பணிப்பெண்களாக ஒரே விமானத்தில் தாய் - மகள்!! இண்டிகோ ஏர்லைன் மீது மரியாதை இன்னும் கூடுது...
தாய் மற்றும் மகளை ஒரே விமானத்தில் பணிப்பெண்களாக பணியமர்த்தி இண்டிகோ ஏர்லைன் நிறுவனம் அழகு பார்த்துள்ளது. அன்னையர் தின சிறப்பு நாளில் இந்த விஷயத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ள இண்டிகோ நிறுவனம் சார்பில் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவினை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
தான் பார்த்த வேலையை தன் குழந்தைகளை பார்க்க விடக்கூடாது, அவர்களை அதனை காட்டிலும் சிறப்பான ஓர் வேலையில் அமர்த்த வேண்டும் என்றே எந்தவொரு பெற்றோரும் விரும்புவர். ஆனால், படித்து ஓர் நல்ல வேலையில் இருக்கும் பெற்றோர் தன் குழந்தைகளுக்கும் இதே வேலையை எப்படியாவது பெற்று கொடுத்துவிட வேண்டும் என கனவு காண்பதும் உண்டு.

அத்தகையவர்களில் பெரும்பாலானோரின் கனவு கனவாகவே முடிந்துவிடுகிறது. ஆனால் சிலரோ எப்படியாவது முயன்று இந்த கனவை நிஜமாக்கி விடுகின்றனர். அவ்வாறு தங்களது கனவுகளை நிஜமாக்கிய தாய் மற்றும் மகளை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். சமீபத்தில்தான் கடந்த மே 14ஆம் தேதி அன்னையர் தினம் சென்றது. பலர் தங்களது அம்மாவை பற்றியும், அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பை பற்றியும் இணையம் வாயிலாக வெளிப்படுத்தினர்.
இதனால் அன்றைய தினத்தில் அன்னையர் தினம் குறித்த பல வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிந்தது. அவ்வாறு இண்டிகோ விமான ஏர்லைன் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். இந்த வீடியோவில் இண்டிகோ ஏர்லைனில் பணிப்பெண்களாக பணியாற்றும் தாய் மற்றும் மகளை பற்றி காட்டப்பட்டுள்ளது.
Happy Mother's Day to the one who's always had my back, on the ground and in the air. #HappyMothersDay #goIndiGo #IndiaByIndiGo pic.twitter.com/gHLZBZRmra
— IndiGo (@IndiGo6E) May 14, 2023
நபிரா சேம்ஷி என பெயர் கொண்ட ஓர் இளம்பெண், விமானத்தில் அமர்ந்திருக்கும் பயணிகளிடம் வயர்போன் வழியாக தன்னை அறிமுகப்படுத்தி கொள்கிறார். அத்துடன், அதே விமானத்தில் பணிப்பெண்ணாக யூனிஃபார்ம் அணிந்து பணியாற்றும் தனது அம்மாவையும் அவர்களிடம் அறிமுகப்படுத்துகிறார். மேலும் பேசிய நபிரா சேம்ஷி, தன் அம்மாவை யூனிஃபார்ம் உடன் பணியின்போது இப்போதுதான் முதல்முறையாக பார்ப்பதாக கூறியுள்ளார்.
நபிராவின் தாய் கடந்த 6 வருடங்களாக விமான கேபின் குழுவினராக பணியாற்றி வருகிறார். தன் அம்மா தான் தனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன் என கூறும் நபிரா, "இன்று நான் அவர்களை பெரிமிதம் படுத்தியுள்ளேன் என நம்புகிறேன்" என கண்கலங்க கூறியுள்ளார். மகளின் இந்த வார்த்தைகளை அருகில் நின்று கேட்டு கொண்டிருந்த அவரது தாய்க்கு தானாக ஆனந்த கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது, பார்க்கும் நமக்கும்தான்.

"தரையில் மற்றும் காற்றில் எப்போதும் எங்களுடன் இருப்பவர்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்" என்ற கேப்ஷன் உடன் இண்டிகோ ஏர்லைன் பதிவிட்ட இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் இந்த தாய் மற்றும் மகளுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவிக்க, சிலர் இவர்கள் இருவரையும் ஒரே விமானத்தில் பணியாற்ற அனுமதித்ததற்கு இண்டிகே ஏர்லைனை பாராட்டியுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இவ்வாறான சம்பவங்கள் காலம் காலமாகவே நடைபெறுகின்றன. ஆனால் இணையத்தினாலேயே சமீப காலமாக இவ்வாறான விஷயங்கள் அதிகளவில் நமது கவனத்தில் படுகின்றன. ஆதலால் இதற்கு நாம் இணையத்திற்குதான் நன்றியை சொல்ல வேண்டும். பணிப்பெண்களாக மட்டுமின்றி, விமானிகளாகவும் தாய் மற்றும் மகள் பணியாற்றும் சம்பவங்களையும் இதற்கும்முன் நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம்.


Click it and Unblock the Notifications