72 வயது ஆனாலும் இவரால் முடியாதது எதுவும் இல்ல!! இளைஞர்களின் கனவு காரை இந்த வயதில் வாங்கி அசத்திட்டார்!
ஃபெர்ராரி (Ferrari) கார்களை உலகளவில் பலர் வாங்கி பார்த்திருக்கிறோம். பெரும் செல்வந்தர்களில் இருந்து, சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் விரும்பி வாங்கும் கார்களாக ஃபெராரி கார்கள் விளங்குகின்றன. இந்த நிலையில், இங்கு ஒரு முதியவர் ஒருவர் விலையுயர்ந்த ஃபெராரி காரை தற்போது வாங்கியுள்ளார். இந்தியாவிலேயே ஃபெராரி காரை வாங்கிய வயதானவர் என அழைக்கப்படும் இந்த முதியவரை பற்றியும், அவர் வாங்கியுள்ள ஃபெராரி கார்களை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
ஃபெராரி கார்களை பிடிக்காதவர்கள் யார்தான் இருப்பார்கள்? சிவப்பு நிறத்திலான பெயிண்ட் தான் ஃபெராரி கார்களின் அடையாளம் ஆகும். விலையுயர்ந்த கார்களை சிவப்பு நிறத்தில் சாலையில் கண்டாலே அது ஃபெராரி காராக தான் இருக்கும் என்று நம்மில் நிறைய பேருக்கு நினைக்க தோன்றும்.

கடந்த சில நாட்களாகவே ஃபெராரி கார்களை இந்தியாவை சேர்ந்த பலர் புதியதாக வாங்குவதை பார்த்து வருகிறோம். அதில் கவனிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், அவ்வாறு ஃபெராரி காரை வாங்கியவர்களில் பலர் 30 வயதிற்குள்ளான இளம் கஸ்டமர்களாக இருந்தனர். ஆனால், தற்போது நாம் இந்த தொகுப்பில் பார்க்க போவது அதற்கு மொத்தமும் நேர்மாறானது ஆகும்.
இந்தியாவிலேயே அதிக வயதில் ஃபெராரி கார் ஒன்றுக்கு கஸ்டமராக மாறியுள்ள இந்த வயதானவரின் பெயர், சேகர் வாசன் (Sekhar Vasan). கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவரான இவர், பெங்களூருவில் சன்சேரா என்ஜீனியரிங் (Sansera Engineering) என்கிற பெயரில் ஆட்டோமொபைல் வாகன துறைக்கு மற்றும் ஆட்டோமொபைல்-அல்லாத துறைக்கு தேவையான நுட்பமான பாகங்களை உருவாக்கி தருவதில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

72 வயதான சேகர் வாசன் 1975ஆம் ஆண்டில் ஐஐடி மெட்ராஸில் உலோகவியல் பொறியியல் படிப்பை நிறைவு செய்தார். அதன்பின் தான் படித்த படிப்பு சம்பந்தமான தொழிலை மேற்கொள்ள நினைத்தவர், 1986ஆம் ஆண்டில் சன்சேரா நிறுவனத்தை நிறுவினார். தற்போது உலகளவில் நெட்வொர்க்கை கொண்டிருக்கும் இந்த நிறுவனத்திற்கு அப்போதில் இருந்து இப்போதுவரையில் சேகர் வாசன் தான் நிர்வாக இயக்குனராக உள்ளார்.
பெங்களூருவில் உள்ள இவரது அலுவலகத்தின் வாசலுக்கே வந்தே பிராண்ட்-நியூ ஃபெராரி கார் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், காரை டெலிவிரி பெறும் தொழிலதிபர் சேகர் வாசன் மற்றும் அவரது குடும்பத்தினரை பார்க்க முடிகிறது. காரை டெலிவிரி செய்ய பெங்களூருவில் செயல்படும் ஃபெராரி டீலர்ஷிப் ஷோரூமின் அதிகாரிகள் நேரடியாக சேகர் வாசனின் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.
காரை டெலிவிரி பெற்றதும், அதனுள் அமர்ந்த தொழிலதிபர் சேகர் வாசன், காரை சிறிய ரவுண்டு கொண்டு சென்று ஓட்டிப் பார்த்துள்ளார். இவர் வாங்கியிருப்பது சிவப்பு நிறத்திலான ஃபெராரி புரோசாங்குவே (Purosangue) கார் ஆகும். உலகளவில் பிரபலமான ஃபெராரி நிறுவனம் உருவாக்கிய முதல் எஸ்யூவி (SUV) ரக கார் புரோசாங்குவே ஆகும்.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட உடனே அம்பானி (Ambani) குடும்பத்தினரால் வாங்கப்பட்ட புரோசாங்குவே காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே தற்சமயம் ரூ.10.5 கோடியாக உள்ளது. 4 கதவுகளுடன், போதுமான இடவசதிகளை கொண்ட பின் வரிசை இருக்கைகள் மற்றும் பூட் ஸ்பேஸை கொண்ட ஃபெராரி புரோசாங்குவே காரை அழகான ரோஸ்ஸோ போர்டோஃபினோ என்கிற பிரத்யேகமான சிவப்பு நிறத்தில் சேகர் வாசன் வாங்கியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக, இவ்வாறு விலையுயர்ந்த கார்களை வாங்குபவர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப காரில் சில மாற்றங்களை செய்வது வழக்கம். இன்னும் சொல்லப்போனால், ஃபெராரி நிறுவனமே கஸ்டமர்கள் அவ்வாறான கஸ்டமைசேஷன் மாற்றங்களை செய்ய வலியுறுத்தும். இத்தகைய மாற்றங்களை செய்வதினால் கூடுதலாக சில லட்ச ரூபாய்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும். இந்த ஃபெராரி புரோசாங்குவே காரில் அப்படி எதாவது மாற்றங்களை தொழிலதிபர் சேகர் வாசன் செய்துள்ளாரா என்பது உறுதியாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








