கார், பைக் இருந்தால் இனி இதுக்கும் நீங்க வரி கட்டணும்.. காச கரி ஆக்காம நடந்து போவதே மேல்!
இந்தியாவில் வாகனங்களுக்கான வரி விதிப்பு முறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. புதிதாக ஒரு வரியை விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் வாகனங்களுக்கான வரி விதிப்பு முறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. புதிதாக ஒரு வரியை விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அமலுக்கு வரவுள்ள அந்த புதிய வரி குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

இந்தியாவில் வாகனங்களுக்கான வரி விதிப்பு முறையில் விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது. சாலை வரி, கலால் வரியுடன் சேர்த்து ஒரு புதிய வரியை விதிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. டெயில்பைப் வெளியிடும் புகையை பொறுத்தும், வாகனங்களுக்கு அதிக வரி விதிப்பது என்பதுதான் அந்த முடிவு.

அதாவது பெரிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசுபாட்டை ஏற்படுத்தும் இன்ஜின்களை கொண்டிருக்கும் வாகனங்களுக்கு அதிக வரி விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வாகனங்களின் விலை அதிகரிக்கும்.

அதே நேரத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வாகனங்களின் விலை குறைவாக இருக்கும். எனவே அவற்றை எளிதாக வாங்க முடியும். இதை உறுதி செய்வதற்காகதான், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்களுக்கு அதிக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய வரி விதிப்பு முறையால், விலை குறைவான மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வாகனங்களை வாங்க மட்டுமே மக்கள் விரும்புவார்கள். இதன்மூலம் வாகன உற்பத்தியாளர்களும் அத்தகைய வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டிய நிலை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக சாலைகளில் வாகன நெரிசலை குறைப்பதற்காகவும் ஒரு அதிரடியான வரி விதிப்பு முறை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு முறையில் இந்தியா வெற்றியும் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது 4 மீட்டருக்கும் அதிகமான கார்களை காட்டிலும், 1.2 லிட்டருக்கு உட்பட்ட பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டருக்கு உட்பட்ட டீசல் இன்ஜினுடன் விற்பனைக்கு வரும் 4 மீட்டருக்கும் குறைவான சப் 4 மீட்டர் கார்களுக்கு குறைவான வரியே விதிக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலமாக கிடைக்கும் பலன்களானது, வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் நிறுவனத்தின் பெரும்பாலான கார்களில் சிறிய இன்ஜின்களை பொருத்தவும், சிறிய கார்களை உருவாக்கவும் வழிவகை செய்தது. சிறிய கார்களானது, சாலையில் குறைவான இடத்தையே அடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வாகனங்கள் வெளியிடும் புகையை பொறுத்து, வரி விதிப்பதற்கு அரசு விரைவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அது சட்டமாக இயற்றப்படும். சுற்றுச்சூழல் மாசுபாடு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதால், அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உலகின் பல்வேறு நாடுகளில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வாகனங்களை தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்கும், அதை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஊக்க தொகைகளும் கூட வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவும் கூட, சுற்றுச்சூழலை அதிகம் மாசுபடுத்தாத எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கு மானியங்களை அதிகமாக வழங்குவது, பல்வேறு சலுகைகளை வழங்குவது தொடர்பான திட்டங்களை கைவசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு அரசு துறை அதிகாரிகளின் பயன்பாட்டிற்கு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வாங்கப்பட்டு வருகின்றன. அதாவது 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஓடும் அனைத்து வாகனங்களும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எலக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.

இதனால் பல்வேறு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களின் கவனம் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் திரும்பியுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தியில் அவர்கள் அதிக அளவிலான பணத்தை முதலீடு செய்ய தொடங்கி விட்டனர்.

ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றாக்குறையால், எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் மக்கள் மத்தியில் தயக்கம் நிலவுகிறது. அந்த தயக்கத்தை போக்கும் விதமாக 3 கிலோ மீட்டருக்கு ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது.

இதுதவிர வாகன உற்பத்தியாளர்களும் கூட, சார்ஜிங் வசதிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








