டாடா இல்லைனா இது சாத்தியம் இல்ல! விமானத்தில் இளம்பெண் அடைந்த அனுபவம்!!
விஸ்தாரா ஏர்லைன் (Vistara Airline), டாடா க்ரூப் நீண்ட வருடங்களாக கொண்டுவர விரும்பிய விமான சேவை. சற்று அதிக டிக்கெட் கட்டணத்தை கொண்டிருந்தாலும், விஸ்தாரா ஏர்லைன் சேவையில் விமானங்களில் நன்கு சவுகரியமான பயணத்தை பெற முடிகிறது. இதன் காரணமாகவே, எப்போதும் குறைவான டிக்கெட் கட்டணத்தை கொண்ட ஏர்லைன் சேவையை பயன்படுத்தி வருபவர்கள் அவ்வப்போது புதிய முயற்சியாக விஸ்தாரா ஏர்லைன் சேவையை பயன்படுத்த துவங்கியுள்ளனர். அவ்வாறு, வழக்கமாக இண்டிகோ சேவையை பயன்படுத்திவரும் இளம்பெண் ஒருவர் முதல்முறையாக விஸ்தாரா ஏர்லைனை பயன்படுத்திய அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
விமான சேவைகளின் தேவை உலகம் முழுவதிலுமே கடந்த 20 வருடங்களில் மிக பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் மட்டுமே விமான சேவை பரவலாக இருந்த நிலையில், தற்போது உலகின் ஒவ்வொரு மூலைமுடுக்கையும் இணைக்கும் விதத்தில் விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவை பொறுத்தவரையில், நாட்டின் முக்கியமான நகரங்கள் அனைத்திலும் விமான நிலையங்கள் வந்துவிட்டன. உலகளவில் அதிக விமான நிலையங்களை கொண்டுள்ள நாடுகளுள் ஒன்றாக இந்தியா உள்ளது. இதற்கேற்ப நம் நாட்டில் விமான சேவையை வழங்கும் ஏர்லைன் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த வகையில் கடந்த 2015ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட புதிய ஏர்லைன் நிறுவனம் தான் விஸ்தாரா ஆகும்.
டாடா சன்ஸ் க்ரூப்பிற்கு இந்தியாவின் விமான சேவை துறையில் நுழைய வேண்டும் என்கிற விருப்பம் கடந்த பல வருடங்களாக உள்ளது. விமான ஏர்லைனை துவங்க முயற்சித்து டாடா க்ரூப் அதில் தோற்றுப்போன வரலாறை நடிகர் சூர்யாவின் சூரறை போற்று திரைப்படத்தில் கூட கேட்டிருப்பீர்கள். இருப்பினும், டாடா சன்ஸ் தனது முயற்சியை கைவிட்ட பாடில்லை. இந்த முயற்சியில் உருவானதே விஸ்தாரா ஏர்லைன் ஆகும்.
இது முழுக்க முழுக்க டாடா சன்ஸ் க்ரூப்பின் முயற்சியால் மட்டும் நடக்கவில்லை. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் டாடா சன்ஸ் இணைந்து விஸ்தாரா ஏர்லைனை உருவாக்கியது. ஏற்கனவே கூறியதுபோல், சற்று பிரீமியம் தரத்திலான விமான சேவையை வழங்கக்கூடியதாக விஸ்தாரா ஏர்லைன் துவங்கப்பட்டது. இந்த ஏர்லைனில் இருந்து முதல் விமானம் 2015 ஜனவரி 9ஆம் தேதி டெல்லி மற்றும் மும்பை இடையே இயக்கப்பட்டது.
இத்தகைய விமான சேவையை பயன்படுத்திய இளம்பெண் ஒருவர் விஸ்தாராவை பற்றி ஆஹா... ஓஹோ என பாராட்டி உள்ளார். இந்த இளம்பெண்ணின் பெயர் தான்வி ராட் தேசாய். தெற்கு கோவா பகுதியை சேர்ந்தவர். விமானங்களில் அடிக்கடி பறப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பவர். ஆனால், இவர் பெரும்பாலும் பயன்படுத்துவது இண்டிகோ ஆகும். இதற்கு காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும், இண்டிகோ ஏர்லைனில் விமான டிக்கெட் விலை குறைவு.
இண்டிகோவை காட்டிலும் லக்சரியான கேபினை கொண்ட விஸ்தாரா ஏர்லைன் விமானத்தை கண்டு தான்வி ராட் தேசாய் மிகவும் வியப்படைந்து உள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில், "[நான்] முதல்முறையாக விஸ்தாராவில் பறந்தது என் இண்டிகோ மூளைக்கு ஆச்சரியமாக இருந்தது. நல்ல ஆடம்பரமான உட்புறங்கள். மக்காளிய நாங்கள் இதற்கு மேலும் தகுதியானவர்கள்" என தான்வி ராட் தேசாய் விமானத்தினுள் எடுத்த போட்டோ உடன் பதிவிட்டுள்ளார்.
இந்த படத்தில் விமானத்தினுள் ஒவ்வொரு பயணிக்கும் தனித்தனியாக வழங்கப்படும் பொழுதுப்போக்கு திரையையும், பர்பிள் நிறத்தில் ஒளிரும் விளக்குகளையும் பார்க்கலாம். இது தான்வி ராட் தேசாய்க்கு புதுமையான அனுபவமாக இருந்துள்ளது. ஆனால் உண்மையில், விஸ்தாரா ஏர்லைனை தான்வி புக் செய்ய முயற்சிக்கவில்லை; ஏர் இந்தியாவில் தான் டிக்கெட்டை புக் செய்துள்ளார். ஆனால், அது விஸ்தாரா ஏர்லைனுக்கு மாறியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இண்டிகோவின் உள்நாட்டு விமானங்களில் அவற்றின் குறைவான டிக்கெட் விலையினால் பயணிகளுக்கு பொழுதுப்போக்கிற்கான திரைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. விமானத்தினுள் மொபைல் போனை பயன்படுத்த முடியாது என்பதால், இவ்வாறான பொழுதுப்போக்கு திரைகள் அவசியமாகின்றன. அவற்றை விஸ்தாரா ஏர்லைன் விமானத்தில் பார்த்தது தான்வி ராட் தேசாயை கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications








