கூட்டமா இருக்குற டவுண் பஸ் ஆள ஏத்தமா போற மாதிரி விமானத்துலயும் பயணிகளை ஏத்தமா வந்திருக்காங்க! எங்க தெரியுமா?

சென்னை வரவேண்டிய விமானம் ஒன்று பெங்களூருவில் பயணிகளை ஏற்றாமலேயே கிளம்பி சென்னை வந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. இதனால் அந்த விமான நிறுவனம் தங்கள் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு அடுத்த விமான டிக்கெட் புக் செய்து கொடுத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ்-ல் இருந்து சென்னை நோக்கி இண்டிகோ நிறுவனத்தின் விமானம் ஒன்று பறந்து வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் பெங்களூருவில் தரையிறங்கி அங்கு சில பயணிகளை இறக்கிவிட்டு மேலும் பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு வர வேண்டும் என்பது இந்த விமான பயணத்தின் திட்டமாக இருந்தது.

indigo apologizes passenger

இந்நிலையில் அமிர்தசரஸ்-ல் இருந்து கிளம்பிய இந்த விமானம் பெங்களூருவில் வந்து தரையிறங்க காலதாமதம் ஆகிவிட்டது. குறிப்பிட்ட நேரத்தை தாண்டியே பெங்களூருவில் வந்து தரையிறங்கியது. இந்த விமானத்தில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு செல்ல 8 பயணிகள் டிக்கெட்டுகளை புக் செய்திருந்தார்கள். இந்நிலையில் அமிர்தசரஸ்-ல் இருந்து வந்து இறங்கிய விமானத்தில் பெங்களூருவில் இறங்க வேண்டிய பயணிகள் எல்லாம் இறக்கி லக்கேஜ் எல்லாம் விமானத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

ஆனால் பெங்களூருவில் இருந்து சென்னை செல்ல வேண்டிய 8 பயணிகளை, இந்த விமானம் ஏற்ற வில்லை. அதற்கான நேரம் கிடைக்கவில்லை எப்படியாவது இந்த 8 பயணிகளையும் விமானத்தில் ஏற்றி விட வேண்டும் என ஏர்போர்ட் ஊழியர்கள் போராடியும் அந்த 8 பயணிகளையும் அந்நிறுவனத்தால் விமானத்தில் ஏற்ற முடியாமல் போனது. அதற்குள் விமானத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

indigo apologizes passenger

இதனால் அந்த விமானம் அது 8 பயணிகளையும் ஏற்றாமலேயே பெங்களூரில் இருந்து சென்னைக்கு கிளம்பி சென்று விட்டது. இதை எடுத்து அந்த எட்டு பயணிகளிடமும் விமான நிறுவன ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்பு அவர்களுக்கு அடுத்த சென்னை விமானத்தில் டிக்கெட்டுகளை புக் செய்து கொடுத்தனர். மேலும் இரவு நேரம் அவர்கள் தங்குவதற்கான ரூம்களையும் புக்கிங் செய்து கொடுத்தனர். சில பயணிகள் ஏர்போர்ட் லாஞ்ஜிலேயே தங்கிக் கொள்ள சம்மதித்தனர்.

அதன்படி இவர்கள் 8 பேருக்கும் அடுத்தடுத்த விமானங்களில் உள்ள புக் செய்யப்படாத சீட்டுகளை இவர்களுக்கு புக் செய்து கொடுத்து அந்நிறுவனம் இவர்களை சென்னைக்கு அனுப்பி வைத்தது. இந்த சம்பவத்திற்கு நேற்று இண்டிகோ நிறுவனம் அந்த 8 பயணிகளிடமும் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அது விமான நிறுவனத்தின் தவறால் நடந்த விஷயம் எனவும் ஒப்புக் கொண்டுள்ளது.

indigo apologizes passenger

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் " அமிர்தசரஸ்-சென்னை விமானத்தில் பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் 8 பயணிகளை விமானத்தில் ஏற்ற எங்களால் முடியவில்லை . பெங்களூருவில் உள்ள கிரவுண்ட் ஊழியர்கள் இதற்கான பல்வேறு சிரமப்பட்டு பணிகளை ஏற்ற முயற்சி செய்தாலும் போதிய நேரமின்மை காரணமாக இந்த பயணிகளை விமானத்தில் ஏற்ற முடியாமல் போனது" என விளக்கம் அளித்து இருந்தனர்.

பொதுவாக இரண்டு விதமான காரணங்களுக்காக விமானத்தில் டிக்கெட் புக் செய்த பயணி விமானத்தில் போர்டிங் செய்ய முடியாமல் போகும். விமானத்தின் புக்கிங் நடக்கும் போதே தேவையான சீட்டிற்கும் அதிகமான எண்ணிக்கையில் தான் டிக்கெட் புக்கிங் நடக்கும். சிலர் இறுதி நேரத்தில் கேன்சல் செய்வார்கள்.

அப்பொழுது அதை மற்றவர்களுக்கு வழங்கி விடுவார்கள். சில நேரம் கேன்சலேஷன் எதுவும் நடக்கவில்லை என்றால் ஓவர் புக்கிங் செய்யப்பட்டு குறிப்பிட்ட சில பயணிகளை அடுத்த விமானத்திற்கு மாற்றிவிட விமான நிறுவனம் கேட்டுக் கொள்ளும். இப்படியான நேரத்தில் அந்த பையனை குறிப்பிட்ட விமானத்தில் ஏற முடியாமல் போகலாம்.

அல்லது இது போன்ற நடைமுறை சிக்கல்கள் அல்லது நேரமின்மை காரணமாக கூட இப்படியாக விமானத்தில் பயணிகளை ஏற்ற முடியாமல் போக வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த பிரச்சனை காரணமாக பாதிப்புக்கு உள்ளாகும் பயணிகளுக்கு உரிய நஷ்ட ஈடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டியது விமான நிறுவனத்தின் பொறுப்பாகும். அவர்கள் தங்க இடம் மற்றும் உண்ண உணவு ஆகியவற்றை அந்நிறுவனம் வழங்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமான நிறுவனங்கள் எப்பொழுதும் தங்கள் நேரத்தை பின்பற்றினால் இதுபோன்ற எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் குறிப்பாக அமிர்தசரஸ்-ல் இருந்து பெங்களூர் வந்த விமானம் ஏன் தாமதமாக வந்து தரை இறங்கியது என்பதற்கான விளக்கத்தை நிறுவனம் அளிக்கவில்லை. அது தெரிந்தால் தான் இந்த பிரச்சனைக்கான முழு தீர்வையும் நம்மால் சொல்ல முடியும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 22, 2023, 13:46 [IST]
English summary
Indigo apologizes passengers miss chennai flight connection in bengaluru
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X