ஆளு பார்க்க சாதாரணமாக இருக்காரு!! இந்த காரை ஓட்ட இவருக்கு மட்டுமே இந்தியாவிலேயே உரிமை இருக்கு!!

செவ்ரோலெட் (Chevrolet), உலகளவில் பிரபலமான அமெரிக்க கார் நிறுவனம். இந்தியாவில் தான் ஏனோ கடைசி வரையில் வரவேற்பை பெறாமலேயே போய்விட்டது. ஒரு காலத்தில் இந்தியாவில் ஆக்டீவ்வாக இருந்த செவ்ரோலெட், தற்சமயம் அதன் கார்களை இங்கு விற்பனை செய்வதில்லை. ஆனால், இந்தியாவில் செவ்ரோலெட் ஆக்டீவ்வாக இருந்த சமயத்தில் கூட விற்பனை செய்யப்படாத விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் ஒன்று பெங்களூரில் உலா வந்துக் கொண்டிருக்கிறது. எதர்ச்சையாக சாலையில் பார்த்த அந்த காரை பற்றிய விபரங்களை தேட முயற்சித்தோம்.

பெங்களூரின் பரபரப்பான எம்சி ரோடில் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு கார் அனைவரது கவனத்தையும் வசீகரித்து கொண்டிருந்தது. என்ன கார் என்று நாங்கள் அருகே சென்று பார்க்கையில், அது அமெரிக்க சாலைகளில் சுற்றி திரியக்கூடிய செவ்ரோலெட் கோர்வெட்டே ஸ்டிங்ரே (Chevrolet Corvette Stingray) கார்.

india s one only chevrolet corvette

எங்கள் கண்களை எங்களாலே நம்ப முடியவில்லை. எங்களுக்கு மிக நெருக்கமாக கோர்வெட்டே ஸ்டிங்ரே போன்ற அரிதாக பார்க்கக்கூடிய கார் காட்சி தந்துக் கொண்டிருந்தது. போக்குவரத்து நெரிசலின் தூசிகளுக்கு மத்தியில் அவ்வளவு அழகானதாக காட்சியளித்தது. அழகில் மயங்கி சில வினாடிகளை வீணடித்த நாங்கள் உடனடியாக மொபைல் போனை எடுத்து காரை வீடியோ எடுக்க ஆரம்பித்தோம்.

அதன்பின் காரின் உரிமையாளரை தேடும் முயற்சியில், நண்பர் ஒருவரிடம் இருந்து காரின் உரிமையாளரின் போன் நம்பர் உடன் காரின் புதியதொரு வீடியோ எங்களுக்கு கிடைத்தது. கொஞ்சமும் தாமதிக்காமல் உடனடியாக காரின் உரிமையாளரை தொடர்புக்கொண்ட நாங்கள், சந்திப்பிற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு அவரது வீட்டிற்கு செல்ல ஆயத்தமானோம். எங்களுக்காக காரை வாசற்கதவுக்கு அருகாமையிலேயே அதன் உரிமையாளர் நித்தின் ரவீந்திரன் நிறுத்தி வைத்திருந்தார்.

india s one only chevrolet corvette

நித்தின் ரவீந்திரன் வேறு யாரும் இல்லை, ஆக்ஸிஸ் க்ரூப்பின் சிஇஓ ஆவார். நித்தின் ரவீந்திரனும் பெரிய ஆட்டோமொபைல் வாகன பிரியர் ஆவார். இவரிடம் இருப்பது செவ்ரோலெட் கோர்வெட்டே சி8 ஸ்டிங்ரே கார் ஆகும். இதில், 'சி8' என்பது 8வது தலைமுறையை குறிக்கிறது. அதாவது, 8வது ஜென்ரேஷன் கோர்வெட்டே ஸ்டிங்ரே கார் நித்தின் ரவீந்திரன் அவர்களிடம் உள்ளது.

இந்த காரில் 6.2 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 501 பிஎஸ் மற்றும் 637 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.2 வினாடிகளில் எட்டிவிடலாம்.

india s one only chevrolet corvette

ஸ்போர்ட்ஸ் ரக காரான இதில் பெர்ஃபார்மன்ஸ் சஸ்பென்ஷன், மேம்படுத்தப்பட்ட பிரேக்குகள் மற்றும் எலக்ட்ரானிக் லிமிடெட்-ஸ்லிப் டிஃப்ரென்ஷியல் உள்ளிட்டவை உள்ளன. வேகமாக எதிர்காற்றில் புகுந்து செல்வதற்கு ஏற்ப சிறப்பான ஏரோடைனாமிக்ஸில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. காருக்கு முன்பக்கத்தில் பெரிய அளவில் ஸ்பிளிட்டர்கள், பின்பக்கத்தில் ஸ்பாய்லர்களும் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், காரின் கூலிங் சிஸ்டமும் சிறப்பானதாக உள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து காருக்கு நல்ல ஸ்டெபிளிட்டியை வழங்குகின்றன. காருக்கு உள்ளே, இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கனெக்ட்டிவிட்டி வசதிகள் உடன் உள்ளது. இவற்றுடன் ரியர்வியூ கேமரா மற்றும் பார்க்கிங் சென்சார்களை கொண்டிருக்கும் இந்த ஸ்போர்ட்ஸ் காரின் விலை தற்சமயம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.95 லட்சம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனை செய்யப்படாத இவ்வாறான விலையுயர்ந்த கார்களை பார்ப்பது என்றாலே தனி ஆர்வம் தான். என்ன ஒரேயொரு குறை... இந்த செவ்ரோலெட் காரை எங்களால் ஓட்டி பார்க்க முடியவில்லை. ஓமன் நாட்டு நம்பர் பிளேட் உடன் இருப்பதால், இந்தியாவில் பதிவு செய்த உரிமையாளர் நித்தின் ரவீந்திரன் மட்டுமே இந்த காரை ஓட்ட அனுமதி உண்டு. ஆனால் ஜாலியாக காருக்குள் ஏறி அமர்ந்து பார்த்தோம்; என்ஜினின் உறுமலை காது குளிர கேட்டோம்.

More from DriveSpark

Article Published On: Monday, October 14, 2024, 15:59 [IST]
English summary
Indias one only chevrolet corvette c8 stingray car detailed video check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X