இதுக்கு அப்புறம் இந்த காரை பலர் வாங்கலாம்... ஆனால் இவர் மட்டும்தான் அந்த புகழுக்கு சொந்தக்காரர்!!
ஃபோக்ஸ்வேகன் (Volkwagen) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பவர்ஃபுல்லான செயல்திறன்மிக்க கார், கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) ஆகும். ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் காருக்கு உலகம் முழுக்கவே ரசிகர்கள் நிறைய பேர் இருக்கும் நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது செயல்திறன்மிக்க கோல்ஃப் ஜிடிஐ கார் ஆகும். இந்தியாவில் வெறும் 150 கோல்ஃப் ஜிடிஐ கார்களை மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், இந்த காரின் டெலிவிரிகளை சமீபத்தில்தான் துவங்கியது. அதாவது, விலையுயர்ந்த ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ கார்களை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் சமீபத்தில்தான் துவங்கப்பட்டன.
கேரளாவில் ஒரே நாளில் சுமார் 25 கோல்ஃப் ஜிடிஐ கார்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டதை பற்றி சமீபத்தில்தான் நமது செய்தித்தளத்தில் பார்த்து இருந்தோம். இந்தியா முழுக்கவே 150 கோல்ஃப் ஜிடிஐ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அவற்றுள் 25 கார்கள் கேரளாவில் மட்டும், அதுவும் ஒரே நாளில் டெலிவிரி செய்யப்பட்டு இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

இந்த 25 கார்களில் பெரும்பாலானவற்றை மலையாள சினிமா திரைப்பட துறையினர் வாங்கியுள்ளதாகவும் அப்போது தெரிவித்து இருந்தோம். இந்த நிலையில், இந்தியாவிலேயே மிகவும் இளம் வயதில் ஒருவர் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரை டெலிவிரி பெற்றுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவரான இந்த இளைஞரின் பெயர், ஆயன் ஜாஸ்நானி (Aayan Jashnani) ஆகும்.
விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்கள் மற்றும் சொகுசு கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவரான ஆயன் ஜாஸ்நானி, இந்தியாவில் சாலைகளில் காட்சித்தரும் லக்சரி கார்கள் தொடர்பான வீடியோக்களையும், படங்களையும் வெளியிடுவதன் மூலம் இன்ஸ்டாகிராமில் சற்று பிரபலமானவராக உள்ளார். இதைவிட முக்கியமானது என்னவென்றால், இவர் அமெரிக்கா நாட்டின் சார்பில் விசைப்படகு போட்டிகளில் கலந்துக் கொள்பவராக உள்ளார்.

கடந்த ஆண்டில் இத்தாலியின் அர்கோ நகரத்தில் நடைபெற்ற விசைப்படகு போட்டியில் அமெரிக்காவுக்காக பங்கேற்றார். இந்த அளவிற்கு பிரபலமானவர் என்பதினாலேயே, மும்பையில் இவருக்கு பிராண்ட்-நியூ கோல்ஃப் ஜிடிஐ காரை டெலிவிரி செய்ததை சம்பந்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டீலர்ஷிப் ஷோரூமே தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் படங்களுடன் பதிவிட்டுள்ளது.
இந்த படங்களின் மூலம் பார்க்கும்போது, கார் ஆர்வலர் ஆயன் ஜாஸ்நானி வாங்கியிருப்பது மூன்ஸ்டோன் கிரே (Moonstone Grey) நிறத்திலான ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ கார் ஆகும். ஷோரூமில் அலங்காரம் செய்யப்பட்டு இருந்த புத்தம் புதிய கோல்ஃப் ஜிடிஐ காரை நண்பர்களுடன் ஷோரூமுக்கு வந்து ஆயன் ஜாஸ்நானி டெலிவிரி பெற்றுள்ளார்.
ஆயன் ஜாஸ்நானி, இந்தியாவிலேயே குறைந்த வயதில் ஃபோக்ஸ்வேகன் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரை டெலிவிரி பெற்றவர் மட்டுமில்லை, மும்பையில் இந்த காரை டெலிவிரி பெற்ற முதல் கஸ்டமர் எனவும் கூறப்படுகிறது. ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது இந்தியாவில் புதிய ஹாட் ஹேட்ச்பேக் காராக அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முழுவதுமாக வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா கொண்டுவருவதினாலேயே கோல்ஃப் ஜிடிஐ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை சற்று அதிகமாக ரூ.52.99 லட்சமாக உள்ளது. பவர்ஃபுல்லான கார் என்பதற்கு ஏற்ப தோற்றத்தில் மூர்க்கத்தனமானதாக காட்சியளிக்கும் கோல்ஃப் ஜிடிஐ காரில் 2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் 7-ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கார்களை விற்பனை செய்ய போராடிவரும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய கோல்ஃப் ஜிடிஐ காருக்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. இதில் இருந்து, உலகளவில் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் கார்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளது என்பதை அறியலாம். இருப்பினும், சுமார் ரூ.53 லட்சம் மதிப்பிலான காரை இவ்வளவு இளம் வயதிலேயே ஆயன் ஜாஸ்நானி வாங்கியிருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications








