புதுசா கல்யாணம் ஆன இன்ஸ்டாகிராம் பிரபலத்துக்கு மஹிந்திரா கார் வடிவில் வந்த அதிர்ஷ்டம்! எல்லாம் மனைவி வந்த ராசி
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) ஆகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் டெலிவிரிகள் சமீபத்தில், கடந்த மார்ச் மாத மத்தியில் துவங்கப்பட்டன. அதனை தொடர்ந்து, இந்தியா முழுவதும் ஒவ்வொரு கஸ்டமர்களாக இந்த எலக்ட்ரிக் கார்களை டெலிவிரி பெற்று வருகின்றனர். அந்த வகையில், இன்ஸ்டாகிராம் (Instagram) பிரபலமான ஒருவர் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை தற்போது டெலிவிரி பெற்றுள்ளார்.
மஹிந்திரா பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்களின் விலைமிக்க டாப் வேரியண்ட்களின் டெலிவிரிகள் மட்டுமே தற்போதைக்கு துவங்கப்பட்டுள்ளன. விலை குறைவான வேரியண்ட்களின் டெலிவிரிகள் வருகிற ஜூன் மாதத்திற்கு பிறகே துவங்கப்பட உள்ளன. இதனாலேயே தற்போது இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களை டெலிவிரி பெற்று வருபவர்கள் பணக்காரர்களாகவும், மக்கள் மத்தியில் பிரபலமானவர்களாகவும் உள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெற்று இருப்பவர், இந்தியாவின் நம்பர் 1 மோட்டோ வி-லாகர் (Moto Vlogger) ஆக அறியப்படும் அனுராக் தூபால் (Anurag Dobhal) ஆவார். 'யுகே07 ரைடர்' (UK07 Rider) என ஆட்டோமொபைல் வாகன பிரியர்களால் அழைக்கப்படும் அனுராக் தூபாலை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 79 இலட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
இது இல்லாமல், யூடியூப் (Youtube)-இல் 78 இலட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை அனுராக் தூபால் கொண்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூனை சேர்ந்தவரான இவர், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களில் ஆரம்பத்தில் வெவ்வேறு விதமான பைக் மற்றும் கார்கள் உடன் வீடியோக்களை பதிவிட்டு இளைஞர்கள் மத்தியில் கவனத்தை பெற ஆரம்பித்தார்.

அதன்பின், சமீப காலமாக தனது வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை வீடியோவாக காட்சிப்படுத்தி வெளியிட்டு வருகிறார். அப்படிப்பட்டவர், புதிய விலையுயர்ந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரை வாங்கி இருப்பதை மட்டும் வீடியோவாக வெளியிட மட்டும் மறப்பாரா என்ன? காரை புக் செய்ய கடந்த பிப்ரவரி மாதத்தில் மஹிந்திரா ஷோரூமுக்கு சென்றவர் அப்போதே சில வீடியோக்களை அங்கு காட்சிக்கு இருந்த எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காருடன் எடுத்து வெளியிட்டார்.
தற்போது, காரை டெலிவிரி எடுக்கும்போதும் மனைவி உடன் கொண்டாடி ஷோரூமை ஒருவழி செய்துள்ளார். அனுராக் தூபால் மஹிந்திரா கஸ்டமர் ஆக உள்ளதை பாராட்டும் விதமாக, ஷோரூமில் ஒரு பேனர் காருக்கு பின்னால் இருப்பதை வீடியோவில் காணலாம். இவர் வாங்கியிருப்பது சிவப்பு நிறத்திலான மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை ஆகும்.

இதனை 'டாங்கே சிவப்பு' (Tango Red) என மஹிந்திரா நிறுவனம் அழைக்கிறது. இது இல்லாமல், ஸ்டீல்த் பிளாக், நெபுலா நீலம், டீப் ஃபாரஸ்ட், ரப்பி வெல்வெட், டெசர்ட் மிஸ்ட் மற்றும் எவரெஸ்ட் வெள்ளை கலர் ஆப்ஷன்களிலும் இந்த எலக்ட்ரிக் கார் கிடைக்கிறது.
பேக்-1, பேக்-2, பேக்-3 செலக்ட் மற்றும் பேக்-3 என்கிற 4 விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.21.90 லட்சத்தில் இருந்து ரூ.30.50 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. 59kWh மற்றும் 79kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காருக்கு உள்ளே டேஸ்போர்டில் பெரிய அளவில் பிரத்யேகமான இன்ஃபோடெயின்மெண்ட் திரை வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரின் பேக்-3 வேரியண்ட்டின் டெலிவிரிகள் மட்டுமே தற்போதைக்கு துவங்கப்பட்டுள்ளன. ரூ.30.50 லட்சம் என்கிற விலையில் கிடைக்கும் இந்த வேரியண்ட்டை தான் தற்போது இன்ஸ்டாகிராம் பிரபலம் அனுராக் தூபால் வாங்கி உள்ளார். ரூ.30.50 லட்சம் என்பது கூட எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரும்.


Click it and Unblock the Notifications









