இந்தியாவில் வெள்ளை நிற கார் தான் அதிகம் விற்பனையாகிறது, ஏன் தெரியுமா?
இந்தியாவில், கார் வாங்குவோர் மத்தியில், வெள்ளை நிறம் தொடர்ந்து அதிகம் விரும்பப்படுகிறது. இந்திய சாலைகளில் ஏறக்குறைய 40% வாகனங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த விருப்பம் சமீபத்திய டிரெண்ட் மட்டுமல்ல, நீண்டகாலமாக இருந்து வருகிறது. இப்படியாக இந்தியர்கள் அதிகமாக வெள்ளை நிற காரை தேர்வு செய்வதற்கு என்ன காரணம்? இதற்கு பின்னால் இருக்கும் உளவியல் என்ன? வெள்ள நிற கார் அதிக பராமரிப்பு தேவைப்படும் காராக இருந்தாலும் மக்கள் ஏன் விரும்பி வாங்குகிறார்கள் என காணலாம் வாருங்கள்.
மக்கள் பலர் வெள்ளை நிற காரை ஒரு காரணம் இருக்கிறது. வெள்ளை நிற கார்களை பராமரிப்பது சற்று கடினமாக இருந்தாலும். மற்ற நிறங்கள் போல் அவை அழுக்குகளைக் அதிகமாக வெளியே காட்டாத தன்மை கொண்டதாக தான் இருக்கும். இதனால் வெள்ளை நிற கார்களை சுத்தம் செய்வது ஒரு வகையில் எளிது, இது இந்தியாவின் தூசி நிறைந்த சாலைகளுக்கு குறிப்பிடத்தக்க நன்மையாகும்.

அடுத்ததாக மற்றொரு காரணம் இந்தியாவில் உள்ள காலநிலை. வெள்ளை சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது, இது சூடான இந்திய வானிலையில் காரை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் ஏற்படும் நன்மை, நாட்டில் உள்ள கார் உரிமையாளர்களுக்கு வெள்ளை நிறத்தை தேர்வு செய்யும் எண்ணத்தை அதிகம் ஏற்படுத்துகிறது..
இந்த தேர்விற்கு பின்னால் கருத்தில் கொள்ள வேண்டிய கலாச்சார அம்சமும் உள்ளது. இந்தியாவில், வெள்ளை பெரும்பாலும் தூய்மை மற்றும் அமைதியின் அடையாள நிறமாக இருக்கிறது. இந்த நேர்மறையான அர்த்தம் பல கார் வாங்கும் உரிமையாளர்களுக்கு ஒரு செண்டிமென்ட் தேர்வாக வெள்ளை நிற காரை தேர்வு செய்ய வைக்கிறது.

மறுவிற்பனை மதிப்பு வெள்ளை நிற காரை தேர்வு செய்வதற்கு மற்றொரு முக்கியமான காரணமாகும். மற்ற நிறங்களின் கார்களுடன் ஒப்பிடும்போது வெள்ளை நிற கார்கள் அதிக மறுவிற்பனை அதிக மதிப்பைக் கொண்டுள்ளன. இது எதிர்காலத்தில் காரை விற்பது குறித்து சிந்திப்பவர்களுக்கு மிகவும் நல்ல நிற தேர்வாக அமைகிறது.
"வெள்ளை கார்களுக்கு எப்போதும் தேவை உள்ளது. அவைகள் கிளாசிக் மற்றும் நேர்த்தியாக பார்க்கப்படுகிறது,” என மும்பையில் கார் டீலராக உள்ள ராஜேஷ் சிங் என்பவர் கூறுகிறார். அவரது கவனிப்பு சந்தை டிரெண்ட் மற்றும் வாடிக்கையாளர் விருப்பங்களால் ஆகியவற்றை மிக உன்னிப்பாக கவனித்து அனுமானிக்கப்பட்டதாக உள்ளது.

சில்வர் மற்றும் க்ரே போன்ற மற்ற நிறங்களும் பிரபலமாக இருந்தாலும், அவை வெள்ளை நிறம் அளுவிற்கு பிரபலமாகவில்லை. உலகளாவிய டிரெண்டுகள் கூட இதே மாதிரியான டிரெண்டை தான் காட்டுகின்றன. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் வெள்ளை நிற கார் தான் அதிக மக்களால் தேர்வு செய்யப்படும் காராக உள்ளது.
வாகன உற்பத்தியாளர்கள் இந்த டிரெண்டை குறிப்பிட்டுள்ளனர் மற்றும் பெரும்பாலும் பல மக்கள் வெள்ளை நிற ஷேடுகளை கொண்ட கார்களை அதிகம் தேர்வு செய்கிறார்கள். மெட்டாலிக் முதல் மேட் பூச்சுகள் வரை, வண்ணத்தின் பிரபலத்தை அப்படியே வைத்திருக்கும் அதே வேளையில் பல்வேறு ஷேடுகளும் வெள்ளத நிறத்தில் இருக்கிறது.
இந்த வெள்ளை நிற கார் டிரெண்ட் விரைவில் மாறுவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. பிராக்டிக்கல் மற்றும் கலாச்சார காரணங்கள் இருக்கும் வரை, இந்திய கார் சந்தையில் வெள்ளை நிற கார்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும். அதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் வெளியிடும் பெரும்பாலான கார்களில் வெள்ளை நிற காரையும் ஒரு ஆப்ஷனாக நிச்சயம் வழங்குவார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கார் ஆர்வலர்கள் மற்றும் வாங்குபவர்கள் அதன் நடைமுறை நன்மைகள் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்திற்காக வெள்ளை நிறத்தை தேர்வு செய்கிறார்கள். இந்தியச் சாலைகளில் அது தொடர்ச்சியான பிரபலமான காராகவே இருக்கும், பாரம்பரியத்தில் விவேகமான மற்றும் ஆழமாக வேரூன்றிய கலர் விருப்ப தேர்வாக இந்த கார் இருக்கும்.


Click it and Unblock the Notifications









