அரபு ஷேக்குகளுடன் போட்டி போடும் முகேஷ் அம்பானியின் மோட்டார் உலகம்

By Saravana

இந்தியாவின் நம்பர்- 1 பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் கார் ஆர்வத்துக்கு அவரது கராஜ் மட்டுமே சாட்சி. ஆம், மும்பையில் உள்ள அவரது அன்டிலியா சொகுசு வீட்டில் 160 கார்களை நிறுத்தும் வசதி கொண்டது.

விருந்தினர்கள், பணியாளர்களின் கார்களை தவிர்த்து, பெரும்பான்மையான இடம், முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்துவதற்கான இடமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தநிலையில், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி அதிக அளவில் விரும்பி பயன்படுத்தும் கார்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 01. பென்ட்லீ கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர்

01. பென்ட்லீ கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர்

பாரம்பரியம் மிக்க ஆடம்பர கார் மாடல். ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு போட்டியாக இருந்து வரும் பென்ட்லீயின் தனித்துவமான மாடல்களில் ஒனறான இந்த காரும் முகேஷ் அம்பானியிடம் இருக்கிறது. 1957ம் ஆண்டு முதல் 1966 வரை முதல் தலைமுறை மாடல் தயாரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 2006ம் ஆண்டு இரண்டாம் தலைமுறையும், 2013ல் மூன்றாம் தலைமுயும் கண்டது. தாராள இடவசதியும், ஏராள சொகுசு வசதிகளும் இந்த காரை முகேஷ் அம்பானி தேர்வு செய்ய காரணமாக அமைந்திருக்கிறது.

 பென்ட்லீ கார் தொடர்ச்சி...

பென்ட்லீ கார் தொடர்ச்சி...

பென்ட்லீ கான்டினென்டல் ப்ளையிங் ஸ்பர் காரில் இருக்கும் டபிள்யூ 12 ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 600 பிஎச்பி பவரையும், 720 என்எம் டார்க்கையும் வழங்க வல்லது. அதிகபட்சமாக மணிக்கு 320 கிமீ வேகம் வரை எட்டிப் பிடிக்க திறன் கொண்டது. மூன்றரை கோடி விலை மதிப்பு கொண்டது.

02. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ்

02. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ்

உலகின் மிகச்சிறந்த சொகுசு கார் மாடல்களில் ஒன்றான மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ், முகேஷ் அம்பானியையும் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. அவர் தினசரி பயன்படுத்தும் கார்களில் இதுவும் ஒன்று. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் W221 மாடலைத்தான் முகேஷ் அம்பானி பயன்படுத்துகிறார்.

 பென்ஸ் கார் தொடர்ச்சி...

பென்ஸ் கார் தொடர்ச்சி...

முகேஷ் அம்பானி பயன்படுத்தும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரில் 5.5 லிட்டர் வி12 ட்வின் டர்போ எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 510 பிஎச்பி பவரையும், 830 என்எம் டார்க்கையும் வழங்கும். அவர் மட்டுமின்றி, அவரது குடும்பத்தினரையும் கவர்ந்த மாடல்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

03. ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்

03. ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்

அந்தஸ்தின் அடையாளமாக கருதப்படும் ரோல்ஸ்ராய்ஸ் பிராண்டு கார்கள் இல்லாத பெரும் பணக்காரர்கள் இல்லங்களே இல்லை எனலாம். அந்த வகையில், முகேஷ் அம்பானியிடம் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார் உள்ளது. இந்த காருக்கு ஏராளமான கஸ்டமைஸ் ஆப்ஷன்கள் இருந்தாலும், முகேஷ் அம்பானி அதை விரும்பாமல் சாதாரண மாடலையே வாங்கியுள்ளார்.

 ரோல்ஸ்ராய்ஸ் கார் தொடர்ச்சி...

ரோல்ஸ்ராய்ஸ் கார் தொடர்ச்சி...

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரில் இருக்கும் 6.75 லிட்டர் வி12 எஞ்சின் அதிகபட்சமாக 453 பிஎச்பி பவரையும், 720 என்எம் டார்க்கையும் வழங்கும். மணிக்கு 240 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது.

04. பிஎம்டபிள்யூ ஹை செக்யூரிட்டி கார்

04. பிஎம்டபிள்யூ ஹை செக்யூரிட்டி கார்

கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.10 கோடி மதிப்பில் பிஎம்டபிள்யூவின் ஹை செக்யூரிட்டி காரை வாங்கினார். பாதுகாப்பு காரணங்களுக்காக குண்டு துளைக்காத இந்த காரை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். இந்த காருக்கான பதிவு செலவு மட்டும் ரூ.1.60 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கி சூடு, கண்ணி வெடி தாக்குதல்களிலிருந்து பயணிகளை காக்கும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டது இந்த கார்.

பிஎம்டபிள்யூ கார் தொடர்ச்சி...

பிஎம்டபிள்யூ கார் தொடர்ச்சி...

ஜெர்மனியிலுள்ள பிஎம்டபிள்யூவின் விசேஷ கார் தயாரிப்பு மையத்திலிருந்து ஆர்டரின்பேரில் தயாரித்து கொடுக்கப்படுகிறது. மேலும், இந்த காரை சிறப்பாக செலுத்துவதற்காக, இரண்டு ஓட்டுனர்களுக்கும் விசேஷ பயிற்சி கொடுத்து அனுப்பியுள்ளது பிஎம்டபிள்யூ. ஜெர்மனியிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்ட இந்த காருக்கு 300 சதவீதம் இறக்குமதி வரி செலுத்தப்பட்டிருக்கிறது.

மேபக் 62

மேபக் 62

ஜெர்மனியின் சொகுசு கார் பிராண்டுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற மேபக் பிராண்டு கார் ஒன்றையும் முகேஷ் அம்பானி வைத்துள்ளார். அவர் வைத்திருக்கம் கார் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் வடிவமைக்கப்பட்ட பிளாட்ஃபாரமிலிருந்தே உருவாக்கப்பட்டது. மிக சிறப்பான இடவசதியும், சொகுசான இருக்கைகளையும் கொண்டிருப்பதால், அடிக்கடி இந்த காரையும் பயன்படுத்துகிறார்.

மேபக் 62 கார் தொடர்ச்சி...

மேபக் 62 கார் தொடர்ச்சி...

இந்த காரில் 570 பிஎச்பி பவரை அதிகபட்சம் வழங்க வல்ல 5.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் ரூ.5 கோடி விலையில் முகேஷ் அம்பானி வாங்கியிருக்கிறார். இப்போது மேபக் பிராண்டு கைவிடப்பட்டாலும், மெர்சிடிஸ் மேபக் என்ற புதிய பிராண்டில் கார்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. கார்கள் என்பது முகேஷ் அம்பானிக்கு சாதாரண விஷயம். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் அவரது ஆடம்பரத்தை போற்றும் மோட்டார் உலகத்தை காணலாம்.

போயிங் பிசினஸ் ஜெட் -2

போயிங் பிசினஸ் ஜெட் -2

21ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட மிகச்சிறந்த தனிநபர் பயன்பாட்டு விமானங்களில் ஒன்று. கூட்ட அரங்கம், படுக்கை வசதி, பொழுதுபோக்கு வசதிகள் நிறைந்த இந்த விமானம் 73 மில்லியன் டாலர்கள் விலை மதிப்பு கொண்டது.

 விமானம் தொடர்ச்சி

விமானம் தொடர்ச்சி

இந்த விமானத்தின் பயணிகள் அறை மட்டுமல்ல. விமானிகள் அறையும் மிகவும் சொகுசானது என்பதுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டது. இந்த விமானச்சில் ஹனிவெல் டிஜிட்டல் ஏவியோனிக்ஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன் எச்ஜிஎஸ் 2000 என்ற நவீன ரக ஹெட் அப் டிஸ்ப்ளே கொண்டது. இந்த விமானத்தில் ஜெனரல் எலக்ட்ரிக்/ஸ்னெக்மா எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பும்போது 10600 கிமீ தூரம் பயணிக்கும். மணிக்கு 1,065 கிமீ வேகம் வரை பறக்கும்.

ஆடம்பர படகு

ஆடம்பர படகு

முகேஷ் அம்பானியிடம் உலகின் விலை மதிப்புமிக்க ஆடம்பர படகு உள்ளது. இதன் மதிப்பு 20 மில்லியன் டாலர்கள். மூன்றடுக்கு கொண்ட இந்த படகை தண்ணீரில் மிதக்கும் சொர்க்கமாக கூறலாம்.

அம்சங்கள்

அம்சங்கள்

நீச்சல் குளம், ஹெலிபேட், ஜிம், மசாஜ் அறை, பொழுதுபோக்கு வசதிளை கொண்டது. மூன்றடுகளையும் இணைக்கும் விதத்தில், லிஃப்ட் வசதியும் உண்டு. 12 விருந்தினர்கள் தங்கும் வசதி கொண்ட இந்த ஆடம்பர படகில், 20 பணியாளர்கள் இருக்கின்றனர். இந்த ஆடம்பர படகின் மின்சார தேவையில் 30 சதவீத அளவுக்கு சோலார் மின்தகடுகள் மூலமாக பூர்த்தி செய்யப்படுகிறது.

காஸ்ட்லி பரிசு

காஸ்ட்லி பரிசு

எலியும், பூனையுமாக இருந்து வரும் அம்பானியின் வாரிசுகளான முகேஷ் மற்றும் அவரது தம்பி ஆகியோர் மனைவியருக்கு காஸ்ட்லியான பரிசுகளை போட்டி போட்டு வாங்கி கொடுப்பது வழக்கம். அந்த வகையில், முகேஷ் அம்பானி தனது மனைவி நீட்டாவின் 44வது பிறந்தநாளுக்கு ரூ.242 கோடி மதிப்புடைய ஏர்பஸ் கார்ப்பரேட் ஜெட் விமானத்தை வாங்கி பரிசளித்தார்.

விமானத்தின் சிறப்புகள்

விமானத்தின் சிறப்புகள்

ஏர்பஸ் 319 கார்ப்பரேட் ஜெட் விமானத்தில் பல்வேறு வசதிகளை கொண்டதாக கஸ்டமைஸ் செய்து வாங்கி கொடுத்திருந்தார். அந்த விமானத்தில் பொழுதுபோக்கு மட்டுமின்றி, அலுவலகமாக பயன்படுத்துவதற்கு ஏற்ற வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்து வாங்கப்பட்டது.

கொசுறுத் தகவல்

கொசுறுத் தகவல்

முகேஷ் அம்பானியிடம் மொத்தம் 168 கார்கள் இருக்கின்றன. அதில், மிகவும் காஸ்ட்லியான மாடல் சமீபத்தில் ரூ.10 கோடியில் வாங்கப்பட்ட பிஎம்டபிள்யூ ஹை செக்யூரிட்டி கார் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானியின் 10 கோடி விலையுடைய கார்

முகேஷ் அம்பானியின் 10 கோடி விலையுடைய கார்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
India's Richest Man Mukesh Ambani's Motor World.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X