கர்கள் புதியதாக பொருத்தப்பட்டுள்ளன. காருக்குள் வெப்பநிலை, காரின் வேகம் மற்றும் பேட்டரியின் நிலை உள்ளிட்டவற்றை காட்டும் அளவீட்டு கருவி ஆனது காருக்குள் A-பில்லரில் பொருத்தப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாடிக்கையாளர்களை கவர்வதற்கு டாக்ஸி டிரைவர்கள் தங்களது காரை அழகாக அலங்கரிப்பது வழக்கம். ஆனால், டெல்லியை சேர்ந்த இந்த நபர் கொஞ்சம் அதிகமாக அலங்கரித்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவில் கார் மாடிஃபிகேஷன்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும், எவ்வாறு இந்த காரை இவர் சாலையில் ஓட்டுகிறார் என்பதும், இதற்கு உபேர் நிறுவனம் எவ்வாறு அனுமதி அளித்தது? என்பதும் தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, July 8, 2024, 11:48 [IST]
English summary
Indias most unique modified hyundai xcent check all details here
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X