ஆயிரக்கணக்குல பணம் கட்டி டிக்கெட் எடுத்தும் புழுக்கத்தில் பயணித்த பயணிகள்! விமானத்தில் நடந்த கூத்து!

விமானம் ஒன்று ஏசியே இல்லாமல் சுமார் 1:30 மணி நேரம் வானில் பயணம் மேற்கொண்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. பயணிகள் எல்லாம் வியர்வை சொட்ட சொட்ட இந்த விமானத்தில் பயணித்துள்ளனர். பயணிகளுக்கு வியர்வையை துடைக்க டிஸ்யூ பேப்பர் வழங்கப்பட்டது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பொதுவாக விமானம் என்றால் அந்த விமானம் கிளம்பும் முன்பு கேபின் கதவுகள் அடைக்கப்பட்டு விமானம் பிரஷரைஷ் செய்யப்பட்டு பயணிக்கும். அப்பொழுது பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படக்கூடாது என்பதற்காக அனைத்து விமானங்களிலும் ஏசி பொருத்தப்பட்டிருக்கும். இதனால் பயணிகள் குளுகுளுவென்ற சூழ்நிலையில் பயணம் மேற்கொள்ள முடியும்.

no ac in indigo flight

ஏசி இருந்தால் தான் விமானத்தில் பயணிகள் எந்தவித சங்கடத்தையும் சந்திக்காமல், மூச்சு திணறல் ஏற்படாமல், நிம்மதியான விமான பயணத்தை மேற்கொள்ள முடியும். ஏசி இல்லை என்றால் பயணிகளின் நிலைமை மோசமாகிவிடும். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சண்டிகரிலிருந்து ஜெய்ப்பூர் நோக்கி இண்டிகோ நிறுவனத்தின் விமானம் ஒன்று கிளம்பியுள்ளது.

இந்த விமானத்தில் காங்கிரஸ் பிரமுகர் அமரிந்தர் சிங் ராஜா வாரிங் என்பவர் பயணம் செய்து உள்ளார். இந்த விமானத்தில் பயணிகளை ஏற்றும் முன்பே பயணிகள் விமானம் இருக்கும் இடத்திற்கு கூட்டி செல்லப்பட்டு அங்கு 10 முதல் 15 நிமிடங்கள் நிழலே இல்லாத வெயிலில் காக்க வைக்கப்பட்டுள்ளனர்.

no ac in indigo flight

இப்படி வெயிலில் வியக்க விறுவிறுக்க பயணிகள் காத்துக்கொண்டிருந்தனர். பயணிகள் விமானத்தில் ஏற அனுமதி வழங்கப்பட்டதும் விமானத்திற்கு உள்ளே நுழைந்தனர். விமானத்திற்கு சென்றவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. விமானத்தில் உள்ள ஏசி வேலை செய்யவில்லை. இது குறித்து விமான பணி பெண்களிடம் கேட்டபோது அவர்கள் சற்று பொறுமையாக காத்திருக்கும் படி பயணிகளிடம் சொல்லியுள்ளனர்.

ஆனால் விமானம் டேக் அப் செய்யப்பட்டு தொடர்ந்து 90 நிமிடங்கள் பறந்து ஜெய்பூரில் தரையிறங்கும் வரை விமானத்தின் ஏசி வேலை செய்யவில்லை. விமானத்திற்குள் இருந்த பயணிகள் எல்லாம் அவர்களுக்கு வழங்கப்பட்ட பேப்பர்களை கொண்டு காற்று வீசிக்கொண்டே வந்துள்ளனர். விமானத்திற்குள் அதிகமான புழுக்கம் இருந்தது.

பலருக்கு வேர்வை அதிகமாக இருந்தது. இது குறித்து விமான பணி பெண்களிடம் கேட்டும் அவர்களிடம் சரியான பதில் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த விமானத்தில் பயணித்த காங்கிரஸ் பிரமுகர் இது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு தனக்கு நேர்ந்த இந்த சம்பவம் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் விமானத்திற்குள் இருந்த பயணிகள் எல்லாம் புழுக்கத்தில் கையில் உள்ள பேப்பரை வைத்து காற்று வீசிக் கொண்டிருந்ததை தெளிவாக பார்க்க முடிந்தது. பின்னர் விமான பணி பெண்கள் வியர்வை அதிகம் வந்த பயணிகளுக்கு டிஷ்யூ பேப்பரை வழங்கினார். அதன் மூலம் அவர்கள் வியர்வையை துடைத்து கொள்ளலாம் என்பதற்காக இதை செய்தனர்.

இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. பொதுவாக விமானத்தில் ஏசி வேலை செய்யவில்லை என்றால் அந்த விமானத்தை இயக்குவதே தவறான விஷயமாகும். இந்த விமான பயணம் குறுகிய நேர பயணம் என்பதால் இதில் யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. ஆனால் நீண்ட தூர பயணம் செய்யும் விமானங்கள் இப்படியாக பயணிப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

விமானத்துக்கு உள்ளே ஏசி வேலை செய்யவில்லை என்றால் விமான பயணிகளின் மூச்சுக்காற்றே சுற்றி சுற்றி வரும். இது சுவாச பிரச்சனை இருப்பவர்களுக்கு விரைவிலேயே மூச்சுத் திணறலை ஏற்படுத்தி விடும். இதனால் விமான நிறுவனங்கள் ஏசி வேலை செய்யவில்லை என்றால் அந்த விமானத்தை இயக்குவதையே நிறுத்தி விடுவார்கள் அதற்கு பதிலாக வேறு விமானத்தை இயக்குவார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறிப்பிட்ட இந்த சம்பவத்தில் விமான நிறுவனம் இப்படி இந்த விமானத்தை இயக்க அனுமதித்தது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. விமான நிறுவனத்தின் தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான விளக்கமும் வெளியாகவில்லை. நீங்கள் விமானத்தில் செல்லும்போது இது போன்ற சம்பவம் நடந்தால். இது குறித்து உடனடியாக விமான துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 7, 2023, 12:44 [IST]
English summary
Indigo flight chandigarh to jaipur lacks ac passengers provided tissues to manage perspiration
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+