இஸ்ரோ செப் 2ம் தேதி செய்யப்போற மரண மாஸ் சம்பவம் பத்தி தெரியுமா? தேசிய கொடியோட ரெடியா இருங்க!
இஸ்ரோ முதல் முறையாக சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 என்ற தனது விண்கலத்தை நாளை மறுநாள் அதாவது செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்த போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆதித்யா எல்1 குறித்த முக்கியமான 10 தகவல்களை தான் இங்கே நாம் காண போகிறோம்.
இஸ்ரோ கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான தனது முதல் விண்கலமான ஆதித்யா எல்1 விண்கலத்தை வரும் செப்டம்பர் 2ம் தேதி காலை 11:50 மணிக்கு ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

இந்த ஆதித்யா எல்1 விண்கலம் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி எக்ஸ்எல் ராக்கெட் மூலம் விண்ணிற்கு செலுத்தப்படுகிறது. இந்த ராக்கெட் இந்த விண்கலத்தை லோயர் எர்த் ஆர்பிட் எனப்படும் பகுதி வரை எடுத்துச் செல்கிறது. பின்பு அங்கிருந்து இந்த விண்கலம் சூரியன் அருகே உள்ள எல்1 என்ற பகுதியை நோக்கி தனது பயணத்தை தொடர போகிறது.
இந்த ஆதித்யா எல் 1 விண்கலத்தின் பயணம் மொத்தம் இரண்டு கட்டங்களாக பிரிக்கப்படுகிறது. முதல் கட்டம் பூமியின் புவியீர்ப்பு விசையின் தாக்கம் உள்ள பகுதியிலிருந்து வெளியேறுவது, இரண்டாவது கட்டம் சூரியனைச் சுற்றி உள்ள எல்1 என்ற பகுதிக்கு பயணிப்பது என இரண்டு கட்டங்களாக பிரித்து இந்த பயணம் அமையப்போகிறது.

ஆதித்யா எல் 1 விண்கலம் பூமியிலிருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்டு நான்கு மாத பயணங்களுக்குப் பிறகு இது சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் பயணித்து சூரியனுக்கு அருகே சென்று தனது ஆய்வை நடத்தப்படுகிறது. இந்த விண்கலம் மெதுவாக தான் பயணிக்கும் என்பதால் நான்கு மாதம் வரை கால அவகாசம் எடுத்துக் கொள்கிறது.
இந்த ஆதித்யா எல் 1 விண்கலத்தில் மொத்தம் 7 விதமான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது சூரியனின் போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் மற்றும் கொரோனாவின் வெளி லேயர் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை எல்லாம் ஆதித்யா எல் 1 உடனடியாக பூமிக்கு அனுப்பி இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உதவுகிறது.

மொத்தம் உள்ள 7 கருவிகளில் நான்கு கருவிகள் நேரடியாக சூரியனை உற்று நோக்கி அதன் மூலம் கிடைக்கும் தகவல்களை கணக்கீடு செய்கிறது. மற்ற மூன்று கருவிகள் சூரியனிலிருந்து வெளியேறும் வெப்பம் வெளிச்சம் உள்ளிட்ட பிற கூறுகளை கணக்கீடு செய்து அந்த தகவல்களை சேமித்து அதை பூமிக்கு அனுப்பும் படி திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பா ஆகிய நாடுகள் எல்லாம் சூரியனை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்பி உள்ளன . தற்போது இந்த பட்டியலுக்குள் இந்தியாவும் நுழையப் போகிறது. சூரியனை குறித்த ஆய்வில் நாசா உள்ளிட்ட பல முக்கியமான விண்வெளி ஆய்வு மையங்கள் தற்போது தீவிரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆதித்யா எல் 1 விண்கலம் மூலம் இஸ்ரோ சூரியன் குறித்த மிக துல்லியமான சில தகவல்களையும் மேலும் சூரிய குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து தெளிவான ஒரு பார்வையையும் பெற முடியும் என நம்புகிறது. இதனால் தான் இந்த விண்கலத்தை இஸ்ரோவிற்கு அனுப்புகிறது.
சூரியன் தான் பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் என்பதால் சூரியனை ஆய்வு செய்வதன் மூலம் மற்ற நட்சத்திரங்களின் தன்மை குறித்து அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் பால்வெளியில் உள்ள மற்ற பகுதிகள் குறித்து விஞ்ஞானிகளுக்கு ஓரளவு தகவல்கள் கிடைக்கும். இதை வைத்து மற்ற பல ஆய்வுகளை மேம்படுத்த முடியும் என்பதால் இந்த ஆய்வை இஸ்ரோ செய்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திரயான் 3 வெற்றிக்குப் பிறகு உலகின் மிக முக்கியமான விண்வெளி ஆய்வு மையமாக பார்க்கப்படுகிறது. இது தற்போது ஆதித்யா எல்1 விண்கலத்தை விண்ணிற்கு செலுத்தப் போவதை மற்ற உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன. இது இந்தியா சூரியனுக்கு அனுப்பும் முதல் விண்கலம் தான் என்றாலும், இது குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு உலக மக்கள் இடையே இருக்கிறது.


Click it and Unblock the Notifications









